Dec 17, 2011

Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்

10 Comments


முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

Dec 16, 2011

Google Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்திகளைத் தரவிறக்க

7 Comments

டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளமான Google Buzz ஐ 2009 இல் அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த சேவையானது கூகிள் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டதால் இதையும் சேர்த்து பலரும் பயன்படுத்துவார்கள் என கூகிள் எதிர்பார்த்தது. ஆனால் சில நாடுகளைத் தவிர இது பிரபலமாக வரமுடிய வில்லை. இதே காலகட்டத்தில் டுவிட்டரின் வளர்ச்சி அபரிதமாக சென்று கொண்டிருந்தது. டுவிட்டரில் போலவே சுட்டிகள், படங்கள், வீடியோக்கள் பகிரலாம் என்றாலும் இதில் டுவிட்டரின் 140 எழுத்துகள் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.
Read More

Dec 15, 2011

பேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க

6 Comments

முண்ணணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் இணையதளங்களில்/ பிளாக்கர் தளங்களில் Subscribe பட்டன் வைத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் பேஸ்புக்கின் Subscribe பட்டனைப் பயன்படுத்துவது குறித்து விளக்கியிருந்தேன். Subscribe என்பது என்னவென்றால் யாரென்று தெரியாத பலரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கத் தேவையில்லை. உங்களின் சுயவிவரப் பக்கத்தில் Subscribe செய்வதன் மூலம் வாசகராக இணைந்து நீங்கள் Public ஆக பகிரும் செய்திகளை மட்டும் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியும்.
Read More

Dec 3, 2011

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl

11 Comments

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.
Read More

Dec 1, 2011

கூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)

7 Comments

நமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.
Read More

Nov 22, 2011

கூகிள் பிளஸில் Chatting வசதி அறிமுகம்

10 Comments

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகிள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது. தற்போது வரை நமது கூகிள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகிள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை (Chatting) கொண்டு வந்திருக்கிறது.
Read More

Nov 20, 2011

புகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip

13 Comments

நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள்.
Read More

Nov 11, 2011

கூகிள்+ பேஜை தேடுதலில் கொண்டு வர Direct Connect வசதி

15 Comments

கூகிள் பிளஸில் பக்கம் (Google+ Pages) உருவாக்குவது பற்றி அறிந்திருப்பீர்கள். இது பேஸ்புக்கின் ரசிகர் பக்கம் (Facebook Fan Page) செயல்படும் விதம் போன்றதே. நமது தளத்தின் வாசகர்களையும் தளத்தையும் இணைக்கும் இவ்வகையான வசதிகளால் வாசகர்களுக்கு தளத்தின் புதிய செய்திகளை எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சரி, இதெல்லாம் நமது தளத்திற்கு வந்த பின்னரே நமக்கு ஒரு கூகிள் பிளஸ் பக்கம் இருக்கிறது என்று வாசகர்களுக்குத் தெரியும். இல்லையெனில் கூகிள் பிளஸில் நமது வட்டத்திலிருக்கும் நண்பர்களுக்கு உடனே தெரிந்திருக்கும். ஒரு விசயத்தைப் பற்றி கூகிள் தேடுதலில் தேடுபவர்களுக்கு நமது தளத்தைப் பற்றியோ அல்லது நமது தளத்தின் கூகிள்+ பக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.
Read More

Nov 6, 2011

பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க

12 Comments

வலைத்தளத்தின் முகவரிக்கு அருகில் சிறிய படத்தினை லோகோவாக வைப்பது Favicon என்று சொல்வார்கள். இதனை பிளாக்கர் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே சேர்க்கும் வசதியை பிளாக்கர் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக ஒரு சிறிய படத்தினை இதற்குப் பயன்படுத்துவோம். நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
Read More

Nov 3, 2011

MS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க

15 Comments

நமது ஆவணங்களின் பிண்ணணியில் நமது பெயரையோ அல்லது எதாவது ஒரு படத்தினைச் சேர்ப்பதற்கு வாட்டர்மார்க் என்று சொல்வார்கள். இதனை MS- Word மென்பொருளைப் பயன்படுத்தி வந்தால் இதிலேயே எளிமையாகச் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக வேறு மென்பொருள்களை நாட வேண்டியதில்லை.
Read More

Oct 11, 2011

உலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிசி Akash

19 Comments

டேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்தாலும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால் பலரால் விரும்பப் படுகிறது.
Read More

Sep 24, 2011

பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்படி?

