Mar 9, 2013

கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்


கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

1. Local Reviews Tab

இந்த Reviews Tab கூகிள் பிளஸ் புரோபைல் மெனுவில் Photos, Videos க்கு அடுத்து அமைந்திருக்கும். Google Places / Local மூலம் நீங்கள் அருகிலிருக்கும் ஹோட்டல்கள், தியேட்டர்கள், கடைகள் என பல இடங்களை காண முடியும். மேலும் அந்த இடங்களில் அவற்றைப் பற்றிய உங்கள் அனுபவத்தை / விமர்சனத்தைக் கொடுப்பது தான் Reviews எனப்படும்.
நீங்கள் விமர்சனம் செய்த இடங்கள் எல்லாம் Reviews Tab இல் இடம்பெறும். இதன் மூலம் உங்கள் பரிந்துரைகளை கூகிள் தனது தேடல் சேவையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டேபினை நீங்கள் மறைத்துக் கொள்ளவும் வசதியிருக்கிறது.

2. Larger Cover Photos 

உங்களின் கூகிள்+ புரோபைல் Background இல் வைக்கப்படும் படங்கள் தான் Cover Photos. இந்த படங்களின் அளவைத் தற்போது பெரியதாக வைத்துக் கொள்ளும் படி மாற்றியமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் 2120x1192 பிக்சல்கள் வரையில் 16x9 Aspect Ratio வில் உள்ள படங்களையும் வைத்துக் கொள்ளலாம். இது முழுப்பக்கத்தையும் அடைத்துக் கொள்வதால் எனக்குப் பிடிக்கவில்லை. இதனை உங்கள் புரோபைலுக்குச் சென்று Change Cover கொடுத்து மாற்றலாம்.
 3. About Page Layout

உங்கள் கூகிள்+ புரோபைலைக் காட்டும் About Page இன் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனை பல வண்ணத் தலைப்புகளில் அமைந்த Card Layout போன்று வடிவமைத்துள்ளார்கள். இது தற்போது டேப்லட் மற்றும் மொபைல்களில் காட்சியளிப்பதைப் போன்றே உள்ளது.
முதலாவதாக உள்ள Reviews வசதியைத் தவிர மற்ற இரண்டு மாற்றங்களும் கூகிள்+ பக்கங்களுக்கும் (Pages) பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உங்களுக்கு வராவிட்டால் பொறுத்திருக்கவும். விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப் படும்.

8 comments:

  1. புதிய தகவலை உடனடியாக தெரிவித்தமைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  2. புதிய தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி .உங்களுக்கு என்
    மகளீர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  4. 30 நாட்களுக்கு என்று இருந்த Internet download Manager பிறகு சண்டித்தனம் பண்ணுகிறது. அதில் ஃபரீயாக தடங்கல் இல்லாமல் பதிவு செய்வதற்கான வழி முறையைக் கூற இயலுமா?

    ReplyDelete
  5. இந்த தகவல் தந்தமைக்கு நன்றி உங்களி சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Thank you for your valuable information.

    ReplyDelete
  7. புதிய தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றிங்க....

    ReplyDelete