நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.
Showing posts with label வலை வடிவாக்கம். Show all posts
Showing posts with label வலை வடிவாக்கம். Show all posts
Mar 13, 2013
Jul 20, 2010
வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?
13 Comments
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது. இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு பதிவிட்டுள்ளார். அவர் மீண்டும் தளராமல் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதற்கு புத்துணர்ச்சி கொடுப்போம்.
Jun 9, 2010
வலைப்பூவிற்கான சைட்மேப்பை 5 தேடுபொறிகளில் இணைத்து இணையவரத்தை அதிகரிக்க…
16 Comments
சைட்மேப் (Sitemap) என்றால் என்ன?
தேடுபொறிகள் ( Search Engines) தளங்களை தேடுவதற்கும் தளங்களைப் பற்றி விவரங்களை புதுப்பிக்கவும் ரோபாட் என்ற நிரலைப்பயன்படுத்துகின்றன.சைட்மேப் என்பது தளத்தின் அனைத்து பக்கங்களையும் அடக்கிய உள்ளடக்கம்போன்ற அமைப்பாகும். இது கூகிள் நிறுவனத்தால் 2005 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.கூகிள்,MSN போன்ற முக்கிய தேடுபொறிகள் இந்த சைட்மேப்பை அடிப்படையாக வைத்து தான் ஒரு தளத்தின் பக்கங்களின் விவரங்களை தங்களிடம் உள்ள தரவுத்தளத்தில் (Database)புதுப்பித்துக்கொள்கின்றன.
Jul 6, 2009
உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?
12 Comments
ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.

படிநிலை - 1
உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.
http://www.html-kit.com/favicon/
இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயே
படத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.
படிநிலை - 2
உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/
உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.
Link இதைப்போல இருக்கும்.
http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico
படிநிலை - 3
உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று Head Tag முடிவதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
Head Tag என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள். மேலும் படத்தைப்பார்க்க விபரங்களுக்கு.
link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"
இந்த வரிக்கு முன்பும் பின்பும் < > குறியீடுகள் சேர்த்துக்கொள்ளவும்.

மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?
தொடபுடைய பதிவு :
எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்
Read More
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.

படிநிலை - 1
உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.
http://www.html-kit.com/favicon/
இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயேபடத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.
படிநிலை - 2
உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/
உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.
Link இதைப்போல இருக்கும்.
http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico
படிநிலை - 3
உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று Head Tag முடிவதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
Head Tag என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள். மேலும் படத்தைப்பார்க்க விபரங்களுக்கு.
link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"
இந்த வரிக்கு முன்பும் பின்பும் < > குறியீடுகள் சேர்த்துக்கொள்ளவும்.

மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?
தொடபுடைய பதிவு :
எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்
Jun 10, 2009
உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா?
11 Commentsநீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.
1. Webby Awards.
இது தான் இணையத்தின் ஆஸ்கார் விருதாகும். இந்த விருதுகள்வருடத்திற்கு ஒரு முறை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 விருதுகள் தரப்படும். உங்கள் தளத்தையும் அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் விண்ணப்பிக்கலாம்.
2. TechSightings

இந்த தளம் சிறந்த வடிவமைப்பு கொண்ட தளங்களை பல பிரிவுகளில் தேர்வு செய்கிறது.உங்கள் தளம் வென்றால் அவர்களின் பட்டையை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைக்கலாம்.
3. The DailyWebsite
இந்த தளம் புதிய மற்றும் பயனுள்ள கருத்துகளை உடையதளங்களை அறிமுகப்படுத்துகிறது.
4. Web Builder

5. Golden Web Award

இந்த விருது வலைப்பக்க வடிவமைத்தோரின் சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.படைப்புத்திறன், முழுமை ( Integrity ) , திறமை போன்றவை அளவிடப்படுகின்றன. இது அவர்களின் இலவச சேவையாகும்.
6. Webmaster Award.

7. The Surfers choice

தரமுள்ள, கருத்துச்செறிந்த வலைத்தளங்களை கண்டறியும் ஒரு
வலை மேடையாகும். ( Web Portal ) . இது உங்கள் தளங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
8. The Golden Crane Creativity Award

இந்த விருது , கலை, அறிவியல், கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல பிரிவுகளில் இலவச தகவல்கள் (Free Tech Support ) தரும் தளங்களைத் தேர்வு செய்து தரப்படுகின்றன.
நன்றி!.
Jun 4, 2009
உங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க!
21 Comments
சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascript
கோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.
2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை அடித்து Create Link பட்டனை
கிளிக் செய்து அந்த இணைப்புக்கான முகவரியைத்தரவும்.
எ.கா. About me -> http://ponmalars.blogspot.com/aboutme.html

4. உங்கள் மெனுவில் குறைந்தது 5 தலைப்புகளையும் அதற்கான
இணைப்பையும் கொடுத்து சேமியுங்கள்.
HOME || ABOUT || DOWNLOADS || SITE MAP || DISCLAIMER
5. பின்னர் அந்த நேவிகேசன் பட்டியை ( Navigation bar ) வேண்டிய
இடத்தில பொருத்தவும்.வலைப்பதிவின் தலைப்புக்கு ( Blog Title )
கீழே என்றால் நன்றாக இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கான நேவிகேசன் பட்டி ( Navigation Menu )
உங்கள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். நன்றி!
---------------------------------------------------------------------------------
என்னுடைய இந்த கட்டுரை யூத் விகடனில் சிறந்த கட்டுரை
பகுதியில் வந்துள்ளது. இதோடு 3 கட்டுரைகள் வந்துவிட்டன.
ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும்
நன்றி. மற்ற கட்டுரைகள் :
1. Autorun வைரஸ் நீக்கும் மென்பொருள்
2. கூகுளின் புதிய வசதி : வலைப்பக்கத்தில் தமிழில் அடிக்கலாம்