Jun 7, 2011

சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter


நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.

இணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த மென்பொருள் மூலம் avi, mpeg, wmv, asf போன்ற வீடியோ கோப்புகளை பல பாகங்களாகப் பிரிக்கலாம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிளாஷ் டிரைவ், சிடி/டிவிடி போன்றவற்றின் அளவுக்கு வருகிற மாதிரியும் வெட்ட முடியும். இல்லை 100 Mb என்று கோப்பின் அளவு வைத்து விட்டால் பெரிய கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்து விடும்.
இதில் படத்தைத் தேர்வு செய்யும் முறை மற்றவற்றை விட எளிதாக இருக்கிறது. இதன் ஸ்லைடர் அமைப்பு எளிதாக தேவைப்படும் வீடியோவினை மட்டும் நகர்த்தி தேர்வு செய்து கொள்கிற மாதிரி இருக்கிறது. இதன் முக்கியமான விசயம் என்னவென்றால் வேகமாகவும் தரமான குவாலிட்டியுடன் வீடியோவினைப் பிரித்து தருகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://download.geovid.com/vidsplitter.exe

9 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!
    இவற்றுடன் எந்த வைரசும் வராது என நம்பலாமா? , சில இலவச மென்பொருள்களுடன் , நான் பல வைரஸ்களைப் பெற்று, அல்லாடி விட்டேன்.
    இது எனக்குத் தேவையானது ஆனால் வைரசை நினைக்க பயமாக உள்ளது. சில மென்பொருள்களுடன் வரும் வைரஸ்கள், அன்ரிவைரசுக்கே அசருவதாகவில்லை.

    ReplyDelete
  4. கண்டிப்பாக வைரஸ் எல்லாம் வராது நண்பரே. இங்கே கொடுக்கப்படும் மென்பொருள்கள் சோதனைக்குப் பிறகே அவற்றை வெளியிடுகிறேன். அதனால் எந்த கவலையும் அடையாதீர்கள்.

    ReplyDelete
  5. //மென்பொருள்கள் சோதனைக்குப் பிறகே அவற்றை வெளியிடுகிறேன்//

    பரிசோதனைக்கும்,பதிலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. மென்பொருள்களைத் தரவிறக்கினால் வைரஸ் வருகிறது எனக் கவலைப்படும் நீங்கள் அதனை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறிர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நல்ல மென்பொருள்களின் சுட்டி கெட்ட தளங்களிலும் இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.

    ReplyDelete
  7. நான் தேடிய மென்பொருள் உங்களால் கிடைத்தது.. மிக்க நன்றி..

    ReplyDelete
  8. வீடியோ கட்டர் மென்பொருளை...டவுன்லோட் செய்துகொண்டேன்...நன்றி...
    Rajeshnedveera
    maayaulagam-4u.blogspot

    ReplyDelete
  9. Great thoughts you got there, believe I may possibly try just some of it throughout my daily life.

    ReplyDelete