Dec 11, 2010

விண்டோஸ் 7 ல் Default Speaker பிரச்சினைகள்.


விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.


தோழியின் விண்டோஸ் 7 நிறுவப்பட்ட லேப்டாப்பில் சவுண்டே வரவில்லை என்று புலம்பினாள். நானும் ஒலியின் அளவை சோதித்தேன். நிறைவாகத்தான் இருந்தது. சரி என்று ஒரு படத்தை ஓடவிட்டுப்பார்த்தால் எந்த சவுண்டும் வரவில்லை. கணிணியை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்றால் அதுவும் சரியாகவில்லை. அப்போது தான் volume பட்டனை கிளிக் செய்த போது Playback devices என்ற விசயத்தைக் கவனித்தேன்.


விண்டோஸ் 7 ல் இயல்பான ஒலிபெருக்கி ( Default speaker ) என்ற அமைப்பு உள்ளது. அதாவது நாம் லேப்டாப்பில் இணைக்கப்படும் ஒலிபெருக்கிகள், ஹெட்போன்கள் போன்றவற்றை Playback devices பகுதியில் சேர்த்துக்கொள்கிறது. நீங்கள் தற்போதைக்கு ஹெட்போனில் பாட்டு கேட்க விரும்புகிறிர்கள். அதனால் ஹெட்போன் இயல்பான ஒலிபெருக்கியாக (Default speaker) கணிப்பொறியில் அமைந்து விடுகிறது.

அடுத்தமுறை ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்க விரும்பி பாட்டைப்போட்டால் நிச்சயமாக பாடாது. ஏனெனில் இன்னமும் ஹெட்போன் தான் உங்களது இயல்பான ஒலிபெருக்கியாக இருக்கும். அதனால் என்ன செய்ய வேண்டும்?



Volume பட்டன் கணினியில் டாஸ்க்பாரில் வலது ஒரத்தில் இருக்கும். அதை வலது கிளிக் செய்து Playback devices என்பதை தேர்வு செய்யவும். அங்கே இணைக்கப்பட்ட கருவிகளின் பட்டியல் தெரியும். எது இயல்பான ஒலிபெருக்கியோ அதில் பச்சைக் குறியீடு இருக்கும்.


மாற்ற வேண்டுமெனில் எதை மாற்றுகிறிர்களோ அதில் வலது கிளிக் செய்து Set Default Device என்பதை கிளிக் செய்தால் போதும்.

நன்றி.

5 comments:

  1. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...

    தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  2. ரொம்ப பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. வழங்கியவர் http://jiyathonline.blogspot.com

    ReplyDelete
  3. எதேச்சையாய் அறிந்த விஷயங்களை கூட எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பதிவிடுகிறீர்கள்.. ! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..! பொன்மலர் அவர்களே..! தொடருங்கள்..!

    ReplyDelete
  4. Thank you di... சில டைம் ஹெட்போன் மாட்டினா கூட லாப்டாப்ல இருந்து தான் பாட்டு வரும்...ஒரே குழப்பமா இருந்தது. இப்போ அது சரி ஆகிடுச்சு :-)

    U r giving very much useful info in ur blog dear.. Keep it up.

    ReplyDelete
  5. Thanks subathra , Manavan, Jiyath and Thangampalani

    ReplyDelete