May 30, 2009

Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்

4 Comments

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?

இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில்
உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய
எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில்
எழுதப்பட்டுள்ள
முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )
இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe

icon=autorun.ico

இது என்ன வைரஸா ?

நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு
டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.
பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்
கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை
சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.


இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,

1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.

Registry Disabled,

Task manager Disabled,

Enable Folders options

Enable run

Enable command prompt

மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.

3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)


இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.
இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்
மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை
பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!



தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )

Smart virus Remover
Read More

May 29, 2009

கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

9 Comments
நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்
தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது
வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு
பயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்
மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,

1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற
மொழிகளிலும்
செய்யல்படுகிறது.
7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.

இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.

Internet Explorer பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites
என்பதை சொடுக்கவும்.


2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு
கீழே அமர்ந்து விடும்.


இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.




Firfox பயனர்களுக்கு :

1. [ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.


2. Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை :

உங்கள் உலவியில் உள்ள [ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால்
கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில்
உள்ள எந்த உரைப்பெட்டியிலும் என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.



மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை
சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.

மேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற
மொழிகளின்
இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html
Read More

May 28, 2009

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்

5 Comments
கணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.
மேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.


இணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள்.


1. CamStudio


உங்கள் கணினியின் ஒவ்வொரு நிகழ்வையும் படமாகவும்
ஒலியையும்
பதிவு செய்யக்கூடியது. AVI கோப்புகளாகவும்
SWF கோப்புகளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.

http://camstudio.org/


2. Jing

இதில் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

http://www.jingproject.com/

3.Webinaria


http://www.webinaria.com/


4.Utipu tipcam

http://www.utipu.com/

5.
KRUT


http://krut.sourceforge.net/

6.CaptureFox ( Firefox add-on)


இது ஒரு பயர்பாக்ஸ் இணைப்பானாகும்.
http://www.advancity.net/eng/products/capturefox.html

7.BB FlashBack Express


http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx

8.Windows Media Encoder


இது ஒரு திறன் வாய்ந்த மென்பொருள். இது துல்லியமான
ஒலியுடனும் நல்ல ஒளிக்காட்சியுடனும் பதிவு செய்ய உதவுகிறது.

http://www.microsoft.com/windows/windowsmedia/forpros/encoder/default.mspx

9.UltraVnc Screen Recorder


http://www.uvnc.com/screenrecorder/

10.Wink



இதிலும் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
http://www.debugmode.com/wink/

இணையத்தளங்கள்:

இணையத்தில் ஆன்லைனில் இருக்கும் போது கூட படம்
பிடிக்கலாம். அவற்றில் சில தளங்கள்,

1. http://screencastle.com/
2. http://www.screentoaster.com/
3. http://goview.com/

Read More

May 2, 2009

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

11 Comments
நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்







தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்












இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:





இதைப்பற்றிய சில காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=XCcplgeQzrU

http://www.youtube.com/watch?v=ஹுய்ம்ன்ய்ரோத்ஜ்

மேலும் இதைப்பற்றி கார்த்திக்கின் ஒரு கட்டுரை
http://honey-tamil.blogspot.com/2009/03/udkaarum.html
Read More