Nov 3, 2011

MS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க


நமது ஆவணங்களின் பிண்ணணியில் நமது பெயரையோ அல்லது எதாவது ஒரு படத்தினைச் சேர்ப்பதற்கு வாட்டர்மார்க் என்று சொல்வார்கள். இதனை MS- Word மென்பொருளைப் பயன்படுத்தி வந்தால் இதிலேயே எளிமையாகச் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக வேறு மென்பொருள்களை நாட வேண்டியதில்லை.

உங்களிடம் MS-ஆபிஸ் பதிப்பு 2007 அல்லது 2010 இருப்பின் திறந்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சிட்ட அல்ல புதியதாக தட்டச்சிடுகிற கோப்புகளிலும் வாட்டர்மார்க் இடமுடியும். ரிப்பன் மெனுவில் Page Layout என்பதைக் கிளிக் செய்தால் Watermark என்ற மெனு தெரியும். அதைக் கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு வசதிகள் தோன்றும்.


1.No Watermark – வாட்டர்மார்க் தேவையில்லை என்பதற்காக
2.Picture Watermark – உங்களிடம் இருக்கும் புகைப்படம் அல்லது ஒளிப்படங்களை வாட்டர்மார்க் ஆகப் பயன்படுத்துவதற்கு
3.Text Watermark – இதில் உங்களுக்குத் தேவையான பெயர் அல்லது சொற்களை வாட்டர்மார்க் ஆக இணைக்கலாம்.

மேலும் இதிலுள்ள வசதிகள்.

இதில் ஃபாண்ட் அளவு, வண்ணம் போன்றவற்றையும் அமைக்கலாம். வாட்டர்மார்க் ஆவணத்தின் குறுக்காக அல்லது கிடைமட்டமாக வர Layout இல் Diagonal or Horizontal என்பதில் தேர்வு செய்து கொள்ளலாம். வேர்ட் டாகுமெண்ட்களில் வாட்டர்மார்க் எளிமையாகவும் விரைவாகவும் இதன் மூலம் கொண்டு வரலாம்.

MS-Word 2003 மற்றும் பழைய பதிப்புகளில் வாட்டர்மார்க் சேர்க்க.

மெனுபாரில் Format->Background என்பதில் சென்று Printed Watermark என்ற மெனுவைக் கிளிக் செய்தால் மேற்கண்ட வசதிகள் இதிலும் கிடைக்கும்.

********************************************************
இருபது நாட்கள் கழித்து சர்விஸ்க்கு கொடுத்த லேப்டாப் (?) நேற்று கொடுத்தார்கள். புத்தாண்டில் நிகழ்ந்ததைப் போல மறுபடியும் LCD க்கு விருப்பமில்லா ஒய்வு கிடைத்தது. தேர்தல் முடியட்டும் என்றார்கள். பின் தீபாவளி கழித்து தான் வரும் என்றார்கள். இந்த முறை வாரண்டியில் செலவின்றி பெற்றதால் மனதுக்கு நிம்மதி. கண்ணில் கண்ட புத்தகங்களைப் படித்துத் தள்ளியதிலும் மொபைல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தி பொழுது போனாலும் கண்ணில் தான் வலி. தேர்தலும் முடிந்தது. தீபாவளியும் மகிழ்ச்சியாகவே போனது. லேப்டாப் இல்லாததால் மழை விடாமல் பெய்தும் வேலாயுதம், ஏழாம் அறிவு, ரா ஒன் எல்லாவற்றையும் தியேட்டரிலேயே பார்த்துத் தொலைத்தோம். (காசையும்!). இடையில் ஒரு Inventory மென்பொருள் உருவாக்கத்தில் இருந்ததால் எல்லா வேலைகளும் தடைபட்டுப்போனது. இந்த புரியாத அக்கவுண்ட்ஸ் பற்றி டேலி பற்றி யாராவது எழுதுங்களேன்! I Got My laptop Back. Thanks God.

15 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வேர்டு 2003 இலும் எப்படி செய்வது என்று போட்டிருந்தேனே. இரண்டாவது படம் அதைத் தானே குறிக்கிறது. அந்த பத்தியை Bold செய்யாததால் பார்க்க வில்லையோ?

    ReplyDelete
  3. நல்ல பதிவு. உங்கள் லேப்டாப் திரும்ப வந்ததற்கு மகிழ்ச்சி தொடரட்டும் எழுத்துப்பணி

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நன்றி...

    ReplyDelete
  5. ரிப்பன் மெனுவில், where we found this. only print layout is there.

    ReplyDelete
  6. என் அவசர பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும் சகோ. அந்த ஒரு வரியை கவனிக்கவில்லை. முதல் பத்தியை படித்ததும் வேர்டை திறந்து முயற்சித்தேன்.

    புதிய பயனுள்ள தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல். நன்றி..!! தொடர்ந்து சிறப்பான பதிவுகளை எழுத வாழ்த்துகள்.!!

    ReplyDelete
  8. என்னைப் போன்றவர்களுக்கு இது மாதிரியான எளிதான ஆனால் பயனுள்ள தகவல்கள்தான் தேவை. நன்றி பொன்மலர்! லேப்டாப் திரும்ப வந்ததில் உங்களை விட எங்களுக்குத்தான் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. லேப் டாப் இருபது நாட்கள் கழித்தாவது கிடைத்ததே! நமக்கு பிரியமான ஒன்று தற்காலிகமாக நம்மிடம் இல்லாமல் போனால் கூட மனம் வாடும். வழக்கம் போல பொன்மலர் கம்மென்று மனம் வீசும் வாச மலர்தான். தொடருங்கள் .நன்றி.

    ReplyDelete
  10. லேப்டாப் திரும்ப வந்ததில் உங்களை விட எங்களுக்குத்தான் மகிழ்ச்சி. பயனுள்ள தகவல் மிக்க நன்றி ..

    ReplyDelete
  11. எங்கே சகோதரியை காணோம்னு பார்த்தேன். இப்பதான் சேதி தெரிந்தது.

    ReplyDelete
  12. செல்வராஜ்November 8, 2011 at 8:31 AM

    டேலி பற்றி www.tamiltally.blogspot.com
    www.tally9erp.blogspot.com

    ReplyDelete
  13. இன்றுதான் தங்கள் தளத்திற்கு வந்தேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்!----பத்மாசூரி

    ReplyDelete