Aug 31, 2009

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்


பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster

தரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/

2.Cd Recovery Tool box



தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

3. CDCheck

தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/download.php

நன்றி!

Aug 26, 2009

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser


தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download

2.Kill Disk

தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/
நன்றி வணக்கம் !

தொடர்புடைய பதிவு :
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

Aug 20, 2009

கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

கணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ?

டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?

கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,

Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்

இவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.

Double Driver


நீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.

இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.

நன்மைகள் :

1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.
2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
3. இலவச மென்பொருள்.
4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.

Aug 17, 2009

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். நன்றி!

Aug 13, 2009

பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2



1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.
பணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.

2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு
எண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.

3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்
ஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading
கணக்கிலேயே இருக்கும்.

4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்
போதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை
வாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.
இவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.
குறைந்த அளவு தான் இருக்கும்.

5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்
உங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா
என்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.

http://www.cdslindia.com/publication/dplist.jsp

6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்
வசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்
நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

State Bank of India Demat :http://demat.sbi.co.in/index.jsp
Icici Direct : http://www.icicidirect.com/

பங்குசந்தையின் சில நுட்பங்கள் :

1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO
( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,
ஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லது ஒரே பங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து
முதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங்களுக்கு
சோதனை வராது.

5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்
தான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா ? இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல
லாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.

எப்படி என்று பார்ப்போம் .

உதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா? வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்கு 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு
500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.

நீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.

6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்
நீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .
இவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.

Mutual Fund பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள் :

1. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள்
- 1
2. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே! நன்றி.

Aug 7, 2009

பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1



பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்
எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்
பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்
கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு
எழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்
என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
:

முதலில்
செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது
புரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட
முடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்
பேசியோ கற்றுக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான
நடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன் உள்ளது. இந்த
தளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
http://pangusanthai.com/


எனக்கு
தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய "அள்ள அள்ளப்பணம் " என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடிய சொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால் மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.

இந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :
http://thoughtsintamil.blogspot.com/2005/01/blog-post_04.html

இந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க : http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html

2. Pan card பெறுதல் :

PAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

அடுத்தது
நீங்கள் PAN Card ( Permanent Account Number ) வருமான வரி எண்
அட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.

தேவையான சான்றுகள் :

1. ஒரு 2.5 width X 3.5 height inch புகைப்படம்
2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )
3. உங்கள் புகைப்படம் உள்ள சான்று ( Voter Identity or Driving license )



இதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.
https://tin.tin.nsdl.com/pan/index.html

இந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு "NSDL - PAN" என்ற பெயருக்கு Demand draft அல்லது
Cheque எடுத்து கொள்ளவும்.


3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )
கணக்கு
தொடங்குதல் :

டீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

நமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.

உங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
இங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.

Trading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.
Demat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.

இதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது
உங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்
Power of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்
விற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.

தேவையான சான்றுகள் :

1. Pan card
2. Ration card
3. Bank Passbook

அடுத்த பாகத்தில் மீண்டும் தொடர்கிறேன்.பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் . நன்றி.


தொடர்புடைய பதிவு :

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்