Jul 20, 2011

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

Projector mobilesபுரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.

இந்த வகையிலான மொபைல்கள் புதிய தொழில்நுட்பம் என்பதால் இன்னும் அதிகமான மாடல்கள் வரவில்லை. சிறப்பான புரஜெக்டர் சேவைக்கு என்ன வேண்டும் எனப்பார்க்கலாம். எந்த வீடியோ பார்மேட்டை (Video format) புரஜெக்டர் காட்டக்கூடியது, ஒளிப்பட பார்மேட்(Picture Formats), மொபைல் திரையளவு(Display), தெளிவான வீடியோ (Video brightness) மற்றும் தரம் போன்றவற்றைச் சோதித்து வாங்குவது நலமானது. தற்போது சிறப்பாக உள்ள புரஜெக்டர் போன்களைப் பற்றி பார்க்கலாம்.

1.Intex V Show Projector Phone 8810

இன்டெக்ஸ் நிறுவன போன்கள் வழக்கமாக இரட்டை சிம் வசதியுடையன. இதிலும் இரட்டை சிம் வசதியுடன் இரட்டை மெமரி கார்டு ஸ்லாட் (Dual Memory slot) வசதியிருக்கிறது. இரண்டிலும் தலா 8 GB வரை போட்டுப் பயன்படுத்தலாம்.
இதன் தொடுதிரையளவு 3.2”. படங்களை தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருமாம்.இதனுடன் போனை வைத்து புரஜெக்ட் செய்ய Tripod Stand தரப்படுகிறது. விலை Rs. 12000

2.Samsung Galaxy Beam i8520

இது ஒரு சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வகையைச் சார்ந்தது. இதன் DLP WVGA புரஜெக்டர் சிறப்பான முறையில் படங்களைக் காட்டக்கூடியது. மேலும் இதன் 8 MP கேமராவில் படமெடுக்கும் போதே புரஜெக்ட் செய்யும் வசதியிருக்கிறது. உயர்தர HD வீடியோக்களை எடுக்கவும் உதவும்.

இது சாதாரண புரஜெக்டர் போன் மட்டுமில்லாது ஆண்ட்ராய்டு 2.1 இயங்குதளம், வை-பை, 3G, 3.7” தொடுதிரை போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை Rs. 35000

3. Spice Popcorn Projector M9000

குறைந்த விலையில் தரமான வசதிகளோடு ஸ்பைஸ் நிறுவனம் பாப்கார்ன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மொபைலில் இரண்டு சிம் வசதியுள்ளது. இதில் பலவகையான வீடியோ மற்றும் ஒளிப்பட வகைகளையும் தெளிவாக காட்டக்கூடிய வசதியிருக்கிறது. லைவ் டீவி மொபைலில் பார்த்தால் அதையும் புரஜெக்ட் செய்யலாம். இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் விற்பனை நன்றாக உள்ளது. இதன் விலை 6000 ருபாய் மட்டுமே.

4.TechBerry ST 200

இந்த மொபைல் போனில் இரண்டு சிம், இரண்டு மெமரிகார்ட் ஸ்லாட்கள், இரண்டு கேமரா வசதியிருக்கிறது. இதன் தொடுதிரை அளவு 3.2” ஆகும். இதன் கேமரா 2MP மற்றும் பிளாஷ் வசதி கொண்டது. இதன் 2000 mAh பேட்டரி அதிக நேரம் நீடிக்கக் கூடியது. இதன் விலை Rs. 11000

5. Intex V Mini theatre 8809

இண்டெக்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய மொபைலான இதில் புரஜெக்டர் காட்சியமைப்பு தெளிவாக இருக்கிறது. இரட்டை சிம் வசதி, 2.4” தொடுதிரை அளவு, 2MP கேமரா போன்ற வசதிகளையும் 3gp, avi, mp4 போன்ற வீடியோ வகைகளை காட்டும் வசதியும் கொண்டது. இதன் விலை 6200 ருபாய். இது ஸ்பைஸ் நிறுவனத்தின் பாப்கார்ன் மொபைலின் போட்டியாக கருதப்படுகிறது.

7 comments:

  1. நல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. Spice Popcorn Projector M9000
    இந்த வகை மாடல் தற்பொழுது அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரங்களில் வந்து கொண்டிருக்கிறது.... எதிர் காலங்களில் இது அனைவர் கைகளிலும் புழங்கலாம்..... Thanks 4 sharing.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete
  5. மிகச்சிறந்த தகவலைத் தந்துள்ளீர்கள்
    புதுமைத் தகவல்கள் பல தந்து அசத்தும்
    பொன்மலருக்கு நன்றிகள் பல.
    -குணா

    ReplyDelete
  6. நல்ல பதிவு மிகவும் அருமையாக இருந்தது போன்களை பற்றிய தகவல்கள் இன்னும் கூடுதலாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete