Mar 26, 2011

CDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்கு மாறுவது எப்படி?

மொபைல் போன் தொழில்நுட்பத்தில் GSM மற்றும் CDMA வகைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. CDMA வகையிலான போன்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டைத் தான் பயன்படுத்த முடியும். Reliance மற்றும் Tata Indicom நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. GSM வகையிலான போன்களில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது நாட்டில் ஒரே மொபைல் எண்ணை வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்தின் சேவைக்கும் மாறிக் கொள்ளும் வசதி (Mobile Number Portablity) அறிமுகப்படுத்தப் பட்டவுடன் பலர் தங்களது பிடித்தமான நிறுவன சேவைக்கு மாறியுள்ளனர்.

ஆனால் CDMA வகையிலான போன்களை வைத்திருப்பவர்களுக்கு அந்த மொபைல் எண் பிடித்துப்போய் வைத்திருப்பர். அந்த மொபைல் எண்ணை GSM வகை சேவைக்கு மாற்றிக் கொள்ள முடிந்தால் எந்தவொரு போனிலும் பயன்படுத்த முடியும். பிடித்தமான வேறு நிறுவனங்களுக்கும் மாறிக்கொள்ள முடியும் என நினைப்பார்கள்.


மாறுவதற்கான வழிமுறைகள் :

1. உங்கள் மொபைல் போனில் PORT <மொபைல் எண்> என்று பெரிய எழுத்துகளில் குறுந்தகவல் தட்டச்சிட்டு 1900 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
(எ.கா) PORT 9842012345
2.பின்னர் உங்களுக்கான Unique porting code உங்கள் மொபைலுக்கு கிடைக்கப் பெறும்.
3. அடுத்து நீங்கள் எந்த நிறுவனத்திற்கு மாற விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்தின் எதாவது ஒரு Retailer கடைக்குச் சென்று மாறுவதற்கான விண்ணப்பத்தை வாங்கி உங்களுக்கு வந்த UPC எண்ணைக் குறிப்பிட்டு நிரப்பவும். இதற்குத் தேவையான சான்றுகள் ( முகவரி சான்று, அடையாளச்சான்று, புகைப்படம் ஒன்று)
4. இவை முடிந்த பிறகு உங்களுக்கு புதிய GSM சிம் வழங்கப்படும்.
5. நீங்கள் புதியதாக மாறிய நிறுவனத்திலிருந்து பழைய மொபைலுக்கு குறுந்தகவல் அனுப்பப் படும். எந்த தேதியிலிருந்து நீங்கள் புதிய் சிம்மை பயன்படுத்தமுடியும் என்ற தகவல் அதில் இருக்கும். அந்த குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் உங்களுக்குப் பிடித்த எண்ணிலேயே GSM சேவையைத் தொடர முடியும்.

முக்கிய குறிப்புகள் :

இதற்கு கட்டணமாக ருபாய் 19 வசுலிக்கப்படும். புதிய சிம் ஆக்டிவேட் செய்யப்பட அதிகபட்சம் ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழிமுறைகள் இந்தியாவில் உள்ள Reliance மற்றும் Tata Indicom நிறுவனங்களின் CDMA வகை மொபைல் போன்களுக்குப் பொருந்தும்.

இதற்கு முன்னர் எழுதிய பயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க/மீட்க MozBackup கட்டுரையானது இண்ட்லியில் பதியப்பட்டாலும் இண்ட்லியின் எந்தப் பிரிவிலும் தோன்றவில்லை. இண்ட்லியில் என்னுடைய பக்கத்திலும் காணவில்லை. காரணம் என்னவென்று புரியவில்லை.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல். MTSசிலிருந்து வேறொரு சேவைக்கு மாற வாய்ப்பிருக்கிறதா?

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள தகவல்.

    ReplyDelete