Jun 29, 2009

எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்

4 Comments



நிரலாக்கம் ( Programming ) செய்யும் அல்லது வலை வடிவாக்கம் (Web Designing ) செய்யும் நண்பர்களுக்கு ஐகான்களின் தேவை கண்டிப்பாக உண்டு. சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த பயன்பாட்டு கோப்பிலிருந்தும் ( Exe Files ) மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே உள்ள தளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்யுங்கள்.


Icons from File





ஒரு குறிப்பிட்ட கோப்பை இதில் இழுத்து விட்டாலே போதும்.
அல்லது குறிப்பிட்ட போல்டரை தேர்வு செய்தால் அதில் உள்ள
அனைத்து கோப்புகளின் ஐகான்களை பெற்றுத்தரும். பின்னர்
நீங்கள் சேமித்துக்கொள்ளலாம்.

இலவசமாக பெற சில தளங்கள் :

http://www.freeiconsweb.com/


http://www.freeiconsdownload.com/

http://www.bestfreeicons.com/


http://www.iconstick.com/


http://www.icongalore.com/sales/purchase-and-download.php


http://fasticon.com/freeware/

http://www.iconspedia.com/

http://www.icondrawer.com/free.php

http://www.vbforfree.com/?p=363

http://tango.freedesktop.org/Tango_Icon_Gallery

நன்றி !
Read More

Jun 10, 2009

உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா?

11 Comments

நீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.


1. Webby Awards.

இது தான் இணையத்தின் ஆஸ்கார் விருதாகும். இந்த விருதுகள்
வருடத்திற்கு ஒரு முறை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 விருதுகள் தரப்படும். உங்கள் தளத்தையும் அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் விண்ணப்பிக்கலாம்.

2. TechSightings

இந்த தளம் சிறந்த வடிவமைப்பு கொண்ட தளங்களை பல பிரிவுகளில் தேர்வு செய்கிறது.உங்கள் தளம் வென்றால் அவர்களின் பட்டையை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைக்கலாம்.



3. The DailyWebsite
இந்த தளம் புதிய மற்றும் பயனுள்ள கருத்துகளை உடைய
தளங்களை அறிமுகப்படுத்துகிறது.


4. Web Builder


5. Golden Web Award



இந்த விருது வலைப்பக்க வடிவமைத்தோரின் சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.படைப்புத்திறன், முழுமை ( Integrity ) , திறமை போன்றவை அளவிடப்படுகின்றன. இது அவர்களின் இலவச சேவையாகும்.

6. Webmaster Award.


7. The Surfers choice


தரமுள்ள, கருத்துச்செறிந்த வலைத்தளங்களை கண்டறியும் ஒரு
வலை மேடையாகும். ( Web Portal ) . இது உங்கள் தளங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

8. The Golden Crane Creativity Award

இந்த விருது , கலை, அறிவியல், கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல பிரிவுகளில் இலவச தகவல்கள் (Free Tech Support ) தரும் தளங்களைத் தேர்வு செய்து தரப்படுகின்றன.

நன்றி!.

Read More

ஆப்பிளின் வலை உலவி சபாரியின் புதிய பதிப்பு 4.0

2 Comments



இன்று ஆப்பிள் நிறுவனம் தனது வலை உலாவியான சபாரியின்
மேம்படுத்தப்பட்ட 4.0 பதிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய
வலை உலாவிகளுக்கு இடையே நடக்கும் கடும் போட்டிகளை
சமாளிக்கும் விதமாக தனது சபாரியை தந்துள்ளது.

கவர்ச்சிகரமான தோற்றம், எளிமையான விண்டோஸ்க்கு ஏற்ற
வடிவமைப்பு, அதிவேகமான பக்கங்களை திறக்கும் திறன், அதிக
மெனுக்கள், டூல் பார்கள் போன்றவை இல்லாமை கண்களுக்கு
எளிமையாக உள்ளன. இதில் உள்ள Nitro Engine இன் ஜாவா
ஸ்கிரிப்ட் , Internet Explorer ஐ விட 8 மடங்கும் Firefox ஐ விட
4 மடங்கும் வேகமாக செயல்படகூடியதாகும்.

* எளிமையான முகவரிப்பட்டி (Address bar )
* பிரபலமான தளங்களின் பட்டியல்
* செய்திதளங்களின் பட்டியல் ( News panel )
* கூகுளின் தேடு பட்டை
* பார்த்த பக்கங்களின் முழுத்தோற்றம் ( Full page preview )
* மால்வேர் மற்றும் பிஷிங் ( Phishing) பாதுகாப்பு.

இதை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.

http://www.apple.com/safari/download/
Read More

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

6 Comments


ஆப்பிள் நிறுவனம் iPhone - இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.
இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பது
வேகத்தைக் குறிக்கிறது. ( Speed ). முந்தைய அலைபேசிகளின்
விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய ஐபோனின்
விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை 19 ஆம்
தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும்
வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது.

