Sep 10, 2011

ஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்


2இணைய விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்க கூகிளின் ஆட்சென்ஸ் (Google Adsense) தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆட்சென்ஸ் கணக்கு வாங்க அப்ளை செய்தால் வேகமாகவும் எளிமையாகவும் நடைமுறைப் படுத்திவிடும். அதற்கு அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நமது இணையதளம்/வலைப்பூ சரிவர இருக்க வேண்டும். பிறகு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் உடனடியாக நமது தளத்தில் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இனி இந்த நடைமுறைகள் இன்றி மேலும் கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.

நமக்கு புதிய கணக்கொன்றை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நமது வலைத்தளத்தை வைத்து பரிசோதிப்பார்கள். இதனை Approval process என்பார்கள். இப்போது இதில் 2-Step Verification process என்ற இரண்டு கட்ட சோதனை முறையைக் கொண்டு வந்துள்ளார்கள்.

1. முதலில் வழக்கம் போல அட்சென்ஸ்க்கு Signup செய்து நமது வலைத்தளம் பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் முதல்கட்ட சோதனை செய்து சரியாக இருப்பின் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைய முதல் அனுமதி கிடைக்கும்.

2. அடுத்து விளம்பரங்களை நாம் விண்ணப்பத்தில் கொடுத்த இணையதளத்தில் வைக்க வேண்டும். இதனை இரண்டாவது கட்டமாகப் பரிசோதனை செய்வார்கள். இதிலும் சரியாக வந்தால் மட்டுமே இறுதி அனுமதி கிடைக்கும். (final approval)

adsense+money
நீங்கள் முதல் கட்டத்தில் எளிதாக பாஸ் செய்து விட்டாலும் இரண்டாவது சோதனைக்காக காத்திருக்க வேண்டும். அதுவரையிலும் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தாலும் Your account is under review என்பதே காட்டப்படும் என்பது முக்கியமான விசயம். அதைப் போல இரண்டாவது சோதனை நடைபெறும் வரை விளம்பரங்களின் மேல் கிளிக்கப்படும் கிளிக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது. இரண்டாவது சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப் படும். அதன் பின்னரே உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் Domain Ownership உறுதிப்படுத்தப் படுகிறது. இதனால் தளத்தை வைத்திருப்போர்கள்(owners) மட்டுமே புதிய கணக்கைப் பெற முடியும். போலியாகவும் பணத்துக்காகவும் புதிய ஆட்சென்ஸ் கணக்கைத் துவங்குபவர்களுக்கு இனி சிக்கல் தான். இதைப் போல Indyarocks, hubpages தளங்களில் உறுப்பினராகி வேகமாக ஆட்சென்ஸ் பெறுபவர்களும் பாதிக்கப் படுவார்கள். இந்த நடைமுறைகள் இனி ஆட்சென்ஸ் பெறுவதைத் தாமதப் படுத்தலாம். ஆட்சென்ஸ் கிடைக்காதவர்கள் வேறு எதேனும் மாற்று விளம்பர சேவைகளைப் பயன்படுத்தலாம்.

23 comments:

  1. blogger_logo_round_35

    கூகிள் தெளிவா இருக்கான்...

    ReplyDelete
  2. blogger_logo_round_35
  3. 010-Passikudah
  4. blogger_logo_round_35

    ஆட்சென்ஸ் பற்றிய தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. 010-Passikudah

    //ஆட்சென்ஸ் கிடைக்காதவர்கள் வேறு எதேனும் மாற்று விளம்பர சேவைகளைப் பயன்படுத்தலாம்.//

    Google Adsense போல் நம்பகரமான வேறு தளங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

    நான் Admaya தளத்தினை பயன்படுத்துகிறேன் ஆனால் இவர்களின் நம்பகரத்தன்மையை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை ஏனென்றால் நான் இன்னும் இவர்களிடம் இருந்து பணம் பெறவில்லை.

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    கூகிளைத் தவிர மற்ற நிறுவனங்கள் குறைவாகத் தான் தருகின்றன. ஒரு நாளைக்கு 50 ருபாய் என்பதே அதிகம். ஆனால் ஆட்சென்சில் ஒரு பதிவு போட்டால் குறைந்தது 100-200 வரும்.

    இப்போது Chitika நிறுவனம் விளம்பரங்களைத் தருகிறார்கள்.வருமானம் கம்மியாகவே இருக்கிறது. மற்ற விளம்பர நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    Admaya நான் பயன்படுத்தவில்லை. வரவு ரொம்ப கம்மியாகவே இருக்கும் என நினைக்கிறேன். இந்திய நிறுவனங்கள் அள்ளித்தராது. இதைப் போலவே Adsforindians. உங்களுக்கு எப்படி MHM Nimzath?

