Sep 23, 2011

இலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)


asus+ebook+readerமின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணிணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம். இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணிணியிலும் மொபைல்களிலும் படிக்க இயலும்.

பெரும்பாலான மின்னிதழ்கள் அசல் புத்தகத்தை ஸ்கேன் செய்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பல கருவிகளுக்காக மின்னிதழ்கள் பல்வேறான பார்மேட்டுகளில் உருவாக்கப்படுவதால் குறிப்பிட்ட ஒன்றில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றன. அமேசான் நிறுவனத்தின் Kindle Ebook reader மின்னிதழ் படிப்பான்களில் பிரபலமாக இருக்கிறது. இதற்கான மின்புத்தகங்கள் .azw என்ற பார்மேட்டில் உருவாக்கப்படுகிறது. Sony நிறுவனமும் மின்னிதழ் படிப்பான்களை வழங்கி வருகிறது.
(Amazon Kindle Ebook Reader)
amazon+kindle+1EPUB / IDPF – இந்த வகையான மின்னிதழ்கள் பிரபலமான அதிகளவு பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதனை Kobo eReader, Apple's iPhone, iPod Touch and iPad, Barnes and Noble Nook, Sony Reader, BeBook, Bookeen Cybook Gen3, COOL-ER, Adobe Digital Editions, Lexcycle Stanza, BookGlutton, AZARDI, FBReader, Aldiko and WordPlayer on Android, Freda on Windows Mobile and Windows Phone 7 போன்ற பெரும்பாலான கருவிகளில் படிக்கலாம். அமேசானின் கிண்டில் இதனை சப்போர்ட் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pdb – மற்றொரு பிரபல மின்னிதழ் வடிவமான இதனை iPhone, PalmOS, WebOS, Android, Symbian, BlackBerry, Windows Mobile போன்றவற்றில் பயன்படுத்த இயலும்.

PDF – Portable Document file இந்த வகையான மின்னிதழ்களை அதிகமாக கேள்விப்பட்டிருக்கலாம். இதனை கணிணி மற்றும் சில மொபைல்களும் சப்போர்ட் செய்கின்றன.
hamster+ebook+converterஇதைப்போல பல வடிவங்களில் மின்னிதழ்கள் இணையத்தில் இருப்பதனால் அவற்றை குறிப்பிட்ட கருவிகளில் படிக்க முடியாமல் சிக்கல் ஏற்படலாம். இதற்காக இருக்கும் ஒரு இலவச மென்பொருள் தான் Hamster Ebook converter. இதன் மூலம் Apple devices, Sony, iRiver, Amazon, Kobo மற்றும் பிற eBook readers களில் தேவைப்படுகிற பார்மேட்டுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இதில் குறிப்பிட்ட பார்மேட்டைத் தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான கருவியைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. இதிலேயே மற்ற மின்னிதழ் வடிவங்களிலிருந்து PDF,TXT கோப்பு வகைகளுக்கும் மாற்ற முடியும். இதனை இணையத்திலிருந்தால் மட்டுமே தரவிறக்க முடியும். (Online installer)

தரவிறக்கச்சுட்டி: http://ebook.hamstersoft.com/en/

தகவல் உதவி: http://en.wikipedia.org/wiki/E-book

11 comments:

  1. cute-kids-29

    நல்ல பயனுள்ள மென்பொருள் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. 30534_389416873633_281457373633_4161670_3456288_n

    மிகவும் பயன் உள்ள தகவல் .......

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    பயனுள்ள மென்பொருள்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. blogger_logo_round_35
  5. blogger_logo_round_35

    Quite useful post... must to download for book readers.
    Join: www.stressandyou.in

    ReplyDelete
  6. 408667_274295222619615_1385548828_n

    பயனுள்ள தகவல்

    ReplyDelete
  7. DSC_0221

    நல்ல பதிவு..!!தரம்,விலை,சிறப்பம்சங்கள் இவற்றை கருத்தில் கொண்டு இந்த படிப்பான்களை வரிசைப்படுத்தி ஓர் பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் சகோதரி..!! :)

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    இன்றைய தலைமுறைக்கு தேவைப்படும் பயனுள்ளதை, உபயோகமானதை, எளுமையாக எடுத்து தமிழ் வழியில் தன் நடையில் அரிய தகவல்களை பலர் அறிய வைக்க ஆர்வத்துடன் படைத்து, பகிர்ந்துகொண்டு வரும் பொன்மலருக்கு நன்றிகள். மேலும் மேலும் மலரட்டும் கணினி மற்றும் கணினி தொழில்நுட்பம் சார்ந்த அரியவைகளை அறியவைக்கும் பக்கங்களாக பொன்மலரில்....!

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    மிகவும் பயனுள்ள தகவல்....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  10. 1077

    நைஸ் போஸ்ட் ..

    தேங்க்ஸ் ..

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    தமிழில் கிண்டில். விகடனை கிண்டிலில் வாசிக்க...
    http://kindlevikatan.wordpress.com/

    ReplyDelete