கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.
இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 Gb இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.
இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.
Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
My files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.
Profile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.
பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.
இணையதளம் : http://skydrive.live.com
டிஸ்கி : 25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள். ஹி ஹி!
Tweet | |||
அற்புதமான பயனுள்ள இலவச சேவை தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றிங்க...
ReplyDeleteபுதிய, பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோதரி!
ReplyDelete//25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள்.//
:) :) :)
Really Useful message !
ReplyDeleteவைரஸ் அட்டாக் என்ற பயம் காரணமாக தேவையில்லை, ஆனால் பயணம் செய்யும் நபராக இருந்தால் அவருக்கு இது அவசியம்.. c drive விட்டு விட்டு மற்ற டிரைவ் களில் சேமித்தால் வைரஸ் அட்டாக் பயம் தேவை இல்லையே..
ReplyDeleteWithout Investment Data Entry Jobs !
ReplyDeleteFOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
பயனுள்ள தகவல்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க....
ReplyDeleteஇது ஒரு மித் தான்.
ReplyDeleteஒரு காலத்தில் உங்களைப் போன்றே சிலர் எண்ணி வந்தனர். சிடி / டிவிடியில் எழுதி வைத்தால் வைரசு வராது என்று.
இங்கே புதிதாக சி டிரைவ் தவிர பிற டிரைவில் எழுதி வைத்தால் வைரசு வராதே என்கிறீர்கள் புதிதாக.
வருந்தி அழைத்தாலும் சில நேரங்களில் வைரசு வரவே வராது. போ போ என துரத்தினாலும் போய்த் தொலையாது இந்தப் பொல்லாத வைரசு. இந்தக் கொடுமையில் டூப்ளிகேட் ஆண்டி வைரஸ் எல்லாம் வேறு. அதன் பெயர் ஆண்டிவைரசாம், ஆனால் செய்யும் சேட்டை வைரசைவிட ஜாஸ்தியாம். எ.கொ.சார் இது?
/* வைரஸ் அட்டாக் என்ற பயம் காரணமாக தேவையில்லை, ஆனால் பயணம் செய்யும் நபராக இருந்தால் அவருக்கு இது அவசியம்.. c drive விட்டு விட்டு மற்ற டிரைவ் களில் சேமித்தால் வைரஸ் அட்டாக் பயம் தேவை இல்லையே.. */
நல்ல பதிவு வாழ்த்துக்கள்..
ReplyDeletehttp://www.noolulagam.com/blog