Jul 14, 2009

உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்!

உங்கள் கணினியில் வைரஸ்களின் தொல்லை வந்தால் நீங்கள் கண்டிப்பாய்
ஒரு ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை நாடுவீர்கள். ஆனால் உங்களின் ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் எல்லாவிதமான வைரஸ்களையும் அழித்துவிடும் என்று சொல்ல முடியாது.வேறு ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் பழையதை நீக்கி புதியதை நிறுவ வேண்டும். இப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவாமலே இயக்கலாம் என்றால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம் McAfee, Sophos, Kaspersky மற்றும் Trend engine ஆகிய இந்த நான்கு ஆன்ட்டிவைரஸ் மென்பொருள்களையும் நீங்கள் ஒரே நேரத்தில் கணினியை சோதிக்க பயன்படுத்தலாம். நீங்கள் இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதை இயக்கும் போது இவை தானாக புதிய அப்டேட் பைல்களை இறக்கிக்கொள்ளும். இதற்கு மட்டும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

இதைப்பெற : Multi-AV Scanner

1.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்.
2. "Multi_AV.Exe " என்ற கோப்பை கிளிக் செய்தால் அது C:\AV-CLS என்ற முகவரியில் சேமிக்கப்படும்.
3. அந்த போல்டரில் உள்ள Startmenu.bat அல்லது Start menu.exe என்ற கோப்பை கிளிக் செய்தால் மென்பொருளின் முதற்பக்கம் திறக்கப்படும்.

multi-av-scanning-tool
இந்த மென்பொருளில் இரண்டு விதமான முறைகள் உள்ளன.

1. ஒன்று சோதிக்க மட்டும் ( Scan only ) - இதற்கு D அழுத்தவும்
2. சோதிக்க மற்றும் அழிக்க ( Scan and Remove ) - இதற்கு R அழுத்தவும்.

பின்னர் நீங்கள் விரும்பும் ஆண்டிவைரஸ் மென்பொருளின் எண்ணைஅழுத்தினாலே போதும். உடனடியாக வைரஸ் அப்டேட் பைலை இறக்கிவிட்டு ஸ்கேன் பண்ண ஆரம்பித்துவிடும். இதில் Trend Micro மென்பொருள் மட்டும் தனி இடைமுகம் கொண்டுள்ளது. ( User Interface ).

sophos-directory-to-scan
உதாரணமாக நீங்கள் Sophos AV ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இயக்க வேண்டுமெனில் 1 என்ற எண்ணை அழுத்தினாலே போதும். பின்னர் அது ஸ்கேன் செய்யவா என்று கேட்கும். அதற்கு Ok கொடுக்கவும். பின்னர் உங்களுக்கு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்கிறிர்களா என்று கேட்கும். உங்கள் விருப்பத்தை கொடுத்தால் ஸ்கேன் பண்ண ஆரம்பித்து விடும்.
பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே!

இதைப்பெற : Multi-AV Scanner

11 comments:

  1. வேலன்.

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. blank

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி மிக நல்ல உபயோகமான பதிவு
    என்னுடைய கணனியில் kaspersky இருக்கிறது இதைப்போட்டால் கணனியின் வேகத்தில் ஏதாவது பிரச்சனை வருமா? எப்படி கையாள்வது
    தெரயப்படுத்தவும்
    நன்றி

    ReplyDelete
  3. goutham

    மிகவும் பயனுள்ள பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    Very useful information for all especially the internet users.

    Thank you very much.

    With Regards,
    S. Karthi.

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    //உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி மிக நல்ல உபயோகமான பதிவு
    என்னுடைய கணனியில் kaspersky இருக்கிறது இதைப்போட்டால் கணனியின் வேகத்தில் ஏதாவது பிரச்சனை வருமா? எப்படி கையாள்வது
    தெரயப்படுத்தவும்//

    கண்டிப்பாய் எந்த சிக்கலும் வரப்போவதில்லை. முதலில் R அழுத்திவிட்டு எந்த ஆண்டிவைரஸ் தேவையோ அதன் எண்ணை அழுத்தவும்.

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    இதுநாள் வரை என் பொறுமையை சோதிச்ச கம்ப்யூட்டர் ஐ, இன்று நான் அதை சோதிக்கப்போறேன் :-)

    தகவலுக்கு நன்றி !

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    நன்றி பொன்மலர் ...

    சில சந்தேகங்கள்...

    மென்பொருள் எந்த அடிப்படையில் இயங்குகிறது ?

    whether it will download antivirus definitions from McAfee, Sophos, Kaspersky and Trend engine ?

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    // ரெட்மகி said...

    நன்றி பொன்மலர் ...

    சில சந்தேகங்கள்...

    மென்பொருள் எந்த அடிப்படையில் இயங்குகிறது ?

    whether it will download antivirus definitions from McAfee, Sophos, Kaspersky and Trend engine ?

    //

    whatever u click, that antivirus will download its updates. this will not download the all of the software's updates. whatever u want u click first , then automatically updating is start .


    if u satisfy in any one of these, u skip or go to ur another work.otherwise u can try all of these if u have internet. thanks for comments

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    அய்யா நான் தங்களின் direction படி எனது பிசியில் செய்து பார்த்தேன்.. சரி வரவில்லை.. நிற்க.. எனது பிசி விண்டோஸ் எக்ஸ்பி நார்டன் ஆன்டி வைரஸ் போட்டுள்ளேன் டவுண்லோட் செய்து.. ஆனால் அது சில தினங்கள் மட்டுமே என்று சொல்லுகிறது.. நிரந்தரமாக எவ்வாறு அன்டி வைரஸ் போட்டுக் கொள்வது என்பதை prabhabadri@rediffmail.com என்ற முகவரிக்கு தகவல் தரும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது பிசி irctc website open ஆக மறுக்கிறது. எனது நண்பன் வைரஸ் இருக்கலாம் என்கிறேன்.. தயவு செய்து விளக்கவும் நன்றி
    அன்பன்
    பத்ரிநாத்

    ReplyDelete
  10. blank

    http://www.eggheadcafe.com/software/aspnet/29360665/multiavexe-caused-probl.aspx

    first read this and try

    ReplyDelete
  11. blank