
வலைத்தளத்தில் நமது டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சேவைகளுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். இதைப் போல கூகிள்+ சமுகவலைத்தளத்தில் நமது புரோபைல் பக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்தால் நமது வலைப்பூவிற்கு வரும் ஏராளமான வாசகர்கள் கூகிள்+ பக்கத்தில் நண்பர்களாக சேருவார்கள். இதனால் நமது பதிவுகள் அதிகம் சென்றடையும். மேலும் கூகிள்+ பட்டன் மூலமாக அதிக ஓட்டுகளும் விழும்.
Google+ Profile Button எப்படிச் சேர்ப்பது?
1. முதலில் உங்கள் கூகிள்+ புரோபைல் இணைய முகவரி தெரிய வேண்டும். இதற்கு கீழுள்ள சுட்டியில் உங்கள் கூகிள் கணக்கில் நுழையவும். https://plus.google.com/me
2. இதில் கூகிள்+ கணக்கின் புரோபைல் காட்டப்படும். வலை உலவியின் அட்ரஸ் பாரில் உள்ள இணையமுகவரியை காப்பி செய்யவும். எடுத்துக்காட்டாக எனது கூகிள்+ புரோபைல் முகவரி : https://plus.google.com/107825122579806036867

3. பின்னர் உங்கள் தளத்திற்கான பட்டனைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட சுட்டியைக் கிளிக் செய்யவும். http://www.google.com/webmasters/profilebutton/
4. இதில் Enter Profile URL என்ற பெட்டியில் காப்பி செய்த உங்கள் புரோபைல் முகவரியை இடவும். அடுத்து உங்களுக்கு விருப்பமான பட்டன் அளவினைத் தேர்ந்தெடுத்து விட்டு அதன் கீழே இருக்கும் நிரல் வரிகளை காப்பி செய்து கொள்ளவும்.

5. இதனை பிளாக்கர் விட்ஜெட் ஆக உங்களுக்குப் பிடித்த இடத்தில் சேர்க்கலாம். தேவைப்படின் Edit Html இல் சென்று பதிவின் கீழே வருமாறும் சேர்க்கலாம். ஆனால் இதனை மற்ற ஓட்டுப்பட்டைகளுக்கு அருகில் வைக்காமல் வேறு இடத்தில் வைப்பது சிறந்தது. எனது கூகிள்+ பக்கம்

நிரல்வரிகளைச் சேர்ப்பதற்கு மற்ற தொடர்புடைய பதிவுகள் :
1.கூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி?
2.பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?
3.பிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எப்படி?
4.பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?
Tweet | |||
Useful information Ponmalar
ReplyDeleteநன்றி சகோ..
ReplyDeletehow to show number of posts in a label while the mouse arrow moves over the label name?
ReplyDeletehttp://yithudummy.blogspot.com/2011/07/how-to-show-number-of-posts-in-label.html
hi ponmalar, please copy content in above link fully and publish it as a post in ur blog....because i will delete my dummy blog soon..i want other bloggers to be benefitted by that hack...copy it...publish it as a post in ur blog...I'm giving you permission...
நல்ல பதிவு.
ReplyDeleteமிகவும் உபயோகமான பதிவு எனது ப்ளாக்கிலும் இணைத்துவிட்டேன், பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஉங்கள் புரோபைல் முகவரி https://plus.google.com/107825122579806036867 என்று காட்டுகிறது ஆனால் எனது புரோபைல் முகவரி https://profiles.google.com/117282182925470973905 என்று தான் காட்டுகிறது.இதனால் பட்டனை எனது வலைத்தளத்தில் இணைக்க முடியவில்லை.ஏன் இப்படி? விளக்கம் தருமாறு கேட்கிறேன்.நன்றி
ReplyDeleteஎனக்கு google plus invite mail அனுப்பமுடியுமா?
ReplyDeleteசனி , ஞாயிறு லீவு தானனங்க சும்மா மாய உலகத்த சுத்திப்பாருங்க
ReplyDeletehi how r u
ReplyDeleteyou hav google+ invite
pls send me
tharikpiya@gmail.com