Aug 16, 2010

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?

lovegmail
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.

இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள் கிடைக்கும். அதிலிருந்து Show Original என்பதை தேர்வு செய்யவும்.
options1உடனே வலையுலாவியில் இன்னொரு விண்டோ திறக்கப்படும். அதில் நமக்கு வந்த மின்னஞ்சலின் என்கோடிங் (Encoding)செய்யப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும்.

கீழ் உள்ள படத்தில் உள்ள வட்டமிட்டுள்ள பகுதியில் Received from என்ற வரியில்
நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை அனுப்பியவரின் ஐபி முகவரி எண் இருக்கும். அதை வைத்து ஒருவரின் ஐபி எண்ணை அறியலாம்.

ipnoஅந்த ஐபி எண்ணை வைத்து தகவல்கள் பெற உதவும் வலைதளங்களின்(Tracing websites) மூலம் அது எங்கிருந்து வந்தது, நாடு, செர்வர் பெயர் போன்ற தகவல்களையும் பெற முடியும். www.cqcounter.com/whois தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஐபி எண்ணை கொடுத்து மேலதிக விவரங்களை பெறலாம். நன்றி!

15 comments:

  1. blank
  2. mike-monster-inc

    மிக நல்ல தகவல்! வேண்டுமென்றே தேவையில்லாத மெயில்களை அனுப்பி பிரச்சினை செய்பவர்களை கண்டறிய நல்ல வழி! மிக்க நன்றி!

    ReplyDelete
  3. god%2Bmurugan-1
  4. god%2Bmurugan-1
  5. blogger_logo_round_35
  6. blogger_logo_round_35

    ஐபி முகவரியின் மேலதிக விபரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் உதவும்.

    ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள் - Portable Application :

    http://try2get.blogspot.com/2010/08/portable-application.html

    ReplyDelete
  7. blogger_logo_round_35
  8. blogger_logo_round_35
  9. gk

    இது போன்ற பதிவுகளால்,

    என் போன்ற தகவல் தொழில் நுட்ப அறிவு குறைந்தவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது .

    மென்மேலும் தொடரட்டும் உங்கள் தகவல் பரிமாற்றம்.

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    thanks sankar,sk,sathriyan,swamynathan,essar and jivasan

    ReplyDelete
  11. Me

    நல்ல பகிர்வுக்கு நன்றி :-)

    ReplyDelete
  12. vvmLTKC7YkvoswxhcGKjXoDj8qw4hU-u1Vnc1pzUYVMADC26-usfSUg_gTbLYup7

    This is a good one.. Thanks for the post...

    ReplyDelete
  13. blank

    Dear Thnks for your good informatio..but we cant find the private ip address location ..in this method we can find the only public ipaddess..if you know can you share how to find the private Ip address also ?

    By

    ReplyDelete
  14. blogger_logo_round_35

    உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. உங்கள் முயற்சி மேலும் வெற்றி அளிக்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. alagu

    பயனுள்ள தகவல்..

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete