Jul 6, 2009

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

R-Linux Recovery



இதன் தரவிறக்க சுட்டி : RLinux

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.

இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :

Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3


நன்றி!

15 comments:

  1. நல்ல உபயோகமான பதிவு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு...

    வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. உபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
    யூத்துக்கும் வாழ்த்து!

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  5. பதிவு அருமை. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    இது மாதிரி கையடக்க தொலைபேசியின் நினைவகத்தில் உள்ள தொலைபேசி நம்பவர்கள் அழித்தால் திரும்ப பெற முடியுமா?

    நன்றி
    பாரிஸ்

    ReplyDelete
  6. வணக்கம், எனது கணினியில் உள்ள ஒரு excel file sheet தவறுதலாக replace செய்து விட்டேன். மறுபடியும் ஏற்கனவே இருந்த sheet retrive செய்ய இயலுமா?

    ReplyDelete
  7. வணக்கம், எனது கணினியில் உள்ள ஒரு excel file sheet தவறுதலாக replace செய்து விட்டேன். மறுபடியும் ஏற்கனவே இருந்த sheet retrive செய்ய இயலுமா?

    ReplyDelete
  8. அருமையான பதிவு நன்றி,

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு. நன்றி! ஆனால் இதில் 'லினக்ஸ்' என இருக்கிறதே, இது விண்டோஸ் இயக்குத்தளத்தில் பயன்படுமா?

    ReplyDelete
  10. sir,i'm aziz. nan ennudaya hard disc il iruntha program files thavaruthalaha azhithu vitten.athil free internet down load manager oru soft ware. athanai ennudaya nanpar oruvaridam irunthu petru konden. athe soft ware nan meendum down load seyyum pothu serial no. ketkirathu enakku theriya villai, thatpothu ennudaya nanparum illai. athe soft ware eppadi free nan install seyvathu?

    ReplyDelete
  11. நல்ல தகவல்.
    நன்றி!

    ReplyDelete
  12. உங்கள் உதவிக்கு நன்றி

    ReplyDelete
  13. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/blog-post_13.html?showComment=1402631677376#c4771738721863922113
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete