Jan 8, 2011

கூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)


கூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

Priority Inbox ஐ செயல்படுத்த Gmail Settings -> Priority inbox செல்லவும்.
அதில் Show Priority Inbox என்பதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் நமது ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்கள் மூன்று வகையாக
பிரிக்கப்படுகின்றன.


Important - இப்பகுதியில் நாம் முக்கியம் எனக்குறிப்பிடுகிற மின்னஞ்சல்கள் இருக்கும்
Starred - இப்பகுதியில் நாம் நட்சத்திரமிட்ட மின்னஞ்சல்களின் பட்டியல் இருக்கும்
Everything else - முக்கியமற்ற மற்றும் மீதமுள்ள அனைத்து மின்னஞ்சல்களும் இருக்கும்.

Priority inbox செயல்படும் விதம்

இந்த சேவை புத்திசாலித்தனமாக செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
1.நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Send mails)
2.நாம் குறிப்பிட்டு படிக்கும் மின்னஞ்சல்கள், (Read messages)
3.நாம் பதில் அனுப்பும் மின்னஞ்சல்கள், (Reply messages)
4.எந்த மாதிரி தலைப்பில் அமைந்த மின்னஞ்சல்களை படிக்கிறோம், (keywords)
5.யாருடைய மின்னஞ்சல்களுக்கு குறியீடு கொடுக்கிறோம் (Starred mails)

போன்றவற்றை வைத்து தானாகவே யாருடைய மின்னஞ்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை தீர்மானித்து கொள்கிறது.

மேலும் ஒரு வசதி என்னவென்றால் ஜிமெயில் தவறாக சில மின்னஞ்சல்களை முக்கியம் என எடுத்துக்கொண்டால் நாம் அதை மாற்றிக்கொள்ளலாம். உங்கள் இன்பாக்ஸிற்கு மேலே மஞ்சள் நிறத்தில் + குறியீடும் , - குறியீடும் இருக்கும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மின்னஞ்சல்களை தேர்வு செய்து + பட்டனை கிளிக் செய்தால் முக்கியமானதாகி விடும். - குறியீடை அழுத்தினால் முக்கியத்துவம் அற்றதாகிவிடும்.


மேலும் மின்னஞ்சலின் அருகில் உள்ள நட்சத்திரக் குறியீடை கிளிக் செய்தால் அவர்களும் தனியாக Starred என்ற பகுதியில் வந்துவிடுவார்கள். படிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

2 comments:

  1. Thank You dii... As usual very nice. Useful information.

    இருக்கும் சலுகைகளைக் கூட பயன்படுத்தாமல் இருக்கிறோம். நல்ல பகிர்வு. நன்றி. இப்பொழுதே நான் செயல்படுத்திப் பார்க்கிறேன்..

    ReplyDelete