Sep 10, 2011

ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன்படுத்த


கூகிளின் பிளாக்கர் சேவை மூலம் இணையத்தில் நமக்கென வலைப்பதிவை உருவாக்கி கருத்துகளைப் பதிவிட்டு வருகிறோம். பிளாக்கரில் பதிவிட இணையவசதி இருக்கும் கணிணியிலே தான் பயன்படுத்த முடியும். மொபைல் மற்றும் டேப்ளட் பிசி (Tablet Pc) போன்ற இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய கருவிகளில் வலைப்பூக்களைப் பார்க்க முடிந்தாலும் பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி புதிய பதிவுகளை இடும் வசதியின்றி இருந்தது. தற்போது கூகிள் அதிகாரப்பூர்வமாக பிளாக்கர் தளத்தை ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான iOS இல் இயங்கும் ஐபோன்/ஐபேடுகளில் இயங்கக் கூடிய வண்ணம் செயலியாக வெளியிட்டுள்ளது.

Blogger app for iOS :

இந்த பிளாக்கர் செயலியை ஐபோன்/ஐபேடில் நிறுவி புதிய பதிவுகளைப் பதிவிட முடியும். டிராப்ட் ஆக பதிவுகளைச் சேமித்தும் வைக்கலாம். நீங்கள் கணிணியில் பதிவை அடித்து வைத்து பாதியில் வைத்திருந்தாலும் மிச்சத்தை இதிலிருந்தே Edit செய்து வெளியிடலாம். இவை இணையத்தில் Sync ஆகிக்கொள்வதால் இரண்டிலும் பயன்படுத்தலாம். இந்த செயலியில் பிளாக்கரின் புதிய வெர்சன் பயன்படுத்தப் பட்டுள்ளது.
புகைப்படங்களை அப்லோடு செய்வதும் எளிதானது. உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை ஏற்றலாம் அல்லது புதிய புகைப்படங்களை நேரடியாக கேமராவின் மூலம் எடுத்தும் அப்லோடு செய்யலாம். மேலும் பதிவுகளுக்கு Label மற்றும் Location சேர்க்கும் வசதியும் இருக்கிறது.

இதனை iOS பதிப்பு 3.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் ஆப்பிளின் Appstore லிருந்து தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இந்த செயலியின் இடைமுகம் (User interface) தற்போது ஆங்கிலத்தில் தான் இருக்கும். மற்றபடி நமது மொழிகளில் பதிவிட எந்த தடையும் இல்லை.

இதில் வாசகர்களின் கமெண்ட்களை பார்ப்பதற்கும், Comment Moderation செய்தவர்களுக்கு அதனைப் பார்த்து வெளியிடுவதற்குமான வசதி தற்போது இல்லை என்பது வருத்தமான விசயம்.

தரவிறக்கச்சுட்டி: http://itunes.apple.com/us/app/blogger/id459407288

Blogger in Android Devices :

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மொபைல்/டேப்ளட் பிசி கருவிகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் முண்ண்ணியில் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பிளாக்கர் செயலியை கூகிள் முன்னரே கடந்த பிப்ரவரியிலேயே வெளியிட்டு விட்டனர். இதனை ஆண்ட்ராய்டு மார்க்கெட்டிலிருந்து தரவிறக்கலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download Blogger App for Android

Wordpress :

Wordpress இல் பதிவிட்டு வருபவர்களும் இந்த மாதிரி மொபைல்/டேப்ளட் பிசிகளில் வேர்ட்பிரஸ் பயன்படுத்த இரண்டு செயலிகள் இணையத்தில் இருக்கின்றன.

டிஸ்கி: இந்த பதிவு என்னுடைய 200 வது பதிவு.என்னுடைய பதிவுகளைப் படிக்கும் நண்பர்களுக்கும் தவறாமல் ஓட்டுப்போட்டும் கருத்து தெரிவிக்கும் அன்பு நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள்.

29 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சகோதரி! 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி அப்துல் பாசித்

    ReplyDelete
  3. இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லோருக்கும் தேவையானப்பதிவு...

