Sep 7, 2011

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்


free+sms+softwareஇலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.


பின்னர் இந்த தளத்திலேயே சென்று இந்தியாவில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக SMS அனுப்பலாம். இத்தளத்தில் அதிகமாக இடம் முழுவதும் நிறைக்கிற மாதிரி விளம்பரங்கள் காணப்படுவதால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். அது மட்டுமின்றி அந்த தளத்தில் நுழையாமலே SMS அனுப்புகிற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதற்காகத் தான் ஒரு இலவச மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறோம்.

இதைப் பயன்படுத்த நெட் வசதி இருந்தால் போதும். இந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய Way2sms கணக்கின் username/ Mobile no மற்றும் Password கொடுத்தால் போதும். கனெக்ட் ஆகிவிடும். பின்னர் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லாமலே டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானலும் இலவசமாக SMS அனுப்பலாம்.

way2sms+client+software

இதில் 140 எழுத்துகளுக்குள் அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு நம்பரையும் Semicolon(;) போட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த மென்பொருளிலேயே நண்பர்களின் மொபைல் எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இதனால் எளிமையாகவும் வேகமாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download way2sms Desktop client (700 kb only)

இதைப் பயன்படுத்த கணிணியில் மைக்ரோசாப்டின் டாட் நெட் சப்போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 7 பயன்படுத்துவர்களுக்கு டாட் நெட் வசதி அதிலேயே இருக்கும். முதலில் SMS Client மென்பொருளைத் தரவிறக்கி ஓபன் செய்யுங்கள். மென்பொருள் திறக்காவிட்டால் டாட் நெட் கீழே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள். Download Microsoft dot net framework 4

தொடர்புடைய பதிவு:
உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

35 comments:

  1. .com/img/b/R29vZ2xl/AVvXsEhFR8Lm48-zLufazGvDHymR1II3zfZwBMOFCGTJ-KRTqSlR3GBFrINViQdwQyfSaaSClOVmWXV0xztX8SUX78phAP9C9Hl1_w05W-T3ELNeRNmXNTg9jwd0M2d2vmMaBPk/s45-c/

    Wow ! Great ma. This would be convenient for sending national sms freely, in case we are charged by the network provider.

    Thank you..

    ReplyDelete
  2. blank

    நல்ல உபயோகமான பதிவு, நான் ஏற்கனவே இதனை பற்றி எழுதியிருந்தேன், தளம் பிரபலமடையாததால் இடுகையும் வெளியில் தெரியாமலே போய்விட்டது... நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் இந்த மென்பொருளை பற்றி அனைவரும் அறிந்து கொள்வார்கள்.. நன்றி...

    இன்று என் வலையில் நெருப்பு நரி ஜாலங்கள் http://vigneshms.blogspot.com/2011/09/blog-post_07.html.

    ReplyDelete
  3. arun_profile

    ஒரே நேரத்துல எத்தனை நம்பர் வரைக்கும் மேசேஜ் அனுப்பலாம் தல!?

    ReplyDelete
  4. arun_profile

    //You must install the 32-bit Windows Imaging Component (WIC) before you run Setup. Please visit the Microsoft Download Center to install WIC, and then rerun Setup.

    //


    டாட் நெட் இன்ஸ்டால் பண்ணா இப்படி சொல்லுதே தல!

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    //வால் பையன்

    what os you r using

    ReplyDelete
  6. arun_profile
  7. blogger_logo_round_35

    அதையும் போட்டுப் பாருங்கள் வால்பையன். வேலை செய்யலாம். என்னுடையது விண்டோஸ் 7.

    தற்போதைய டாட் நெட் பிரேம்வொர்க் 4 மற்றும் முந்தைய பதிப்புகளையும் காண & தரவிறக்க
    http://www.filehippo.com/download_dotnet_framework_4/

    ReplyDelete
  8. arun_profile

    டவுன்லோடு பண்ணிகிட்டு இருக்கேன் தல!

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    எதை டவுன்லோடு பண்ணிட்டு இருக்கிங்க

    ReplyDelete
  10. arun_profile

    3.5 வெர்ஷன்

    ஆன்லைனில் இன்ஸ்டால் ஆவுது!

    இது ஆகிட்டா, அந்த மெசேஜ் சாஃப்ட்வேரை பண்ணிடலாம் தானே!