13 Comments

பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
Read More

Sep 23, 2011

இலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)

11 Comments

மின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணிணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம். இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணிணியிலும் மொபைல்களிலும் படிக்க இயலும்.
Read More

Sep 21, 2011

விளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database மென்பொருள்

10 Comments

கணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.
Read More

Sep 20, 2011

இலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்கள்

13 Comments
கணிணியில் ஆடியோ/வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும். மற்றொரு கருவியில் செயலபடாது. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான பார்மேட்கள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட பார்மேட்டில் மாற்ற கன்வெர்ட்டர் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. FreeMake என்ற நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் இரண்டு மென்பொருள்களைப் பற்றிப் பார்ப்போம்.
Read More

Sep 10, 2011

ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன்படுத்த

29 Comments

கூகிளின் பிளாக்கர் சேவை மூலம் இணையத்தில் நமக்கென வலைப்பதிவை உருவாக்கி கருத்துகளைப் பதிவிட்டு வருகிறோம். பிளாக்கரில் பதிவிட இணையவசதி இருக்கும் கணிணியிலே தான் பயன்படுத்த முடியும். மொபைல் மற்றும் டேப்ளட் பிசி (Tablet Pc) போன்ற இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய கருவிகளில் வலைப்பூக்களைப் பார்க்க முடிந்தாலும் பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி புதிய பதிவுகளை இடும் வசதியின்றி இருந்தது. தற்போது கூகிள் அதிகாரப்பூர்வமாக பிளாக்கர் தளத்தை ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான iOS இல் இயங்கும் ஐபோன்/ஐபேடுகளில் இயங்கக் கூடிய வண்ணம் செயலியாக வெளியிட்டுள்ளது.
Read More

ஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்

23 Comments

இணைய விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்க கூகிளின் ஆட்சென்ஸ் (Google Adsense) தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆட்சென்ஸ் கணக்கு வாங்க அப்ளை செய்தால் வேகமாகவும் எளிமையாகவும் நடைமுறைப் படுத்திவிடும். அதற்கு அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நமது இணையதளம்/வலைப்பூ சரிவர இருக்க வேண்டும். பிறகு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் உடனடியாக நமது தளத்தில் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இனி இந்த நடைமுறைகள் இன்றி மேலும் கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
Read More

Sep 7, 2011

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

35 Comments

இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
Read More

Sep 4, 2011

விண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக

10 Comments

கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.
Read More

Sep 2, 2011

கீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்பொருள்.

6 Comments

கணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை (Keyboard) பல வகைகளில் வெளிவருகிறது. அதில் நிறுவனம் தயாரித்தபடி குறிப்பிட்ட அமைப்பில் தான் விசைகள் அமைந்திருக்கும். நிறைய பேர் கணிணியைப் புதியதாக பயன்படுத்தும் போது விசைப்பலகையின் அமைப்பு அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறதென தேடிப்பிடித்து அழுத்திக் கொண்டிருப்பார்கள்.
Read More

Aug 27, 2011

Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற

8 Comments

கூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.
Read More

Aug 26, 2011

போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்

5 Comments

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Read More

Aug 25, 2011

கூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inline Annotations

13 Comments

வலைத்தளத்தை கூகிள் தேடலில் முன்னிலைப் பெறச் செய்ய உதவியாக இருப்பது கூகிள் +1 பட்டன் ஆகும். நமது வலைப்பதிவை படிப்பவர்கள் இந்த பட்டனைக் கிளிக் செய்து விட்டுச் செல்வார்கள். இது வெறும் ஓட்டுப்போடும் பட்டனாக மட்டுமே இருந்தது. ஆனால் நமது பதிவுகளை கூகிள் பிளசில் நண்பர்களோடு பகிர / Share செய்வதற்கு என்று எந்த வசதியும் இல்லை. மற்றொரு சமூக வலைத்தளமான Facebook ஐ எடுத்துக் கொண்டால் செய்திகளை அந்தந்த வலைப்பக்கத்தில் இருந்தே பகிர்வதற்கு Facebook Like, Share பட்டன்கள் இருக்கின்றன.
Read More

Aug 23, 2011

ஹைடெக் முதல்வர்

13 Comments

அரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க முடியும்.
Read More

Aug 21, 2011

டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?

8 Comments

டுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.
Read More

Aug 16, 2011

யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க

11 Comments

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
Read More

Aug 11, 2011

கூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக்க

13 Comments

கூகிளின் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வெறும் பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே பார்க்காமல் நமது வலைப்பூவிற்கு எந்த வகையில் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். நமது வலைப்பூவில் எழுதப்படும் பதிவுகளை கண்டிப்பாக கூகிள் பிளஸில் அப்டேட் செய்தால் நம்மை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக அறியவும் படிக்கவும் உதவியாக இருக்கும். இதோடு மட்டுமின்றி உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை/தகவல்களை உங்கள் வலைப்பூவில் காண்பித்தால் உங்களைப் பற்றிய அப்டேட்களை வாசகர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்கு Widgetplus என்ற இணையதளம் உதவுகிறது.
Read More

Aug 6, 2011

ஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி நண்பர்களே!

90 Comments

தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய வலைப்பதிவு வந்துள்ளதா என ஆர்வம் மேலோங்கி அந்தப் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். சின்ன வயதிலிருந்தே ரசித்துப் படிக்கும் புத்தகங்களில் விகடனும் ஒன்று. ஏனெனில் விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. ஆச்சரியமாக இந்த வார 10.08.2011 விகடன் இதழில் என்னுடைய வலைப்பதிவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Read More

Aug 5, 2011

ஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Convert Merge

7 Comments
கணிணியில் பாடல்கள் கேட்பதற்கு ஆடியோ கோப்புகள் நிறைய வைத்திருப்போம். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களை இணைத்து தொடர்ச்சியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். எதேனும் பள்ளி/கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறிய சிறிய ஆடியோ பகுதிகளை ஒன்றாக இணைத்து தொடர்ச்சியாக வருவது மாதிரி செய்வார்கள். இதற்கு பயன்படும் ஒரு இலவச மென்பொருள் தான் Audio Convert Merge free.
Read More

Aug 1, 2011

கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)

15 Comments

Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.
Read More

Jul 30, 2011

வலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் பெற

10 Comments

Google +1 button latest previewsவலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1 பட்டனுக்கான புதிய வசதிகளை முதல் ஆளாக உடனடியாக அறியவும் பெறவும் ஒரு வழி ஏற்படுத்தியிருக்கிறது.
Read More

Jul 24, 2011

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher

7 Comments

இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.
Read More

Jul 21, 2011

கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்

12 Comments

பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.
Read More

Jul 20, 2011

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

7 Comments
Projector mobilesபுரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.
Read More

Jul 17, 2011

MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்

17 Comments

இணையத்தில் நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும் செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச் செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத் தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சரியான அனுமதியும் உரிமையுமின்றியே பாடல்களை வழங்கிவருகின்றன.
Read More

Jul 7, 2011

வலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி? (Google+ Profile Button)

9 Comments

கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது வலைத்தளத்தின் மதிப்பும் உயரும்.இப்போது வந்திருக்கும் கூகிள்+ சமூக வலைத்தள சேவையில் நமது நண்பர்களாக பலரைச் சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா?
Read More

Jun 18, 2011

பயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்க பயனுள்ள நீட்சி

13 Comments

இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலானோர் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பாக்சின் இயல்பான டவுன்லோடு வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பாக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணிணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
Read More

Jun 15, 2011

மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager

16 Comments

இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.
Read More

Jun 10, 2011

பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.

