May 25, 2011

உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய


வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை.

காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.

நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.

1.Copyscape

இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.



2. Duplichecker

இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.

3. Plagiarisma

இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.

4. Plagium

இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.

எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

”எதாவது செய்யனும் சார்!”

9 comments:

  1. காப்பியடிப்பது என்பது தேசிய உரிமை என நினைத்துவிட்டார்களோ என்னவோ?

    நான் tech.amazingonly.com ல் மிகக் குறைந்த பதிவுகளே எழுதினேன். ஆனால் ஒவ்வொரு பதிவும் குறைந்தது 5 முதல் 8 தளங்களில் காப்பியடிக்கப்பட்டிருந்தது. வெறுத்துப் போய் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.

    ஏதாவது செய்யனும் சார்? --- எழுதுவதை நான் நிறுத்திட்டேன். இது நெகட்டிவ் சிந்தனையாகவே இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். நான் எழுதுவதை படித்த அந்த நான்கு உள்ளங்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    நானே!

    ReplyDelete
  2. எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் நெஞ்சங்கள் எங்கே போகும்?
    காப்பியடிப்பவர்களுக்கு பாஸிடிவ் சிந்தனை வந்தால் சரி.
    தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம் சார்.

    ReplyDelete
  3. இந்த தளங்களில் சிலவற்றை நான் அறிந்துள்ளேன் 3 வது தளம் இப்போது உங்கள் மூலம் அறிய பெற்றுள்ளேன் பகிர்வுக்கு நன்றி
    எங்களுடைய பதிவுகள் எங்க இருக்கு ஏன்னு கண்டுபிடிச்சி என்ன பயன் திருடன பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
    நானும் இப்போது புதிதாக வலைத்தளத்தில் எழுதிவருகிறேன் என்னுடைய பல பதிவுகள் காப்பி செய்யப்பட்டு பதிவிடப்படுகின்றன எங்கள் தள முகவரி குறிப்பிடபடுவதுமில்லை

    ReplyDelete
  4. பதிவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள தகவல்தான் .நன்றி!

    ReplyDelete
  5. காப்பியடிப்பவர்களுக்கு பாஸிடிவ் சிந்தனை வந்தால் சரி.

    ReplyDelete
  6. @சார்வாகன்,
    மகன் தமேஷ்
    கூடல் பாலா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ராஜராஜேஸ்வரி நன்றி மேடம்.

    ReplyDelete
  7. நானே ஆடிக்கொரு தரம், அம்மாவாசைக்கு ஒருதரம் போஸ்ட் போடுறேன்.. அதுவும் ஆஹா ஓஹோன்னு எல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.இப்ப சும்மா பாத்தா என்னோட ஒரு கவிதைய சுட்டிருக்காங்க. அட இதென்ன கொடுமை !!

    தகவலுக்கு நன்றிங்க பொன்மலர்.

    ReplyDelete
  8. ரஜினி ஜாதகம்னு ஒரு பதிவு போட்டேன்..கிட்டத்தட்ட 15 இணையதளங்கள் காப்பி அடித்துவிட்டன..இப்போது கூகிளில் என் பதிவையே காணவில்லை,...இதை தடுக்க ஒரு ஐடியா சொல்லுங்கப்பா

    ReplyDelete