விலை :

iPhone 3GS 16 Gb - 10,000

iPhone 3GS 32 Gb - 15,000

old iphone 3G 8Gb - 5000

இதன் சிறப்புகள் :

* 3 Mega pixel கேமரா
* அதிவேக செயல்திறன்
* வீடியோ பிடித்தல் , எடிட்டிங்
* மேப் காம்பஸ் ( compass in maps )
* Voice Dialling and voice command
* எடை - 135 கிராம்
* 5 மணி நேர பேசும் திறன் ( talk time )
* Cut, copy & Paste செய்யும் வசதி ( டெக்ஸ்ட் , போட்டோ )

Cellular and Wireless:
  • UMTS/HSDPA (850, 1900, 2100 MHz)
  • GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
  • Wi-Fi (802.11b/g)
  • Bluetooth 2.1 + EDR
Location:
  • Assisted GPS
  • Digital compass
  • Wi-Fi
  • Cellular
மேலும் விபரங்களுக்கு ஆப்பிள் வலைத்தளத்தில் பாருங்கள்

http://www.apple.com/iphone/iphone-3g-s/
Read More

Jun 8, 2009

வலைத்தளம் உருவாக்க 30 இலவச மென்பொருள்கள்

10 Comments

(Nvu Web Editor )


HTML அடிப்படை இல்லாமல் வலைப்பக்கங்களை உருவாக்குவது
கொஞ்சம் சிக்கல் தான் . பலர் HTML அடிப்பதற்காக நோட்பேட் ( Notepad ) மென்பொருளை உபயோகிப்ப்பார்கள். ஆனால் அதை விட
சிறந்த மென்பொருள்கள் ( Web Editors ) இலவசமாக பல உள்ளன. இவை முக்கிய வரிகளை ( Syntax ) வண்ணமிட்டுக்காட்டுகின்றன. மேலும் Wysiwyg ( What you see is What you get ) தன்மை கொண்டவை . அதாவது மைக்ரோசாப்ட் வோர்ட் மென்பொருளை பயன்படுத்துவது போன்று உபயோகிக்கலாம். இவற்றில் சில HTML தவிர CSS, XML , PHP போன்றவைக்கும் ஆதரவு தருகின்றன. மேலும் இதோனோடு இணைந்து பல எடுத்துக்காட்டு நிரல்களும் ( Example Codes ) தரப்படுகின்றன.


1. Komodo Edit

இலவச மென்பொருள்களில் முதன்மையானது. ஏனெனில் இது சப்போர்ட் செய்யும் ப்ரோக்ராம் மொழிகள் அதிகம்.
அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும்.

Perl, PHP, Python, Ruby, and Tcl, plus JavaScript, CSS, HTML, and XML, and template languages like RHTML, Template-Toolkit, HTML-Smarty and Django.

2.Amaya

3. Nvu

4.Visicom Media AceHTML Freeware

5.Trellian webPage WYSIWYG HTML editor

6.Web Weaver EZ free WYSIWYG HTML editor

7. Netscape Composer

8. 1 stpage 2000

9. KompoZer - Easy Web Authoring

10. SeaMonkey Composer (Mozilla Composer)

11. Selida

12. Dynamic HTML Editor Free

13. XStandard Lite

14. PageBreeze Free HTML Editor

15. NetObjects Fusion Essentials


Ascii Text Editors


Notetab Light

CodeLobster PHP Edition

HAPedit (HTML ASP PHP Editor)

PSPad

Notepad++

Quanta Plus Web Development Tool

Matrix Y2K Freeware HTML Editor

Bluefish

Html Kit

Arachnophilia

TED Notepad

AkelPad

RJ TextEd

SourceEdit

CUTE User-friendly Text Editor

Open Perl IDE

ConText Editor

Crimson Editor

பயன்படுத்தி பார்த்து வித்தியாசம் உணருங்கள் நண்பர்களே ! நன்றி.
Read More

Jun 4, 2009

உங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க!

21 Comments




சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascript
கோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.

1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.
2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை அடித்து Create Link பட்டனை
கிளிக் செய்து அந்த இணைப்புக்கான முகவரியைத்தரவும்.

எ.கா. About me -> http://ponmalars.blogspot.com/aboutme.html


4. உங்கள் மெனுவில் குறைந்தது 5 தலைப்புகளையும் அதற்கான
இணைப்பையும் கொடுத்து சேமியுங்கள்.

HOME || ABOUT || DOWNLOADS || SITE MAP || DISCLAIMER

5. பின்னர் அந்த நேவிகேசன் பட்டியை ( Navigation bar ) வேண்டிய
இடத்தில பொருத்தவும்.வலைப்பதிவின் தலைப்புக்கு ( Blog Title )
கீழே என்றால் நன்றாக இருக்கும்.




இப்பொழுது உங்களுக்கான நேவிகேசன் பட்டி ( Navigation Menu )
உங்கள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். நன்றி!

---------------------------------------------------------------------------------

என்னுடைய இந்த கட்டுரை யூத் விகடனில் சிறந்த கட்டுரை
பகுதியில் வந்துள்ளது. இதோடு 3 கட்டுரைகள் வந்துவிட்டன.
ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும்
நன்றி.
மற்ற கட்டுரைகள் :

1. Autorun வைரஸ் நீக்கும் மென்பொருள்

2. கூகுளின் புதிய வசதி : வலைப்பக்கத்தில் தமிழில் அடிக்கலாம்


Read More