Oct 10, 2009

வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

19 Comments
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.


இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :

Firefox
Internet Explorer
Safari
Google Chrome
Opera
Flock

இதன் தரவிறக்கச்சுட்டி : http://www.favbrowser.com/backup/
நன்றி!
Read More

Sep 26, 2009

முத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்

20 Comments
டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்
மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுட்டிகளை தேடிப்பிடித்து விட்டேன். உங்களுக்கும் உபயோகப்படுமல்லவா?

இவற்றில் ஒரு வசதி உள்ளது. கையடக்க மென்பொருளை விரித்து
( Extract ) கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே அதன் .Exe கோப்பை இயக்கி பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு
சென்று பயன்படுத்தலாம். அவசரத்திற்கு கண்டிப்பாக பயன்படும். உங்கள் நண்பரின் கணினியில் photoshop இல்லாவிட்டாலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இயக்கி படங்களை பார்வை இடலாம். மாற்றங்கள் செய்யலாம்.

Corel Draw X3 ( 34 MB )


தரவிறக்கசுட்டி:
http://www.4shared.com/file/25523572/dedbf292/PORTABLE_CorelDRAW_X3_with_SP2.html


Adobe Photoshop CS4 ( 68 MB )

தரவிறக்கசுட்டி:
http://ezuploads.info/dll/jd39ky
Password : www.fullandfree.info

Adobe Pagemaker 7.02 (50 MB)தரவிறக்கசுட்டி:
http://www.megaupload.com/?d=CGQWJ6YX

நன்றி!
Read More

Sep 21, 2009

கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்

3 Comments
உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.

1. FileStomp

2. Nippy Zip

3. WobZip

இன்றைய சுதந்திர மென்பொருள் : Mozilla Thunderbird

இது Outlook Express , MS-Outlook போல ஒரு POP3 மின்னஞ்சல் நிர்வாக மென்பொருள் (POP3 Email Client Application ) ஆகும். இது புகழ் பெற்ற Mozilla நிறுவனத்தின் மென்பொருள். இதில் உள்ள வசதிகள் :


Message Tagging
Improved Search
Advanced Folder Views
Add-ons Manager for Extensions and Themes
Phishing Protection
Automated Update

தரவிறக்கசுட்டி :http://www.mozillamessaging.com/en-US/thunderbird/
நன்றி !
Read More

கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்

23 Comments
கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது
அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.


ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.

ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்கு
OpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.


ஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா ? சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன? சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர். அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.

பிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில்
உள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.

ஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றே
தோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்களை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?

எனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.

இனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.

லினக்ஸ் வழங்கல்களை பார்க்கவும் தரவிறக்கம் செய்யவும் இந்த வலைப்பக்கத்தில் செல்லுங்கள். http://iso.linuxquestions.org/

சுதந்திர இலவச மென்பொருள்களின் பட்டியல் :
http://en.wikipedia.org/wiki/List_of_open_source_software_packages

சாய்தாசனின் லினக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை:
இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு


லினக்ஸ் பற்றிய தமிழ் வலைப்பூக்கள் :

http://kumarlinux.blogspot.com/


http://suthanthira-ilavasa-menporul.blogspot.com

http://ubuntuintamil.blogspot.com/

http://fedoraintamil.blogspot.com/

http://blog.ravidreams.net/2007/04/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html

http://tamilgnu.blogspot.com


http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t1096.html

http://suryakannan.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

http://www.getittamil.com/index.php?view=article&catid=60%3A2008-11-11-00-36-52&id=128%3A-linux-distribution&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=70


http://www.hisubash.com/tblog/?p=387

நண்பர்களே உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பதிவு செய்யவும். நன்றி.
Read More

Sep 17, 2009

விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு

3 Comments

மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.


மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட் செய்யலாம். இந்த லைவ் பதிப்பு விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும். இதன் தரவிரக்கசுட்டி :
Download Windows Live Movie Maker

விண்டோஸ் XP வைத்திருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
http://www.microsoft.com/windowsxp/downloads/updates/moviemaker2.mspx

Read More

Sep 5, 2009

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்

17 Comments
நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.


இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம்.

முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே.நன்றி.

தரவிறக்கச்சுட்டி : http://www.aoamedia.com/audioextractor.exe
Read More

Aug 31, 2009

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்

17 Comments

பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster

தரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/

2.Cd Recovery Tool boxதரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

3. CDCheck

தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/download.php

நன்றி!
Read More

Aug 26, 2009

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

23 Comments
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser


தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download

2.Kill Disk

தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/
நன்றி வணக்கம் !

தொடர்புடைய பதிவு :
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
Read More

Aug 20, 2009

கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

11 Comments
கணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ?

டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?

கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,

Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்

இவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.

Double Driver


நீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.

இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.

நன்மைகள் :

1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.
2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
3. இலவச மென்பொருள்.
4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.
Read More

Aug 17, 2009

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

16 Comments
Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். நன்றி!
Read More

Aug 13, 2009

பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2

8 Comments


1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.
பணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.

2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு
எண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.

3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்
ஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading
கணக்கிலேயே இருக்கும்.

4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்
போதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை
வாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.
இவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.
குறைந்த அளவு தான் இருக்கும்.

5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்
உங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா
என்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.

http://www.cdslindia.com/publication/dplist.jsp

6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்
வசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்
நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

State Bank of India Demat :http://demat.sbi.co.in/index.jsp
Icici Direct : http://www.icicidirect.com/

பங்குசந்தையின் சில நுட்பங்கள் :

1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO
( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,
ஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லது ஒரே பங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து
முதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங்களுக்கு
சோதனை வராது.

5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்
தான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா ? இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல
லாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.

எப்படி என்று பார்ப்போம் .

உதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா? வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்கு 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு
500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.

நீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.

6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்
நீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .
இவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.

Mutual Fund பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள் :

1. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள்
- 1
2. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே! நன்றி.
Read More

Aug 7, 2009

பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1

19 Comments


பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்
எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்
பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்
கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு
எழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்
என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
:

முதலில்
செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது
புரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட
முடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்
பேசியோ கற்றுக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான
நடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன் உள்ளது. இந்த
தளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
http://pangusanthai.com/


எனக்கு
தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய "அள்ள அள்ளப்பணம் " என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடிய சொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால் மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.

இந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :
http://thoughtsintamil.blogspot.com/2005/01/blog-post_04.html

இந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க : http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html

2. Pan card பெறுதல் :

PAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

அடுத்தது
நீங்கள் PAN Card ( Permanent Account Number ) வருமான வரி எண்
அட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.

தேவையான சான்றுகள் :

1. ஒரு 2.5 width X 3.5 height inch புகைப்படம்
2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )
3. உங்கள் புகைப்படம் உள்ள சான்று ( Voter Identity or Driving license )இதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.
https://tin.tin.nsdl.com/pan/index.html

இந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு "NSDL - PAN" என்ற பெயருக்கு Demand draft அல்லது
Cheque எடுத்து கொள்ளவும்.


3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )
கணக்கு
தொடங்குதல் :

டீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

நமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.

உங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
இங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.

Trading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.
Demat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.

இதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது
உங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்
Power of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்
விற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.

தேவையான சான்றுகள் :

1. Pan card
2. Ration card
3. Bank Passbook

அடுத்த பாகத்தில் மீண்டும் தொடர்கிறேன்.பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் . நன்றி.


தொடர்புடைய பதிவு :

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

Read More

Jul 31, 2009

My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...

7 Comments
உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.

ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?

1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
கொடுக்கலாம்.

3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.

D:\My documents

4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி!
Read More

Jul 27, 2009

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்

10 Comments
புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

1. Sequrity Update களை நிறுவுங்கள்.உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது தானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updates செல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுது விண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :

Update for Windows XP (KB932823)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85

Security Update for Windows XP (KB958644)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=0d5f9b6e-9265-44b9-a376-2067b73d6a03

Security Update for Windows XP (KB961371)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6914167b-6961-480c-a4d4-808cd58a035b

Windows Malicious Software Removal Tool
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356

Malware Removal Starter Kit
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=6cd853ce-f349-4a18-a14f-c99b64adfbea

மேலும் உங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர். இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.


ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர் (Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.

மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். எல்லாவற்றையும் நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். இதை தவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை. மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். இது ஒரு நல்ல மென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க , மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின் பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையான எளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள் கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்கு எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.

5. Hard Disk படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். இதன் மூலம் அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. ஏன் என்றால் எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. இதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.


இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால் பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும் பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்து என்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. இதனால் வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். மேலும் தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol
Read More