Nov 18, 2013

ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions

கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.

1. Preview Attachments:

preview-save-files-to-google-drive-1

இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview) பார்க்கலாம். அதற்கு கோப்புகளின் மேல் கிளிக் செய்தால் FullScreen முறையில் பார்க்கலாம்.

Read Also: YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
 
2. Save to Drive :

மின்னஞ்சலில் வரும் அனைத்து Attachment ஃபைல்களையும் டவுன்லோடு செய்யாமலே நேரடியாக கூகிள் டிரைவில் சேமித்துக் கொள்ள முடியும். இதற்கு Attachment ன் மீது மவுசைக் கொண்டு சென்றால் Save to Drive என்ற பட்டன் தோன்றும். அதனைக் கிளிக் செய்தால் போதும். இனி நீங்கள் குறிப்பிட்ட கோப்பை எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கூகிள் டிரைவில் பார்த்துக் கொள்ளலாம். மின்னஞ்சலை அழித்து விட்டாலும் Google Drive இல் இருக்கும்.

3.Quick Action Buttons: 

இந்த வசதி முன்பே கொண்டு வரப்பட்டது தான். Quik Actions என்ற பெயருக்கேற்ப இதன் மூலம் ஜிமெயிலில் மின்னஞ்சலைத் திறந்து பார்க்காமலே சில வசதிகளை பட்டன்கள் மூலம் ஒரே கிளிக்கில் விரைவாக திறக்கவும் அணுகவும் முடியும். இப்போது சில புதிய பட்டன்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். இந்த பட்டன்கள் மின்னஞ்சலின் வலது ஒரத்தில் தோன்றும்.

gmail-new-quick-actions

இப்போது ஜிமெயில் மின்னஞ்சலைத் திறக்காமலே குறிப்பிட்ட ஹோட்டல்கள், சினிமா, பொருள்களுக்கு மதிப்பீடு கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் முடியும்.(Rate and Review). Google Offer களை ஒரே கிளிக்கில் சேமிக்கலாம். Google Drive, Dropbox போன்ற தளங்களிலிருந்து வரும் Attachment களை நேரடியாகத் திறக்கலாம். YouTube இல் அப்லோடு செய்தால் வரும் மின்னஞ்சலைத் திறக்காமல் அந்த வீடியோவை உடனே பார்க்கலாம். இதில் இன்னும் பல சேவைகள் இணைக்கப் பட உள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் அறிய 

நன்றி.

6 comments:

  1. blogger_logo_round_35
  2. blogger_logo_round_35

    எல்லா மின் அஞ்சலுக்கும் இது போல வரவில்லையே. நீங்க சொன்ன வீடியோ பகுதிகளில் வருகின்றது. பிடிஎப் பகுதிகளில் வரவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. blogger_logo_round_35

      PDF ஃபைல்களுக்கு Preview வருகிறது. Quick Actions என்றால் அந்த ஃபைல்களோ அல்லது போல்டர்களோ கூகிள் டிரைவிலிருந்து உங்களுக்கு Share செய்யப்பட்டால் மின்னஞ்சலில் View or View Folders என்று வரும். எனக்கு நானே செக் செய்தேன். சரியாகவே வருகிறது.

      Delete
  3. .com/img/b/R29vZ2xl/AVvXsEh8R-jEOZ8Nk7NcVKrYUrJQdA7pXBAovyQ9QyVCaJpXKZZtfL9fTByAfkaDk8-DpiBLpu7eJA7tIwxyt_kiOFBvY5lOcWKYaPDI5Qqllo9A0uorn2yeobnSOdbWGEvP0Q/s45-c/

    பயனுள்ள தகவல்கள் நன்றி பொன்மலர்

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  5. 20220109_094647

    பயனுள்ள தகவல்...பாராட்டுக்கள்!

    ReplyDelete