Apr 4, 2010

50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்!


பதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வெகுநாளாய் இருந்தது. எங்கேயாவது சென்றாலும் நல்ல ஆசிரியரும் கிடைப்பதில்லை. பணமும் அதிகமாக வசூல் செய்வார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வலைப்பதிவு எழுதும் இவர்கள் தான் நினைவிற்கு வந்தனர்.

1.வேலன்.

பாடத்திட்டம் போல ஒவ்வொரு படிநிலையாக அருமையான படங்களுடன் விளக்குகிறார். கற்பதற்கும் இனிமையாக உள்ளது.மேலும் மாதிரிப்படங்கள் கூட இலவசமாக தருகிறார்.

2.புதுவை.காம் நித்தியானந்தம்


இவரும் அட்டகாசமான போட்டோஷாப் கட்டுரையாளர். அழகான மற்றும் அசத்தலான எஃபெக்ட்டுகளை பற்றி எழுதி வருகிறார். இவரின் பட விளக்கங்களும் அருமையாக உள்ளது.
மேலும் யாரேனும் இருந்தால் கருத்துரையில் சொல்லவும். யாராவது பிளாஷ் (Flash ) பற்றி எழுதினால் நலமாக இருக்கும்.நன்றி.
********* ********


சிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முறையில் செல்பேசி மூலம் படமாக எடுத்து நண்பர்களுக்கு காட்டியது மட்டுமன்றி இணையத்திலும் போட்டு விட்டான்.அந்த மாணவியின் நிலையை நினைத்துப்பாருங்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் காதலர்களாம். இதே போல் ஒரு பள்ளியின் படிக்கட்டிலேயே வைத்து பிளஸ்டூ படிக்கும்....

இதை விட இன்னொரு சம்பவம். காஞ்சிபுரம் கோயில் குருக்களின் காமக்கொடுரம். நான்கு பெண்களை கோயிலிலேயே வைத்து மனதைக்கெடுத்து அந்தரங்கத்தை படமாக எடுத்தது தான். இவற்றை எல்லாம் மிஞ்சிய விடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவிக்கிடைக்கின்றன. எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்கள் தான் ஏமாந்தோ அல்லது அலட்சியமாகவோ இருந்து உள்ளனர்.

இப்படி படம் எடுக்க உதவும் செல்பேசிகள் சந்தையில் 2000 ருபாய்க்கே கிடைக்கின்றன.அதுவும் தெளிவாக படம் எடுக்கும் வசதியோடு.மேலும் உளவு பார்க்கும் Spy Cameras மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.இவை பட்டன் வடிவிலோ பேனா மூடி வடிவிலோ மேலும் கண்ணுக்கு புலப்படாத வடிவில் கூட கிடைக்கின்றன. இவற்றை வைத்து படம் எடுப்பது சுலபமான வேலை தான். இவற்றைப்பற்றிய அதிர்ச்சியான விபரங்களுக்கு நண்பர் திரு.செல்வராஜ் எழுதிய கட்டுரையை காணுங்கள். http://www.tamilcatholican.com/2009/07/blog-post_07.html


பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

• உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.

• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.

• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!
********* ********

28 comments:

 1. முதலில் உங்கள் 50 ஆவது இடுகைக்கு வாழ்த்துகக்ள்.

  வேலன் சாருடைய பதிவுகள் நீங்கள் சொல்வது போல் வேலன் சார் பதிவுகள் ஒரு காசு கொடுக்காமல் கற்று கொள்ளுங்கள் ஒரு கம்பியுடர் சென்டர்.

  இரண்டாம் நபர் சென்று பார்க்கிறேன்.

  பெண்கள் வெப் கேமிரா விழிப்புணர்வு அருமை,

  பெண்க்ள் எங்கும் உஷாராக இருக்கனும்.

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு நன்றி ஜலிலா

  ReplyDelete
 3. முள்மேல் சேலை பட்டாலும், சேலை மேல் முள் பட்டாலும் சேலைக்கு தான் சேதாரம் என்னும் பழங்கருத்தை பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

  ஐம்பதாவது பதிவு அருமையான பதிவு. சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி... உங்கள் 50 ஆவது பதிவிற்கும் நன்றி... கேமிராபற்றியகட்டுரைஅருமை.........வாழ்க வளமுடன். வேலன்.

  ReplyDelete
 5. very nice write up
  but why people target girls so much as if camera is invented to capture them. This is a sort of great insecurity to the girls are concerned without thier knowledge their pictures in the internet. one more thing i want to say even the wedding photos of people are there in the internet so one avoid uploading family functions in orkut, facebook and other such sites. All that was a nice writeup.

  ReplyDelete
 6. வேலன் சார் உண்மையில் நடமாடும் பல்கலை .மேலும் நீங்கள் போட்டோஷாப் பற்றி படிக்க இந்த
  http://komanivarma.blogspot.com/
  தளத்தையும் வலம் வரலாம்.இது என்வலைத்தளமல்ல.
  என் வலைத்தளம்
  http://palanirahul.blogspot.com/

  ReplyDelete
 7. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் . மிக மிக உபயோகமான பதிவு.
  மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு!! 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மலர்!!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. தோழிக்கு வணக்கம்....
  முதலில் தங்களின் 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பல....

  போட்டோஷாப் என்றதும் என்னுடைய பெயரும் நினைவுக்கு வருகிறதா? இது கொஞ்சம் ஓவர்.... நாங்கள் போட்டோஷாப் கட்டுரைகள் மட்டும் வெளியிடவில்லை.....

  பலரின் விருப்பதிற்கிணங்க இனிமேல் போட்டோஷாப் கட்டுரைகளை அதிகமாக வெளியிட முயற்சிக்கின்றோம்........

  நன்றிகள் பல.......

  நித்தியானந்தம்,மோகனகிருஷ்ணன்
  அட்மின்கள்
  புதுவை.காம்

  ReplyDelete
 11. நல்ல பதிவு பொன்மலர்! தொழில்நுட்பத்தை மட்டும் எழுதுவதோடு நிற்காமல் இதைப்போல விழிப்புணர்வுள்ள பதிவுகளையும் எழுதுங்கள். ஆண்கள் எழுதுவதை விட பெண்களே இந்தமாதிரி பதிவுகளை எழுதுவது மிகவும் சிறப்பு!

  ReplyDelete
 12. 50 ஆவது பதிவு....

  வாழ்த்துகக்ள்.....


  பெண்கள் விழிப்புணர்வு...

  ReplyDelete
 13. மிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி

  எத்தனை பேர் இதனை படித்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போகிறார்களோ

  ReplyDelete
 14. ஸார், உங்க பதிவெல்லாம் சூப்பர். 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  என்ன சார் போட்டோஷாப் கத்துக்கிறது அவ்வளவு கஷ்டமா? கொஞ்ச நேரமும், நெறைய டெடிகேசனும் இருந்தா ஆறே மாதத்துல கத்துக்கலாம் ஸார்.

  இவளவு சின்னப்பையன் நானே நாலு வருஷத்துல போட்டோஷாப்ல மாஸ்டராயிட்டேன் ஸார். அதுக்குப் பிறகு, ரெண்டு வாரத்துல After Effects, ஒரு வாரத்துல Premiere, அப்பிடின்னு போய்கிட்டு இருக்கேன் சார். இப்போ மாயா கத்துக்கறேன் (அதுவும் self study தான்)(புக்ஸ் பாத்து கத்துக்கல). எப்பிடியும் ரெண்டு மாசத்துல முடிச்சுடுவேன்....

  உங்களால நிச்சயம் முடியும் சார். கிளாஸ் போய், மாஸ்டர்கிட்ட போய், புக்ஸ பாத்து கத்துக்கரத விட நாங்களா கத்துக்கறது தான் நினைவுல நிக்கும் சார்.

  ReplyDelete
 15. 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பொன்மலர், நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையானவையே. பெண்கள் மிகவும் கவனமாக இருங்கள். நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. This is shan

  hai pl see this blog

  photography-in-tamil.blogspot.com

  ReplyDelete
 17. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே,
  மேனகா சத்தியா, பழனி, எல்கே,நித்தி, வேலன், ராஜசூரியா, துபாய் ராஜா, ராஜா அண்ணாமலை, உலவு, செல்வராஜ், சிம்பு, ஆனந்தபாலன், கரிகாலன், சசிக்குமார்

  ReplyDelete
 18. அரைசதத்திற்கு வாழ்த்துக்கள்!

  நல்ல பகிர்வு

  ReplyDelete
 19. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் இது போல ஐநூறவது பதிவிற்கு நான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் நிறைய எழுதுங்கள் தோழி

  ReplyDelete
 20. என்னுடைய இந்த
  பதிவைக்கூட பெண்கள் படிப்பது நல்லது.

  ReplyDelete
 21. 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்.
  பெண்கள் எப்போதும் ஜாக்கிரதையாக தான் இறுக்க வேண்டி உள்ளது.

  உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 22. Congrats for your 50th post. Then as you mentioned i am the regular reader of Nithi. He is producing some good stuff. and also velan is writing good article for the beginners of photoshop.

  Dinesh,
  Sri Lanka.

  ReplyDelete
 23. சமூக அக்கறையுடனான உபயோகமான பதிவு.

  உங்களது அரை-சதத்திற்கு பாராட்டுக்கள் மற்றும் முழு-சதம் விரைவில் அடிக்க வாழ்த்துக்கள்!

  நன்றி!

  ReplyDelete
 24. உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. Reddiyur ExpressMay 9, 2011 at 1:50 PM

  முதலில் உங்கள் 50 ஆவது இடுகைக்கு வாழ்த்துகக்ள்

  மேலும் நீங்கள் போட்டோஷாப் பற்றி படிக்க இந்த
  http://tamilpctraining.blogspot.com/
  தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
  http://tamilpctraining.blogspot.com
  Alexa Rank 970,152

  ReplyDelete
 26. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இப்போது மூளையும் இல்லை என்று சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.

  ReplyDelete