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    3.5 பதிப்பு கொஞ்சம் சைஸ் பெரிசு. ரொம்ப நேரம் ஆகுமே. உங்க கணிணியில ஏற்கனவே டாட் நெட் இருக்கான்னு பாத்திங்களா?

    Control panel -> Add/Remove programs போனிங்கன்னா M வரிசையில வரும். அதில Microsoft dot net framework என்ன போட்டிருக்குனு காட்டும். அது சுத்தமா இல்லனா கண்டிப்பா போட்டுத் தான் ஆகணும்

    ReplyDelete
  12. arun_profile

    இருந்தா இன்ஸ்டால் ஆகியிருக்கனுமேங்க!
    அதான் ஆவலையே!

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    இதுக்கு நீங்க அது சொன்னதை முதலில் போட்டு விட்டு பின்னர் டாட் நெட் 4 ஐப் போடலாம் நண்பரே

    //You must install the 32-bit Windows Imaging Component (WIC) before you run Setup. Please visit the Microsoft Download Center to install WIC, and then rerun Setup.

    ReplyDelete
  14. arun_profile

    முடியாது சொல்லுச்சுங்களே!

    ReplyDelete
  15. blogger_logo_round_35

    இந்த Sms software இன்ஸ்டால் பண்ணத்தேவையில்ல. டவுன்லோடு பண்ணி ஓபன் பண்ணா போதும். அப்படி ஓபன் ஆக்லனா டாட் நெட் இல்லன்னு அர்த்தம்.

    அதே மாதிரி டாட் நெட் எதுவுமே கம்ப்யூட்டர்ல இல்லாம நேரடியாக 4 ம் பதிப்புக்கு போக முடியாதுன்னு நினைக்கிறேன். நீங்க 3.5 ஐ ஓட்டுங்க

    ReplyDelete
  16. arun_profile

    அப்படியும் எதாவது பிரச்சனைன்னா சொல்றேன் தலைவா

    ReplyDelete
  17. blogger_logo_round_35

    கண்டிப்பா வொர்க் ஆகும் நண்பரே. இந்த டாட் நெட்டைப் பத்தி அடுத்து ஒரு பதிவு எழுதணும் போல.

    ReplyDelete
  18. Education_cap

    சூப்பர்... நான் ஏற்கனவே Way2sms.com இதான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்...

    இதற்கும் மென்பொருள் இருக்கா ரொம்ப நன்றிங்க பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு...

    ReplyDelete
  19. Earth+is+our+child
  20. blogger_logo_round_35

    //Heart Rider

    No Problem. Thanks

    ReplyDelete
  21. blogger_logo_round_35

    payanulla thagaval but this is only for India or international usage

    kumaran

    ReplyDelete
  22. blogger_logo_round_35

    try பன்றேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  23. -H

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. 40768654_2299775236716239_6505113035084922880_n

    பலருக்கும் பயனளிக்கும் தகவல்..

    அருமை

    ReplyDelete
  25. blogger_logo_round_35

    www.160by2.com இது வெளிநாடுகளுக்கும் sms அனுப்பலாம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  26. blank

    மிகவும் பயனுள்ள தகவலை தந்த பொன்மலர் அவர்களுக்கு நன்றிகள் .பாராட்டுக்கள் .
    www.kalvisolai.com

    ReplyDelete
  27. blank

    மிகவும் பயனுள்ள தகவல்களை ப் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்

    ReplyDelete
  28. blank

    இதே பதிவை வேறொரு தளத்தில் பார்த்தேன் காப்பி பண்ணியிருக்காங்களா

    ReplyDelete
  29. blogger_logo_round_35

    இதைத்தான் தேடினேன் நன்றி சகோ.

    ReplyDelete
  30. blogger_logo_round_35

    மிகவும் அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  31. blogger_logo_round_35

    பயனுள்ள பகிர்வு நன்றி !

    ReplyDelete
  32. blank
  33. blogger_logo_round_35

    Dear Admin, I used ur way2sms software unfortunately, the sms not received to india mobile what can i do??

    ReplyDelete
  34. blogger_logo_round_35

    Dear Admin, i use your way2sms software unfotunately, the msg not reach to india number, if i use way2sms website to send msg it reached to my india mobile. Please let us know whats wrong with your soft or my side ??

    ReplyDelete
  35. 382835_143741819074867_2028583490_n