Oct 31, 2013

கூகிள் ப்ளஸ் புரோபைல்க்கு எளிமையான Custom URL முகவரி பெற

4 Comments
கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள் ஆகியோருக்கு தரப்பட்டிருந்தது. தற்போது எல்லோருக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
Read More

Oct 30, 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்

7 Comments

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.
Read More

Oct 14, 2013

விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்

5 Comments
கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது.

கூகிளின் சேவைகளான Search, Maps, Places, Google Play, Adsense, YouTube போன்றவற்றில் நமக்குப் பிடித்த தளங்கள் / இடங்கள் / விளம்பரங்களை +1 செய்வோம், பகிர்வோம் அல்லது விமர்சனம் செய்வோம். (Reviews). அதே தயாரிப்புகளைப் பற்றி நமது நண்பர்கள் தேடும் போது அதனைப் பற்றிய கூகிள் விளம்பரங்களின் அருகில் உங்களது புகைப்படமும் பரிந்துரை செய்த கருத்தும் காட்டப்படும். இதனை கூகிள் Shared Endorsement என்ற பெயரில் குறிப்பிடுகிறது.
Google Shared Endorsements
[Reviews in Google Maps]
Google Shared Endorsements
[Reviews in Google Play]
 இது நல்ல விசயம் தான், உங்கள் நண்பர்களின் பரிந்துரைகளைக் கொண்டு குறிப்பிட்ட சேவைகளின் குறை நிறை எளிதாக அறியலாம். எனினும் இணையத்தில் கண்டதைச் செய்யும் நமது தகவல்கள் பொதுவில் வைக்கப்படும் அதுவும் புகைப்படத்துடன் எனும் போது யோசிக்க வேண்டியதாகிறது.

கூகிள் ஏன் இதனைச் செய்கிறது என்று பார்த்தால் பேஸ்புக் ”Sponsored stories” என்ற பெயரில் விளம்பரங்களை பயனர்களுக்குக் காண்பித்து வருகிறது. அதில் நீங்கள் Page, Event, Individual Status என்று எதனையும் விளம்பரமாக காட்டுவார்கள். கூகிள் விளம்பர சேவைக்கு பேஸ்புக்கின் நெருக்கடியை சமாளிக்க தனது கூகிள் ப்ளஸ் பயனர்களின் விவரங்களைப் பயன்படுத்த முடிவெடுத்து விட்டது. பேஸ்புக்கில் இதனை தடுக்க முடியாது. ஆனால் நல்ல வேளையாக கூகிள் விளம்பரங்களில் உங்கள் போட்டோவை தவிர்க்கவும் வழி செய்துள்ளது.
Google Shared Endorsements
[Ads in Google Search]
Google Shared Endorsements இல் உங்கள் விவரங்களைத் தவிர்க்க 

உங்கள் புகைப்படம் கூகிள் விளம்பரங்களில் வராமல் இருக்க கீழே உள்ள சுட்டியில் சென்று “ Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads.” என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் உள்ள டிக்கை எடுத்து விட்டு சேமிக்கவும்.

https://plus.google.com/settings/endorsements?hl=en

Google Shared Endorsements

இந்த நடைமுறை நவம்பர் 11, 2013 லிருந்து வரப்போகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் தகவல்கள் விளம்பரங்களில் வராது.
Read More

Oct 5, 2013

ப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க

7 Comments
இணையத்தில் முண்ணணி சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Google Plus போன்றவற்றில் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்படி பகிரப்படும் செய்திகளை (Status) ப்ளாக்கர் பதிவுகளில் Screenshot எடுக்காமல் நேரடியாக இணைத்து காட்ட முடியும். ப்ளாக் வாசகர்களும் நமது பதிவிலிருந்தே குறிப்பிட்ட Status க்கு Like, Comment, Share, Retweet, +1 போன்ற வேலைகளை செய்ய முடியும்.
Read More