Jun 2, 2011

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project


google+art+projectஉலகத்தில் இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள்? கூகிளின் Art Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17 மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில் உயர்தர அளவில் (High Resolution) உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களை அப்படியே அந்த மியூசியத்தில் நின்று பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வினை அறியமுடியும்.

இதனை விர்ச்சுவல் சுற்றுலா எனச் சொல்லலாம்.(Virtual Tour). ஒவ்வொரு புகைப்படமும் 14000 மில்லியன் பிக்சல்கள் மற்றும் அதற்கு மேலுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்திற்குச் செல்லாமலே உண்மையிலேயே பார்ப்பது போன்று இருக்கும். இந்த சேவை கூகிளின் Streetview தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. இதைத் தான் கூகிளின் Earth மற்றும் Maps சேவையில் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 360 டிகிரி கோணத்தில் பனோரமா வகையில் சுற்றிச்சுற்றி எல்லாத் திசையிலும் நகர்த்திப் பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
google+art+musium+project+workஇதன் மூலம் 486 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட 1061 புகைப்படங்களை, 385 விர்ச்சுவல் அறைகளில், 6000 Streetview வகையிலான புகைப்படங்களாக காணமுடியும். இந்த இணையதளத்தில் சென்று ஒவ்வொரு மியூசியமாகத் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். ஒவ்வொரு அறையிலும் உள்ள புகைப்படங்களைப் பொறுமையாக காணலாம். எவரும் விரட்டப் போவதில்லை. வேண்டுமெனில் குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. சில புகைப்படங்கள் மட்டும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இதற்கு கூகிள் காப்பிரைட் காரணமாக சில புகைப்படங்களை காட்ட உரிமையில்லை எனத்தெரிவித்துள்ளது.
google+art+project+4google+art+project+3
இணையதளத்தின் இடப்புறத்தில் நகர்த்திப் பார்க்க நான்கு திசைகளுக்கான அம்புக்குறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வலதுபுறத்தில் உள்ள Navigate Floor Plan என்பதைக் கிளிக் செய்தால் மியூசியத்தின் மேப் காட்டப்படும். அதில் குறிப்பிட்ட அறையைக் கிளிக் செய்தால் அந்த அறைக்குள் நீங்கள் இருப்பீர்கள். அழகான நேவிகேசன் பார்த்தீர்களா?

google+art+project+1
இதில் தற்போது 17 மியூசியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் இணைக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சில முக்கிய கலைஞர்களின் படைப்புகளையும் காணமுடியும். கண்டிப்பாக போய் வாருங்கள்.

"Starry Night" - Vincent Van Gogh
"Return of Prodigal Son" - Rembrandt
"No Woman, No Cry" - Chris Ofili

இணையதள முகவரி : http://www.googleartproject.com/

5 comments:

  1. IMG_5463

    வாவ்...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    கருத்துக்கு நன்றி கீதா

    ReplyDelete
  3. Earth+is+our+child

    மிகவும் அற்புதமாக உள்ளது பொன்மலர் .பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  4. dd01
  5. alagu

    உண்மையாகவே புதுமையாக உள்ளது.. பார்ப்பதற்கு ஏற்ற தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.. பொன்மலர்..!

    ReplyDelete