Aug 27, 2010

gif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்பது எப்படி?


பல ஒளிப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு நகரும் படம் ( Animation image) உருவாக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த படங்களினால் உருவாகும் நகர்படங்கள் கண்ணுக்கு உறுத்தாத வகையில் நமக்கு காட்சியளிக்கும். ஒரு gif கோப்பில் பல பிரேம்கள் (Frames) இருக்கும்.

இப்போது நமக்கு நகர்படத்தில் இருக்கும் ஒரே ஒரு பிரேம் மட்டும் அல்லது ஒரே ஒரு நிலையான படம் மட்டும் வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்கும் சில வழிகள் உள்ளன. ஆனால் GifSplitter என்ற மென்பொருள் கொண்டு எளிதான வகையில் ஒளிப்படங்களை சேமிக்கலாம்.
இந்த மென்பொருள் நமக்கு தேவையான நகர்படத்தை கொடுத்தால் அதிலிருக்கும் பல பிரேம்களை பிரித்து எடுத்து காட்டுகிறது.நமக்கு தேவையான பிரேம்களை அல்லது படத்தை தேர்வு செய்து சேமிக்க வேண்டிய போல்டரை தேர்வு செய்தால் போதும்.

இது இலவசமானது மற்றும் அளவில் சிறியது. விரைவாகவும் செய்யல்படக்கூடியது.
தரவிறக்கச்சுட்டி:Download GifSplitter
நன்றி!

2 comments:

  1. நல்ல பதிவு! தொடருங்கள் தொழில்நுட்ப பதிவுகளுடன்.

    ReplyDelete
  2. ஜிஃப் பற்றி நிறைய எழுதுங்கள் குறைவாகத்தான் இணையத்தில் கிடைக்கின்றன

    ReplyDelete