7 Comments
Blogger Mobile Templates Introduced
ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு தனியாக பிளாக்கர் டிராப்ட் தளத்தில் போய் செய்ய வேண்டியிருந்தது. தற்போது பிளாக்கர் தளத்திலேயே செய்து கொள்ளும் படியாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Read More

MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க

11 Comments

வாசகர் ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமா?நாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும். இது எப்படி?
Read More

Jun 8, 2011

புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice

8 Comments

கூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
Read More

Jun 7, 2011

சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter

9 Comments

நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.
Read More

ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher

3 Comments

ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
Read More

Jun 4, 2011

குழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui

7 Comments

இணையம் பரந்த விரிந்த திறந்த கடல் போன்றது. நல்ல விசயங்களும் கெட்ட விசயங்களும் கலந்தே இருக்கும். குழந்தைகள் கணிணியில் பழகும் போது இணையத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கிற விசயம் இணையத்தின் கெட்ட விசயங்களான ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சாட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது தான். இவற்றைத் தாண்டி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது இனிமையாக இணையம் இருக்க வேண்டும்.
Read More

Jun 2, 2011

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

5 Comments

Explore world Museums with Google Art Projectஉலகத்தில் இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள்? கூகிளின் Art Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17 மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில் உயர்தர அளவில் (High Resolution) உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களை அப்படியே அந்த மியூசியத்தில் நின்று பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வினை அறியமுடியும்.
Read More

கூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி?

15 Comments

இணைய உலகின் மன்னனான கூகிளுக்கு இருந்த பெரிய தலைவலி மற்ற சமுக வலைத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகள், பதிவுகள், வலைத்தளங்களைப் பற்றி கணிக்க முடியாமல் இருந்தது தான். ஏனெனில் எல்லோரும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர்களுக்குப் பிடித்த தளங்களின் இணைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் போது கூகிளுக்கு இதைப் பற்றி முழுதும் அறிந்து கொள்ள முடியாமல் போனது. எந்த வலைத்தளங்கள் அதிகம் பிரபலமடைகின்றன, எந்தெந்த தளங்களை கூகிள் தேடலில் முன்னிலைப் படுத்துவது என்று தெரியாமல் தடுமாறியதற்கு தீர்வாக Facebook Like பட்டனைப் போன்று +1 (Google PlusOne) என்ற பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

Jun 1, 2011

வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter

5 Comments

கணிணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Read More

May 31, 2011

கணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4

5 Comments

Advanced System Care 4கணிணியில் அன்றாட வேலைகளை மட்டுமே செய்கின்ற பலருக்கு கணிணியை எப்போதும் மேம்பட்டதாக வைத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லதாக பார்த்து கணிணி வாங்கியிருந்தாலும் இப்போது மெதுவாக இயங்குகிறது என்று வருத்தப்படுவார்கள். ஏன் என்றால் கணிணியில் தேங்கும் பிரச்சினைகளை நாம் கண்டறிந்து சரிசெய்வதில்லை. ரெஜிஸ்ட்ரியில எதாவது பிரச்சினையா, ஷார்ட்கட் பிரச்சினையா, கணிணியில் நமக்குத் தெரியாமல் எதாவது அமைப்புகள் மாறியிருக்கிறதா போன்றவற்றை எளிதாக நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
Read More

May 30, 2011

பயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome

6 Comments

FxChrome - Make Firefox Looks Like Chrome இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.
Read More

May 29, 2011

ஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறைகள்.

8 Comments

how to secure gmail accountமின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம் (hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
Read More