Jun 4, 2011

குழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui


kids+internetஇணையம் பரந்த விரிந்த திறந்த கடல் போன்றது. நல்ல விசயங்களும் கெட்ட விசயங்களும் கலந்தே இருக்கும். குழந்தைகள் கணிணியில் பழகும் போது இணையத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கிற விசயம் இணையத்தின் கெட்ட விசயங்களான ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சாட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது தான். இவற்றைத் தாண்டி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது இனிமையாக இணையம் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இணைய உலவி தான் Kidzui. இதைப் பயன்படுத்தினால் பெற்றோருக்கு குழந்தைகள் மீதான பயம் போய்விடும். இணைய உலகத்தில் குழந்தைகள் நுழைய சரியான உலவியாக இருக்கிறது இந்த உலவி. இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள். அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்றபின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

kidzui+browser+2
இதில் குழந்தைகள் பாதுகாப்பான யூடியுப் வீடியோக்களை மட்டுமே காண முடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளை இணைத்திருப்பது குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்யும். மேலும் குழந்தைகள் எதை எதைப் பார்த்தார்கள் சென்றார்கள் என்பதைப் பற்றிய வாரந்திர அறிக்கையும் நமக்குக் கிடைக்கும்.
kidzui+browser+1இதில் முதலில் பெற்றோர்கள் தங்களது கணக்கை உருவாக்கி குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான (Parental Controls) அமைப்பை செய்து கொள்ள முடியும். இந்த உலவியை மட்டுமே குழந்தைகள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டால் கணிணியில் அவர்கள் வேறு எங்கேயும் போக இயலாது.
kidzui+parental+controls
தரவிறக்கச்சுட்டி: http://www.kidzui.com/download/

7 comments:

  1. Earth+is+our+child

    அருமையான பகிர்வு பொன்மலர் .....நன்றி !

    ReplyDelete
  2. saravanan%252Bside%252Blook

    நல்ல தகவலை தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. .com/img/b/R29vZ2xl/AVvXsEgUTng0Ves30qMaAxm6CJSd8-gealEXWpyuWclAe2SL2-AWMx5TOSgiuYrIrbNiPhwLHCwPmY5O_9vUBLdZry_D7h9yqywLux-bZNsBTKkPy9wE9fmQ8zTbTw1f99E8xQ/s45-c/

    நல்ல தகவல் தந்துள்ளீர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. blank

    உங்கள் பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    என்றோ எழுதிய ஒரு பதிவு. கூகிள் சர்ச்சில் காணாமல் போகிவிட்டது.

    காரணம் ஏனென்று உங்களுக்கே தெரியும். தளத்தை அடிக்கடி அப்டேட் செய்யாதது ஒரு காரணம்



    குழந்தைகளுக்கான இணைய உலவி

    ReplyDelete
  5. IMG_5463

    பகிர்வுக்கு ரொம்ப நன்றி பொன்மலர்...கண்டிப்பாக பார்க்கிறேன்..

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    நன்றி கூடல் பாலா, சரவணண், தமிழ்நெஞ்சம், அம்பாளடியாள், கீதா ஆச்சல்

    ReplyDelete
  7. blank

    eppadi ungaluku mattum ithu pondra sinthanai varukindrathu endru theriyavillai.

    ReplyDelete