இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலானோர் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பாக்சின் இயல்பான டவுன்லோடு வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பாக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணிணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்துவிடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம். இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பாக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG. இந்த நீட்சியின் மூலம் பயர்பாக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணிணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணிணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.
அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர் (Firefox Download manager) விண்டோவின் அடியில் கணிணியை அணைப்பதற்கான (Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும். உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது. கணிணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம். எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணிணியை அணைத்து விடும்.
தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் கணிணியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணிணி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும்.
தரவிறக்கச்சுட்டி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/auto-shutdown-ng/?src=api
Tweet | |||
ஆகா .. இத இத இததான் தேடிகிட்டு இருந்தன்ங்க ...
ReplyDeleteஆனா நான் க்ரோம் பயன்படுத்துகிறேன் இதே போன்ற நீட்சி க்ரோம் க்கு உள்ளதா
நன்றி
பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி!
ReplyDeleteபயனுள்ள தொழி்ல் நுட்ப தகவலுக்கு நன்றி தோழி
ReplyDeleteu have given an option called add to technorati..what is the use of technorati?what is it?
ReplyDeleteபயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி..........
ReplyDeleteபகிர்வுக்கு ரொம்ப நன்றிமா மலர்...
ReplyDeleteநீங்கள் Read More பட்டனை வலது பக்கம் வருமாறு வைத்துள்ளீர்கள் நான் எப்படி மாற்றுவது உதவுங்கள்.
ReplyDeletehttp://thevarnews.blogspot.com/
ReplyDeletesee tell button here iun blog posts...it is too got from tellafriend.socialtwist.com
they have now introduce a new option in their button...click tell button in above blog...after clicking a pop up window for sharing will open...see at its top...6 important icons like type addrsss, gmail twitter facebook, buzz, google bookmarks r introduced at top...to get it upgrade ur code...go to that site...
பயனுள்ள நல்லதொரு தகவல் தந்துள்ளீர்கள்
ReplyDeleteநன்றி சகோதரி.இன்று என் வலைப்பூவில்
ஒரு முக்கியமான பாடல்வரிகளை சமர்ப்பணம்
செய்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும்
எதிர்பார்க்கின்றேன்..........
உங்கள் லேபிள்களை கூட்டி(+) அல்லது மறைக்கும்(-) வசதியை side பாரில் செய்துள்ளீர்கள். அது எப்படி? அந்த hackன் பெயர் என்ன? அந்த hack உங்கள் பிளாகில் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பிளாகில் இருந்து பெற்று அதை உங்கள் பிளாகில் அப்ளை செய்தேர்களா?அதற்கான லிங்க்கை தரவும்....d...
ReplyDelete//d
ReplyDeleteஉங்கள் லேபிள்களை கூட்டி(+) அல்லது மறைக்கும்(-) வசதியை side பாரில் செய்துள்ளீர்கள். அது எப்படி?
http://ponmalars.blogspot.com/2011/05/expand-and-collapse-blogger-labels.html
இந்த பதிவின் தொடர்ச்சியாக, இதை இன்ஸ்பிரேசன் ஆக எடுத்துக்கொண்டு நான் எழுதிய பதிவு இதோ இங்கே :
ReplyDeleteபயர்பாக்ஸில் டவுன்லோட் முடிந்தவுடன் அலாரம் அடிக்கச் செய்ய
நன்றியுடன் நானே!
can u help to do this in google chrome
ReplyDelete