    ReplyDelete
  5. 200வது பதிவுக்கு வாழ்த்துகள் சகோதரி..!! :)

    ReplyDelete
  6. ஆனால் தமிழில் எப்படி எழுதுவது? காபி பேஸ்ட்தான் பண்ணலாம்.

    ReplyDelete
  7. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  9. நைஸ் போஸ்ட்

    தேங்க்ஸ் .......

    ReplyDelete
  10. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சகோதரி

    ReplyDelete
  12. உங்களது 200வது பதிவை வெளியிட்டத்திற்கு எனது வாழ்த்துகள்.பதிவை படித்தேன் நன்றாக உள்ளது.”ஆண்ராயிடு மொபிலில் உள்ள அற்புதங்கள்” என்னும் தலைப்பில் என்னுடைய ப்பிளாக்கில் ஆண்ராயிடு பற்றிய தகவல்களை வெளியிட்டுயிருக்கிறென் வருகை தருமாறு அனைவரையும் கேட்டு கொள்ளுகிறேன்.
    malaithural.blogspot.com

    ReplyDelete
  13. தயவு செய்து உங்கள் ப்பிளாக்கில் உரிமையாளர் ஒப்புதளை நீக்கவும்.இது உங்களுக்கு தெரியாது இல்லை.ஏன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை உங்களுக்கு!நேசமுடன் அ.ஆரிப் -மழைதூரல்

    ReplyDelete
  14. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!!பயனுள்ள பகிர்வு..! 200 முன்னூறாகட்டும். தொடர்ந்து பதிவுலகில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  15. 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/gmailblogger-2.html

    ReplyDelete
  16. சூப்பர்.... பயனுள்ள தொழிநுட்ப தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றிங்க ஐபோனில் இதுவரைக்கும் பதிவுகளை வாசித்து வந்தேன் இனி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்திப்பார்க்கிறேன் நன்றி!

    ReplyDelete
  17. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் பல பயனுள்ள படைப்புகளை வழங்க மீண்டும் வாழ்த்துக்கள்!

    தொடர்ந்து கலக்குங்க.... :)

    ReplyDelete
  18. மிகவும் உபயோகமான பதிவுதான், என்ன ஆன்ட்ராய்டு ஐபோன் தான் வாங்க முடியல,

    உங்களுடைய 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  19. நன்றி சௌந்தர், நிமல்த், சேலம் தேவா

    ReplyDelete
  20. //ramalingam,
    ஆனால் தமிழில் எப்படி எழுதுவது? காபி பேஸ்ட்தான் பண்ணலாம்.//

    இதற்கென சில செயலிகள்/Apps இருக்கின்றன. இதைப்பற்றியும் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  21. //நன்றி ரத்னவேல்
    //நன்றி K.s.s.Rajh
    //நன்றி ஸ்டாலின்
    //நன்றி karurkirukkan
    //நன்றி மாய உலகம்
    //நன்றி காந்தி பனங்கூர்

    ReplyDelete
  22. //நன்றி மழைத்தூறல்.
    //நன்றி தங்கம்பழனி
    //நன்றி ghss-uchinatham
    //நன்றி கணிணி மஞ்சம்
    //நன்றி மாணவன்
    //நன்றி Heartrider

    ReplyDelete
  23. மாய உலகம் said...
    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றி சகோதரி! 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete
  25. 200 வது பதிவிற்கு உளப்பூர்வமான வழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள், எங்களுக்கு உதவுங்கள்.

    மென் திறங்களை வளர்த்துக்கொள்ள இதிலும் இணைந்திருங்கள். www.stressandyou.in, http://mathisviews.blogspot.com

    ReplyDelete
  26. Unga blog romba nalla iruku. very useful info about mobile blogging unsing apple iphone & android phones.

    Thanks Lot! keep it up!


    99 ரூபா பூஸ்டர் பேக் போடுங்க! 30 நாளைக்கு நான் ஸ்டாப் அ பேசுங்க!
    மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

    ReplyDelete