Showing posts with label Gmail. Show all posts
Showing posts with label Gmail. Show all posts

Mar 28, 2014

ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி

நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும்.  சிரமப்பட்டு அழித்தாக வேண்டும்.

 Gmail promotion mails visual preview

இதற்கு கூகிள் ஜிமெயிலில்  Visual Preview of Promotion mails என்ற புதிய வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.  இதனால் அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் குறும்படங்களாக (Thumbnail) பல கட்டங்களில் ஆன அமைப்பில் (Grid View) காட்டப்படும். இதில் அந்த விளம்பர வெப்சைட் பெயர், படம் மற்றும் முக்கிய செய்தியும் (Subject) மட்டுமே காட்டப்படும்.

இதனால் குறிப்பிட்ட கம்பெனி சலுகைகளை (same brand offers) எளிதாக கண்டுபிடிக்கலாம். தேவையானதை விரைவாக கிளிக் செய்து சலுகைகளின் பக்கங்களுக்குச் செல்லலாம். தேவையில்லாததை இங்கேயே உடனடியாக அழித்து விடலாம். மின்னஞ்சலைத் திறந்து பார்க்க வேண்டிய வேலையே இல்லை.

Also Read: தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க

முக்கியமாக இந்த வசதி Promotions Tab பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. நீங்கள் பயன்படுத்தா விட்டால் Settings பட்டனைக் கிளிக் செய்து Configure Inbox என்ற பெட்டியில் Promotions என்பதில் டிக் செய்து கொள்ளவும்.
Gmail promotion mails visual preview 
Normal View of Promotion Mails
இந்த Grid View அமைப்பில் வேண்டாம் என்றால் மேலிருக்கும் Switch to List பட்டனைக் கிளிக் செய்து வழக்கமான List View அமைப்பில் மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதி எனக்கு வந்திருக்கிறது. உங்களுக்கு வரவில்லையெனில் இதன் Field Trail இல் இணைத்துக் கொள்ளவும்.

Read More

Nov 18, 2013

ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions

6 Comments
கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.

1. Preview Attachments:

Gmail New Features - Save to Drive, Quick Actions

இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview) பார்க்கலாம். அதற்கு கோப்புகளின் மேல் கிளிக் செய்தால் FullScreen முறையில் பார்க்கலாம்.

Read Also: YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
 
2. Save to Drive :

மின்னஞ்சலில் வரும் அனைத்து Attachment ஃபைல்களையும் டவுன்லோடு செய்யாமலே நேரடியாக கூகிள் டிரைவில் சேமித்துக் கொள்ள முடியும். இதற்கு Attachment ன் மீது மவுசைக் கொண்டு சென்றால் Save to Drive என்ற பட்டன் தோன்றும். அதனைக் கிளிக் செய்தால் போதும். இனி நீங்கள் குறிப்பிட்ட கோப்பை எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கூகிள் டிரைவில் பார்த்துக் கொள்ளலாம். மின்னஞ்சலை அழித்து விட்டாலும் Google Drive இல் இருக்கும்.

3.Quick Action Buttons: 

இந்த வசதி முன்பே கொண்டு வரப்பட்டது தான். Quik Actions என்ற பெயருக்கேற்ப இதன் மூலம் ஜிமெயிலில் மின்னஞ்சலைத் திறந்து பார்க்காமலே சில வசதிகளை பட்டன்கள் மூலம் ஒரே கிளிக்கில் விரைவாக திறக்கவும் அணுகவும் முடியும். இப்போது சில புதிய பட்டன்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். இந்த பட்டன்கள் மின்னஞ்சலின் வலது ஒரத்தில் தோன்றும்.

Gmail New Features - Save to Drive, Quick Actions

இப்போது ஜிமெயில் மின்னஞ்சலைத் திறக்காமலே குறிப்பிட்ட ஹோட்டல்கள், சினிமா, பொருள்களுக்கு மதிப்பீடு கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் முடியும்.(Rate and Review). Google Offer களை ஒரே கிளிக்கில் சேமிக்கலாம். Google Drive, Dropbox போன்ற தளங்களிலிருந்து வரும் Attachment களை நேரடியாகத் திறக்கலாம். YouTube இல் அப்லோடு செய்தால் வரும் மின்னஞ்சலைத் திறக்காமல் அந்த வீடியோவை உடனே பார்க்கலாம். இதில் இன்னும் பல சேவைகள் இணைக்கப் பட உள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் அறிய 

நன்றி.
Read More

Apr 13, 2013

இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager

19 Comments
மின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.
Read More

Jan 22, 2013

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?

18 Comments

இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.
Read More

May 29, 2011

ஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறைகள்.

8 Comments

how to secure gmail accountமின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம் (hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
Read More

Jan 8, 2011

கூகுளின் புதிய வசதி : Gmail Priority Inbox (மின்னஞ்சல்களின் முக்கியத்துவம்)

2 Comments

கூகிள் இன்றொரு புதிய வசதியை ஜிமெயில் இல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை gmail priority inbox எனப்படுகிறது. நமக்கு தினமும் ஏராளமான மின்னஞ்சல்கள் வருகின்றன. இன்பாக்ஸில் நிறைந்து விடும் அத்தனை மின்னஞ்சல்களையும் நம்மால் படிக்க இயலாமல் சோர்ந்து போய்விடுவோம். குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்வதும் இதற்கு ஒரு தீர்வாகலாம்.இந்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சலை முக்கியமானது அல்லது முக்கியமற்றது எனக்குறித்து வைக்கலாம். முக்கியமானவற்றை மட்டும் முன்னிறுத்தி priority inbox காட்டுவதால் நமது நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
Read More

Dec 27, 2010

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?

12 Comments

Block unwanted mails in gmailதற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.
Read More