Jan 23, 2013

பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?

பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும்  Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget ஐக் கொண்டு வந்தது. இது பேஸ்புக் Like box போன்றது.

வலைத்தளத்திற்கு வருபவர்கள் எளிதாக நமது கூகிள் பிளஸ் பக்கத்தில் இணைந்து கொள்ள உதவும் விட்ஜெட் ஆகும். தற்போது இதில் இரண்டு புதிய வசதிகளை அப்டேட் செய்திருக்கிறது. இதற்கு  முன் இந்த விட்ஜெட் வலைத்தளத்தில் எப்படித் தோன்றும் என Preview பார்க்கும் வசதியில்லாமல் இருந்தது. அதனை தற்போது பார்த்துக் கொள்ள முடியும். மேலும் விட்ஜெட்டின் அகலம் மற்றும் உயரம் அளவுகளை நமது வலைத்தளத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இதனுடைய வண்ண அமைப்பை Dark or Light என வைத்துக் கொள்ளும் வசதிகளை தற்போது கொண்டு வந்திருக்கிறது.

 Google+ Followers Gadget எப்படிச் சேர்ப்பது?

Blogger Dashboard-> Layout->Add a Gadget என்பதை வரிசையாக கிளிக் செய்து செல்லவும். பின்வரும் விண்டோவில் Google+ Followers விட்ஜெட்டினைத் தேர்வு செய்யவும். இதில் பிளாக்கர் ப்ரோபைலோடு இணைக்கப்பட்ட கூகிள் பிளஸ் ப்ரோபைல் தோன்றும். நீங்கள் Google+ Profile க்கு மாறாமல் இருந்தால் இதனைப் பயன்படுத்த முடியாது. அதற்கு எப்படி மாறுவது என்று இந்த பதிவில் பாருங்கள்.

பின்னர் Size என்பதில் உங்களுக்குத் தேவையான Width and Height கொடுக்கவும். Color Scheme இல் உங்கள் வலைத்தளத்திற்கு பொருத்தமான வண்ண அமைப்பைத் தேர்வு செய்து விட்டு Save கொடுங்கள். அவ்வளவு தான். 

Add Followers Widget for Google Plus Pages

இதே போல நமது வலைப்பூவின் பிரத்தியேக கூகிள் பிளஸ் பக்கம் ஒன்றுக்கு (Pages) சேர்க்க விரும்பினால், உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தின் இணைய முகவரியில் இருக்கும் எண்ணை (Page ID No) காப்பி செய்து எடுத்து கீழ்க்கண்ட நிரல்வரிகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும் நம்பருக்குப் பதிலாக மாற்றி விடவும். உங்களுக்கான கூகிள் பிளஸ் பேஜ் ஐடியை   எப்படி எடுப்பது என்று தெரியாவிட்டால் இந்தப் பதிவில் பார்க்கவும். பின்னர் Blogger Dashboard->Layout->Add a Gadget -> HTML and JavaScript என்பதைக் கிளிக் செய்து இந்த நிரல் வரிகளை சேர்த்து Save செய்து கொள்ளுங்கள்.

<div class="g-plus" data-action="followers" data-height="250" data-href="https://plus.google.com/117031685099046800181" data-source="blogger:blog:followers" data-width="300">
</div>
<script type="text/javascript">
(function() {
window.___gcfg = {'lang': 'en'};
var po = document.createElement('script');
po.type = 'text/javascript';
po.async = true;
po.src = 'https://apis.google.com/js/plusone.js';
var s = document.getElementsByTagName('script')[0];
s.parentNode.insertBefore(po, s);
})();
</script>

9 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  2. Add Followers Widget for Google Plus Page &&& என்று நீங்கள் தந்திருப்பதை க்ளிக் செய்ய முடியவில்லை. எப்படி சேர்ப்பது பாலோயர்ஸ் விட்ஜெட்டை. சரிசெய்யுங்கள் ப்ளீஸ்.!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா ? எனக்கு புரியவில்லை.

      Delete
    2. ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டுக்கான கோடிங் நம் ப்ளாகரில் லே அவுட்டில் இருக்கும் என்று நீங்கள் தெளிவாக சொல்லியிருக்கீங்க. ஸாரி. நான்தான் குழம்பி விட்டேன். இப்ப புரிஞ்சிடுச்சு. நன்றி மேடம்!

      Delete
  3. நன்றி ...சொன்னதை செய்து விட்டேன் .... ரொம்ப நன்றி ......

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  5. இணைத்து விட்டேன்... மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  6. Thanks for sharing this.. very informative

    ReplyDelete