நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும். சிரமப்பட்டு அழித்தாக வேண்டும்.
இதற்கு கூகிள் ஜிமெயிலில் Visual Preview of Promotion mails என்ற புதிய வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. இதனால் அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் குறும்படங்களாக (Thumbnail) பல கட்டங்களில் ஆன அமைப்பில் (Grid View) காட்டப்படும். இதில் அந்த விளம்பர வெப்சைட் பெயர், படம் மற்றும் முக்கிய செய்தியும் (Subject) மட்டுமே காட்டப்படும்.
இதனால் குறிப்பிட்ட கம்பெனி சலுகைகளை (same brand offers) எளிதாக கண்டுபிடிக்கலாம். தேவையானதை விரைவாக கிளிக் செய்து சலுகைகளின் பக்கங்களுக்குச் செல்லலாம். தேவையில்லாததை இங்கேயே உடனடியாக அழித்து விடலாம். மின்னஞ்சலைத் திறந்து பார்க்க வேண்டிய வேலையே இல்லை.
Also Read: தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
முக்கியமாக இந்த வசதி Promotions Tab பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. நீங்கள் பயன்படுத்தா விட்டால் Settings பட்டனைக் கிளிக் செய்து Configure Inbox என்ற பெட்டியில் Promotions என்பதில் டிக் செய்து கொள்ளவும்.
இந்த Grid View அமைப்பில் வேண்டாம் என்றால் மேலிருக்கும் Switch to List பட்டனைக் கிளிக் செய்து வழக்கமான List View அமைப்பில் மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதி எனக்கு வந்திருக்கிறது. உங்களுக்கு வரவில்லையெனில் இதன் Field Trail இல் இணைத்துக் கொள்ளவும்.
இதற்கு கூகிள் ஜிமெயிலில் Visual Preview of Promotion mails என்ற புதிய வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. இதனால் அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் குறும்படங்களாக (Thumbnail) பல கட்டங்களில் ஆன அமைப்பில் (Grid View) காட்டப்படும். இதில் அந்த விளம்பர வெப்சைட் பெயர், படம் மற்றும் முக்கிய செய்தியும் (Subject) மட்டுமே காட்டப்படும்.
Also Read: தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
முக்கியமாக இந்த வசதி Promotions Tab பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. நீங்கள் பயன்படுத்தா விட்டால் Settings பட்டனைக் கிளிக் செய்து Configure Inbox என்ற பெட்டியில் Promotions என்பதில் டிக் செய்து கொள்ளவும்.
Normal View of Promotion Mails |
Tweet | |||
0 comments.:
Post a Comment