Mar 18, 2013

இந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு

Android Mobile application contest
மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையிலான, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை (Android Application) உருவாக்கும் போட்டி ஒன்றினை  நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் Mobile Application Contest என்ற இந்த போட்டிக்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கி அனுப்பலாம்.

m-Governance எனப்படும் மொபைல் வழி நிர்வாகம் துறையின் வழியாக, பெருகி வரும் மொபைல் உலகிற்கு ஏற்றவாறு மொபைல்களிலும் அரசு மற்றும் பொதுச்சேவைகளுக்கான பயன்பாடுகளை உருவாக்கி மக்களை பயன்பெறச் செய்வதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

கீழ்க்காணும் பிரிவுகளில் உங்கள் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்களை வடிவமைத்து அனுப்பலாம்.

1. Government Services
2. Social Networking
3. e-Health
4. Life Style / Travel
5. Productivity Tools
6. Education / Reference

முதல் பரிசு - 1 லட்சம்
இரண்டாம் பரிசு - Rs. 50000
மூன்றாம் பரிசு - Rs. 25000
Android Mobile application contest

சில விதிமுறைகள்:

* இந்தியராக இருக்க வேண்டும் (Indian Nationality only)
* சரியான முகவரி / தகவல்களை தர வேண்டும்.
* உருவாக்கும் மென்பொருளை வேறெங்கும் பயன்படுத்த கூடாது
* ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே
* ஒருவர் ஒரு அப்ளிகேசன் மட்டுமே கொடுக்க முடியும்.

மேலும் விதிமுறைகளை அறிய Mobile Contest Rules

இந்த போட்டிக்கு மார்ச் 31, 2012 வரை அப்ளிகேசன்களை அனுப்பலாம். போட்டி முடிவுகள் ஏப்ரல் 10 ந்தேதி வெளியிடப்படும்.

இணையதளம் :  http://appscontest.mgov.gov.in/mainpage.jsp

7 comments:

  1. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete
  2. it seems this appscontest.mgov.gov.in website is down. not able to register

    ReplyDelete