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    நன்றி தமிழ்வாசி.

    இனிவரும் காலங்களிலும் அதிக மாற்றங்களும் பாதுகாப்புகளும் ஆட்சென்சில் வரும். முந்திக் கொண்டவன் புத்திசாலி. முன்னரே சம்பாதித்தவர்கள் be lucky.

    ReplyDelete
  9. 010-Passikudah

    //இப்போது Chitika நிறுவனம் விளம்பரங்களைத் தருகிறார்கள்.வருமானம் கம்மியாகவே இருக்கிறது. மற்ற விளம்பர நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.//

    Chitika நிறுவனத்தில் இணைந்துவிட்டேன்.

    ஆ...ஆய்வு செய்து நல்லா...வருமானம் வரக்கூடியத... இந்த கம்மியாக தாரத்த விட்டுப்போட்டு சொல்லுங்க....சரியா...

    ReplyDelete
  10. 010-Passikudah

    //Admaya நான் பயன்படுத்தவில்லை. வரவு ரொம்ப கம்மியாகவே இருக்கும் என நினைக்கிறேன். இந்திய நிறுவனங்கள் அள்ளித்தராது. இதைப் போலவே Adsforindians. உங்களுக்கு எப்படி MHM Nimzath?//

    ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சு ரீக்கீங்க....உங்களுடைய நாட்டு நிறுவனங்கள....ரொம்ப ரொம்ப கம்மியாக...ஒரு க்ளிக் பன்னினா அதிக பட்சம் $0.002 மட்டும்தான்..

    ReplyDelete
  11. arun_profile

    வேறு தான் நானும் தேடி கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  12. 010-Passikudah

    //வேறு தான் நானும் தேடி கொண்டிருக்கிறேன்!//

    கிடைச்சா சொல்லுங்கப்பா....

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    Adsense வாங்கி ஆங்கில பிளாக் எழுதுங்கள். நல்லாப் போகும். பிக்சர் சைட்டுக்கும் காசு அதிகமாக வரவில்லை.

    மேட்டர் இங்கிலிஷ்ல இருந்தா தான் அதுவும் கூட்டம் வந்தா தான் ஆட்சென்ஸ்.

    ReplyDelete
  14. blogger_logo_round_35

    நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  15. blogger_logo_round_35

    நான் மிகவும் எதிர்பார்த்த தகவல் பொன்மலர், மிக்க நன்றி. நான் அட்சென்சஸ் அக்கௌன்ட் வாங்கிவிட்டேன். ஆனால் அதை எப்படி இன்டெக்ரேட் செய்வது என்பதுதான் தெரியவில்லை. கொடுக்கப்பட்ட கணக்கில் சென்று பார்த்தால் சில டெச்னிகல் சமாசாரங்கள் தெரிய வேண்டியிருக்கிறது. ஈதை வெப் டெவெலொபெர் மட்டுமே செய்ய முடியுமா? நானே செய்வதற்க்கு வேறு எளிமையான வழி இருந்தால் கூறுங்கள். நன்றி!

    ReplyDelete
  16. -H

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. blogger_logo_round_35

    //Mathiviews

    பிளாக்கரில் வலைப்பூ வைத்திருந்தால் ஆட்சென்ஸ் சேர்ப்பது எளிது. நீங்கள் வெப்சைட் வைத்திருக்கிறிர்களா

    ReplyDelete
  18. blogger_logo_round_35

    ஆம். நான் வெப்சைட் வைத்திருக்கிறேன். www.smartfoundation.in அல்லது வைலைப்பூ ஆரம்பித்தால் பராமரிப்பது எளிது எங்கிறீர்களா?

    ReplyDelete
  19. blank

    நான் ஆட்சென்ஸ் எங்கேயுமே பயன்படுத்தல ஆனா ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வருகிறது, என்ன காரணம்?

    ReplyDelete
  20. blogger_logo_round_35

    நான் வாங்கிப்பதிவு செய்த domain name-ல் ப்ளாக்கர் ஆரம்பிக்க முயற்சி செய்த போது அந்தப் பெயர் not available என்று வருகிறது. வலைத்தளத்தின் பெயருக்கும் ப்ளாக்க்கர் பெயருக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

    ReplyDelete
  21. blogger_logo_round_35

    உங்கள் பிளாக்கில் ஆட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற்று இருந்ததே, என்னவாயிற்று?

    ReplyDelete
  22. 30-07-10-13-36
  23. blank

    thanks for usefull information

    ReplyDelete