Jun 10, 2011

பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.

Blogger Mobile Templates Introduced
ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு தனியாக பிளாக்கர் டிராப்ட் தளத்தில் போய் செய்ய வேண்டியிருந்தது. தற்போது பிளாக்கர் தளத்திலேயே செய்து கொள்ளும் படியாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதைச் செய்ய Blogger Settings-> Email and Mobile Templates என்பதில் சென்று Yes.On Mobile devices என்பதைக் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம். பக்கத்திலேயே இருக்கும் Preview பட்டனைக் கிளிக் செய்து உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி காட்சியளிக்கும் என்றும் பார்த்துக் கொள்ளலாம். இதில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

1. இனிமேல் மொபைலில் இருந்து யாரேனும் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் நேரடியாக வலைப்பூவின் மொபைல் பதிப்புக்கு கொண்டு செல்லப்படும். தேவைப்பட்டால் முழுதும் பார்க்க Standard web version ஐ மொபைலில் பார்த்துக் கொள்ளலாம்

2. இந்த மொபைல் பதிப்பில் பிளாக்கரின் 27 வகையான டெம்ப்ளேட்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. நீங்கள் தற்போது எந்த வகையான டெம்ப்ளேட் பயன்படுத்தினாலும் அதனைப் பொதுவான முறையில் காண்பித்து விடும். ஆனால் Blogger Layout Template களைப் பயன்படுத்தி வந்தால் அதே தோற்றத்தில் பார்க்க முடியும்.


Actress Priya Anand hot photos in hotmoviepics.co.cc
3. இதில் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பார்ப்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் வழியிலும் வருமானம் வரக்கூடும். ஆனால் பதிவுகள் இருக்கும் மேல் பகுதியிலும் முகப்புப் பக்கத்தின் அடியிலும் மட்டுமே காட்டப்படும். அதாவது நீங்கள் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் வைத்திருந்தால் காட்டப்படும்.

4. மொபைல் மூலம் பதிவின் கருத்துரைகளைப் (Comments) படிக்க முடியும். புதிய கருத்துரைகளைச் சேர்க்க முடியும். இனி அவசரத்திற்கு மொபைலிலேயே கருத்துகளை இட்டுக்கொள்ளலாம்.

5. பதிவுகளில் வீடியோ எதேனும் இணைத்திருந்தால் அதனையும் நமது வலைப்பூவிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். (Video Supporting)

இதைப்போல இந்த வருடத்தில் புதுமையான மாற்றங்களை பிளாக்கரில் கொண்டு வரப்போகிறது கூகிள். தயாராக இருங்கள்.

7 comments:

  1. சரியான நேரத்தில் இடப்பட்ட பயனுள்ள பதிவு பொன்மலர், தமிழில் கூகிள் ஆட்சென்ஸ் ஐப் பற்றி ஒரு ஆழமான பதிவு கிடைக்கவில்லை, உங்களுக்கு சம காலத்தில் அதாவது கூகிள் தனது விதிகளை இறுக்கிய பிறகு ஆட்சென்ஸ் கணக்கு கிடைத்திருந்தால், அந்த வழிமுறைகளை ஒரு பதிவாக இடுங்கள் என்னைப்போன்ற இளைய தமிழ்ப் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

    ReplyDelete
  2. நான் செட் பண்ணிட்டேன் .நன்றி !

    ReplyDelete
  3. நல்ல பதிவு. எனது பதிவுக்கு முயற்சி செய்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு எழுதறீங்க..நானும் அப்படித்தான். ஒரு வேளை ஒரு ஊரைச் சேர்ந்த்வங்களெல்லாம்
    இப்படித்தான் இருப்பாங்களோ??நானும் கரூர் காரன் தான்

    ReplyDelete
  5. Thanks செந்திலன், குணசேகரன்,Rathnavel, koodal bala

    ReplyDelete
  6. பிளாக்கில் கீழே அடிப்பகுதியின் ஓரத்தில் (ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டும்) விளரம்பரம் வர என்ன செய்ய வேண்டும்? அதற்கான கோடிங்கை தருவீர்களா? நான் சொல்வது போன்ற விளம்பரம் http://www.vandhemadharam.com/ இடம்பெறுகிறது. அதைப்பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியும்
    this my email id
    gingeeindian@gmail.com

    ReplyDelete