Jan 5, 2011

Divx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக


Divx என்றால் என்ன?


Divx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.

Divx மென்பொருள் தொகுப்பில் கீழ்க்கண்ட மென்பொருள்கள் அடங்கியுள்ளன.

1. DivX plus player
2. DivX plus Converter
3. DivX plus Codec
4. DivX Web Player.

Divx player – Divx, avi, mp4,wmv,mkv போன்ற முக்கிய வீடியோ வகைகள் அனைத்தையும் இயக்க முடியும்.

Divx converter – இதன் மூலம் எந்த வீடியோ வகைகளிலிருந்தும் divx வடிவத்திற்கு
மாற்றிக்கொள்ளலாம்.

Divx codec – கணிணியில் divx வகையிலான வீடியோ படங்களை இயக்குவதற்கு
உதவும் நிரலாகும்.

Divx web player – IE, Firefox போன்ற உலவிகளில் பயன்படும் ஒரு நீட்சியைப்போன்றது. இதன் மூலம் வெப் சர்வர்களில் வைக்கப்பட்டுள்ள படங்களை தெளிவாக காண முடியும்.

நம்மால் இதன் இலவச மென்பொருள் தொகுப்பு மட்டுமே சாதாரணமாக தரவிறக்க முடியும். தற்போது ஆன்லைனில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை விற்பனை செய்யும் NewEgg நிறுவனத்தால் 20 டாலர் மதிப்புள்ள Divx plus Pro 8 ஐ இலவசமாக தரவிறக்க அனுமதித்துள்ளது.

தரவிறக்க முகவரி:http://promotions.newegg.com/Software/110410divx/install.html

**************************************************************

உன்னைப் பார்க்காமல்
என் சூரியன் உதிப்பதில்லை.
உன்னை அணைக்காமல்
நான் உறங்கியதில்லை.
உன்னை நினைக்காமல்
நான் இருந்ததில்லை.
உன் அருகாமையின்றி
என் செயலுமில்லை.
உடைந்தது நீ மட்டுமில்லை.
உள்மனமும் தான்.
சிதறிய உன்னை ஒன்றாக்கிய பின்னரே
பதறாது என் நெஞ்சம்.


என்னுடைய லேப்டாப் சரியாக புத்தாண்டு பிறந்த நேரம் 12.10 க்கு உடைந்து
சிதறியது. இருட்டில் வயரை மிதித்து கீழே விழுந்து LCD நொறுங்கிவிட்டது.
இன்று தான் 7000 ருபாய் கட்டி சரிசெய்து வாங்கினேன். அப்போது உதித்த வரிகள் தான் மேலெ கண்டவை.

7 comments:

  1. Ha Ha Ha... கலக்கல் கவிதை :-)

    Almost all r loving their laptops more than anyone/anything else I think :-)

    Thank you for Divx Player and Convertor softwares link di.. Always u rock!

    Wishes to u.

    ReplyDelete
  2. கவிதையை கலக்கல் என்று சொன்ன சுபத்ராவிற்கு நன்றி. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழியே.

    ReplyDelete
  3. Divx Pro நல்ல அறிமுகம் . பகிர்வுக்கு நன்றி.
    லேப் டாப் வைத்துள்ளவர்களின் காதல் நெஞ்சத்தை கவிதையாய் சொனது சுவையானது.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலா இருக்கும்னு நினைக்கிறேன், [பாத்துட்டு சொல்றேன். ஹி...ஹி...ஹி...]. நன்றி பாஸ். அப்புறம் இன்னொரு தகவல் தேவைப் படுத்து, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. இப்போ ஒரு படம் அட்டகாசமான தரத்தில் You Tube- ல் கிடைச்சுது. முதலில் அதை .flv வடிவத்தில் தரவிறக்கம் செய்தேன். அதை ஒரு கன்வெர்ட்டர் மூலம் .avi வடிவத்திற்கு மாற்றினேன். அதை அப்படியே ஒரு Pen Drive -ல் போட்டு DVD player - ல் போட்டால் ஓடுகிறது. ஆனா DVD -ல பதிந்து அதே DVD player - ல் போட்டால் ஓட மாட்டேன்கிறது. நீங்கள் இப்போது கொடுத்துள்ள பிளேயர் மூலம் Divx வடிவத்திற்கு மாற்றினால் இயங்குமா? இது குறித்து தங்களுக்கு ஏதேனும் விவரம் தர இயலுமா? [அந்த படம் எது என்று கேட்கிறீர்களா? Bi Centennial Man, Astro Boy மற்றும் ஒரு சில தமிழ் எழுத்தாளர்கள் கதைகளைத் திருடி தமிழில் எடுக்கப் பட்ட படம் ஹி...ஹி...ஹி.... ].

    ReplyDelete
  5. I am already using this software... But I am not able to play the video.. Only the sound is coming.. But converter is working fine..

    ReplyDelete
  6. பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றிங்க..

    கணினிக்கவிதை அருமை

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  7. நான் நேத்து அந்தப் படத்தை Divx -க்கு இந்த மென்பொருள் கொண்டு மாற்றினேன், இப்போது DVD -ல் பதிந்து இயக்கினாலும் இயங்குகிறது, தகவலுக்கு நன்றி. இன்னொரு விஷயம், உங்களுக்கு லேப் டாப் மீதுள்ள அபரீதமான காதல் புரிகிறது, தயவு செய்து அதை மடி மீது வைத்து இயக்க வேண்டாம், மேஜை மீதோ, உடலில் இருந்து சற்று தள்ளியோ வைத்து இயக்கவும். [கல்யாணமாகவில்லை என்றால் இது மிகவும் முக்கியம், அப்புறம் சேலத்து வைத்தியர் கன்னா பின்னா வென்று திட்ட ஆரம்பித்துவிடுவார்.!]

    ReplyDelete