Showing posts with label Windows Tips. Show all posts
Showing posts with label Windows Tips. Show all posts

Jul 21, 2011

கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்

12 Comments

பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.
Read More

May 26, 2011

இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்டிவைரஸ் நீட்சிகள்

9 Comments

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது, இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. என்னுடைய கணிணியிலும் ஒருமுறை எதோ வெப்சைட்டில் நுழையப்போய் பல வைரஸ்கள் ஊடுருவியதில் சிக்கலாகிப் போய்விட்டது. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும். அதுவும் இண்டர்நெட் பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணிணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
Read More

May 24, 2011

விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு

12 Comments

விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.
Read More

May 16, 2011

கணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup

5 Comments

கணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து வைக்கிறோம்? 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
Read More

Feb 21, 2011

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller

4 Comments

Uninstall programs with MyUninstallerவிண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.
Read More

Jan 20, 2011

My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?

4 Comments

Cd drive not detecting problemகணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?
Read More

Jul 2, 2009

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?

12 Comments

Remove Write Protection on USB drives
பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.

"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk" 

என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.




reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும்.  இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1


Read More