Feb 27, 2012

கூகிள் பிளஸ் புதிய வசதிகள் டிப்ஸ் அப்டேட்ஸ்

9 Comments

Goolge Plus Updates New tipsகூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தளம் வெற்றி நோக்குடன் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தற்போது புதியதாக கூகிள் பிளசில் வந்துள்ள அப்டேட்களைப் பார்ப்போம்.

1. Auto Expanded Share box

நமது வலைப்பூவில் பதிவுகளின் அடியில் கூகிள்+1 பட்டன் வைத்திருப்போம். அதன் மூலம் பதிவைப் படிப்பவர்கள் பிடித்திருந்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலில் பகிர்ந்து கொள்ளலாம். அந்த பட்டனை ஒரு
Read More

Feb 25, 2012

உங்கள் இணையதளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய

15 Comments

Check Your Site Blocked in China or Notசீனா மிகுந்த கட்டுக்கோப்பான நாடாக பெயர் பெற்றது. இணையத்தின் வளர்ச்சியும் தாக்கமும் சீனர்களுக்குப் பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப தான் அங்கே இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதனுடைய இணையத் தணிக்கை முறையாலே (Internet Censorship) கூகிளுக்கும் சீனாவுக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு கூகிள் சீனாவிலிருந்து விலகியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
Read More

Feb 17, 2012

கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய

9 Comments

Find License Keys of your installed softwaresகணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
Read More

Feb 13, 2012

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்

32 Comments

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.
Read More

Feb 5, 2012

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த

19 Comments

இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Read More

Feb 4, 2012

கூகிள்+ Badge புதிய வசதிகளுடன் உருவாக்க

7 Comments

கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் நம் வலைப்பூவிற்கு என்று ஒரு கூகிள்+ பக்கம்(Pages) வைத்திருப்போம். இதன் மூலம் நமது வாசகர்களை கூகிள்+ தளம் வழியாக இணைந்திருக்க செய்ய முடியும். இதற்காக கூகிள்+ பக்கத்திற்கான பேட்ஜ் (Badge) ஒன்றினை நமது வலைத்தளத்தில் வைத்துக் கொண்டால் வாசகர்கள் அதனைக் கிளிக் செய்து இணைந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தற்போது இதில் புதிய வசதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன.
Read More

Feb 3, 2012

பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும் செயலி RSS Graffiti.

11 Comments

நமது வலைத்தளத்திற்கு பேஸ்புக் வழியாக நண்பர்களை இணைப்பதற்கும் நமது பதிவுகளை பேஸ்புக்கின் வழியாக உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் Facebook Fan Page பயன்படுகிறது. இதற்கு பேஸ்புக்கில் தானியங்கியாக நமது வலைப்பதிவை திரட்டும் வழியில்லை என்பதால் நாம் தான் ஒவ்வொரு பதிவு எழுதிய பின்னரும் பேஸ்புக்கில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். பதிவெழுதுவதே பெரிய வேலை, இதில் எங்கே எல்லாவற்றிலும் சென்று அப்டேட் செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு பேஸ்புக்கில் RSS Graffiti என்ற செயலி ஒன்று இருக்கிறது.
Read More

Feb 2, 2012

சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்

10 Comments

இணைய உலகில் தற்போது சமூக வலைத்தளங்கள் இடையான போட்டியில் கூகிளின் பிளஸ்க்கும் பேஸ்புக் தளத்திற்குமே பலத்த போட்டியாக இருக்கிறது. கூகிளை விட பேஸ்புக் இமாலய கூட்டத்தை வைத்திருப்பதால் எவ்வாறு முந்தலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. பேஸ்புக்கில் எதாவது ஒரு வசதி தந்தால் கூகிளும் அதனை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் நிறுவனமும் இதற்கு சளைத்தவாறில்லை. அண்மையில் கூகிள் தனது தேடியந்திரத்தின் தேடல் உத்திகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. Google Personal Search (Search Plus your World) என்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த புதிய வசதியினால் தேடல் சேவையானது கூகிள்+ தளத்தின் தரவுகளோடு (Data) இணைக்கப் பட்டிருக்கிறது. இதன் நன்மைகள், சமூக வலைத்தளப் பிரச்சினைகள் பற்றியும் பார்ப்போம்.
Read More