May 28, 2011

யூனிக்ஸ் இயங்குதளம் போன்ற கூகிள் தேடல் தளம் Goosh


unix like google site goosh.orgகூகிளின் தேடல் தளம் தான் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இணையத்தில் நுழைந்ததும் கூகிளில் தான் முழிப்பார்கள். எந்த விசயமானாலும் அள்ளித்தரும் கூகிளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் கூகிளின் தேடல் தளத்தையே வித்தியாசமான முறையில் ஒருவர் அமைத்திருக்கிறார். கூகிளின் தேடல் நிரல்களைக் கொண்டு புதிய முறையில் உருவாக்கிய அவரின் பெயர் ஸ்டீபன். யூனிக்ஸில் கூகிள் தேடலைப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு தளத்தை உருவாக்கியிருக்கிறார்.

யூனிக்ஸ் (Unix OS) தெரியுமா உங்களுக்கு? உலகின் முன்னோடியாக இருந்த இயங்குதளம். இப்போது பலவிதங்களில் வந்து கொண்டிருக்கும் லினக்ஸ் பதிப்புகளின் ஆதாரம் யூனிக்ஸ் இயங்குதளமாகும். லினக்ஸை வடிவமைத்த லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) யூனிக்ஸின் முக்கிய நிரல்களைக் கொண்டு தான் லினக்ஸை உருவாக்கினார். யூனிக்ஸில் எல்லாமே தட்டச்சிடுகிற கட்டளைகளைக் (Input commands) கொண்டு தான் வேலையே செய்ய முடியும்.

கட்டளைகள் மூலம் யூனிக்ஸ் இயங்குதளத்தில் வேலை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி கூகிள் தேடலை Goosh.org என்ற இணையதளமாக உருவாக்கியுள்ளார். கூகிளின் இடைமுகம் (Google Interface) யூனிக்ஸில் உள்ளதைப் போல இருக்கிறது. நீங்கள் தேட வேண்டிய தகவலை இத்தளத்தில் யூனிக்ஸ் கமாண்ட் போல அடிக்க வேண்டும். பிறகு 5 முடிவுகள் மட்டும் காட்டப்படும். மேலும் அதிக தகவல்கள் வேண்டுமெனில் m அல்லது more என்ற கட்டளையை அடிக்க வேண்டும்.
இணையதள முகவரி : http://goosh.org

unix like google site goosh.org
மேலும் உதவிக்கு h அல்லது help என்று அடித்தால் இத்தளத்தில் பயன்படுத்தக் கூடிய கமாண்டுகளின் பட்டியல் விவரம் தெரியும். பயன்படுத்திப் பார்த்தால் உங்களுக்கு அந்தக் கால நினைவுகள் வரும்.

இவரின் தளம் கூகிளின் மூலநிரல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. ஆனால் கூகிளுக்கும் இவரின் தளத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இத்தளம் திறந்த மூலநிரல் (Open Source) அடிப்படையில் இதனுடைய நிரல்களை வழங்குகிறது. இதனை கீழுள்ள முகவரியில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://code.google.com/p/goosh/

1 comment:

  1. வாவ் அருமையான தளம்.. ரொம்ப நன்றி..

    ReplyDelete