இணையத்தில் நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும் செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச் செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத் தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சரியான அனுமதியும் உரிமையுமின்றியே பாடல்களை வழங்கிவருகின்றன.
பலரும் இணைய விதிமுறைகளை அறியாமலே இணையத்தில் ஆட்சென்ஸ் மற்றும் பிற விளம்பர நிறுவனங்களிடம் இருந்து சம்பாதிக்க பாடல் வலைப்பூக்களை ஆரம்பித்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். Indian Music Industry என்ற அமைப்பு சமீபத்தில் மும்பை சைபர் கிரைம் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கல்பேஷ் படேல் என்ற வாலிபரை கடந்த ஜூலை 2 ந்தேதி கைது செய்துள்ளது. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான இவர் தனது வலைப்பூ மூலமாக உரிமையின்றி பாடல்களை வெளியிட்டு நேரடியாக தரவிறக்கும் வசதியைச் செய்துள்ளார். இதனால் உரிமை பெற்ற மற்றவர்கள் இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு.
இவரை விசாரிக்கும் போது கடந்த வருடம் 2010 லிருந்து www.songsdl.com என்ற தளத்தையும் 2006 ம் வருடத்திலிருந்து www.mp3don.com என்ற தளத்தையும் நடத்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரது லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
பலரும் இந்த மாதிரி உரிமையற்ற பாடல்களைத் தரவிறக்குவதால் வலைப்பூ நடத்துவோர்கள் தேடுபொறிகளில் பிரபலமாவதும் இதனை ஊக்குவிப்பது போலவும் மாறிவிடுகிறது. சிலர் பாடல்களைக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனைக்காக தான் தருகிறோம். ஆனால் இந்த மாதிரி திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்யாமல் காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள் என்று அறிவிப்பு வேறு போட்டிருப்பார்கள். இதுவும் சட்டப்படி குற்றமே.
“We highly ENCOURAGE users to BUY the Original CDs or DVDs of the movie”
மேலும் இன்னொரு விசயமாக Disclaimer ஒன்றைப் போட்டிருப்பார்கள்.
இந்த பாடல்களை நாங்கள் இணையத்தில் ஹோஸ்ட் செய்யவில்லை. பிற இணையதளங்களில் கிடைத்த பாடல்களையும் சுட்டிகளையும் பகிர்ந்துள்ளோம். காப்பிரைட் பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட கோப்புகளை நீக்கிவிடுவோம். இதுவும் சட்டப்படி குற்றமே.
“This Website does not host any of the files mentioned on this blog or on its own servers”
சில வருடத்திற்கு முன் பிரபலமான T-Series நிறுவனம் இதே போல பாடல்கள் வலைப்பூ நடத்திய ஒருவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை அபராதமாக விதித்து நோட்டிஸ் அனுப்பியிருந்தது. பாகிஸ்தானிலிருந்து பல வலைப்பூக்களும் தளங்களும் இந்தி பாடல்கள் போன்றவற்றை சட்டப்பூர்வமின்றி வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் தடுப்பது சுலபமான காரியம் இல்லாவிட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.இதனால் சட்டப்பூர்வமின்றி பாடல் தரவிறக்க வலைப்பூக்கள் நடத்தும் நண்பர்கள் இதனைக் கவனித்து கைவிடுவது நல்லது. இந்த விசயத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பதியவும்.
இதைப்பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
http://www.indianexpress.com/news/music-cyber-cell-arrested-engg-student/815054
Tweet | |||
தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க..
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநம் தமிழ் பதிவர்களில் பலர் கூட பிரபலமான தமிழ் இதழ்களில் வரும் படைப்புகளை அப்படியே இட்டு, இறுதியில் ’நன்றி’ என மூலத்தையும் கூறிவிடுகின்றனர். வேறு சிலரோ, இணையத்திலிருந்தோ அல்லது பிரபல இதழ்களிலிருந்தோ, வரிக்கு வரி சுட்டு விட்டு, அதன் மூலம் எதுவென்றுக் கூட குறிப்பிடாமல், தன் சொந்த சரக்குப் போல் காண்பிக்கின்றனர். எது சரி, எது தவறென தமிழ் வலையுலகிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழுவினை அரசுவோ அல்லது பொதுநலம் கருதும் அமைப்போ இருப்பின், சட்ட சிக்கல்களை நம்மவர்களும் சந்திக்காமல் இருப்பர்.
ReplyDelete//நெல்லி. மூர்த்தி//
ReplyDeleteஉங்கள் கருத்து சரியானது தான் நண்பரே.
நன்றி மாணவன், ரத்னவேல்
பயனுள்ள தகவல்
ReplyDeleteதகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteபதிவர்கள் தெரிந்தும், புதிய பதிவர்கள் தெரியாமல் செய்யும் இது போன்ற தவறுகள் இந்த பதிவைப்பார்த்து திருத்தபடலாம்
ReplyDeleteதகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
ReplyDeleteஆபத்துக்கள் எந்த ரூபத்திலும் வரலாம்
ReplyDeleteசகோதரம் இந்தச் சட்டம் பதிவுகளை கொப்பி அடிப்பவருக்கு எதிராக செயல்படாதா ? முக்கியமாக அந்த இணையம் தாஹீர் நண்பருக்கெதிராக போட வேண்டியிருக்கு... தட்டச்சிட்ட கைவலி மாற முதல் மனுசன் சுட்டுப் போடுதப்பா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
Very nice post. thanks for sharing it.
ReplyDeleteகொடுமை என்னன்னா? இன்னும் அந்த சைட் உயிரோட இருக்குது. அதுதான் இந்திய சைபர்கிரைமின் லட்சணமா?
ReplyDeletehttp://www.songsdl.com/ இதை க்ளோஸ் செய்ய இத்தனை நேர அவகாசம் தேவையா என்ன?
Dear Sis,
ReplyDeleteகம்ப்யூட்டர் கல்வி MCA & MSC (IT) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? நான் வெளிமாநிலத்தில் பணிபுரிவதால் தொலைதூர கல்வி மையம் மூலமாக சேர வேண்டும். இதில் எந்த பல்கலைக்கழகம் நல்லது என்று கூறுங்கள்.
நன்றி
கணேஷ்
Mp3 கோப்புக்களைப் போல சினிமா புகைப்படங்களையும் பலர் வலைப்பூக்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள Indiaglits, Behindwoods, Sify, Santhabanda, போன்ற நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை விரைவில் கைக்கூடிவிடும். இவர்களால் இந்தியாவில் இருக்கும் காப்பிரைட் மீறுபவர்களை மாத்திரமே கைது செய்ய முடியும். அதனால் இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அவதானமாக செயல்படுங்கள்.
ReplyDeletehi sis,
ReplyDeletei'm running one blog for hacking....is dis violate any rule against cyber activities ...PlZ...tell me....like dis mp3 blog..... http://tech-ehacker.blogspot.com.
thnX
.... naveen
Amazing Post its very useful thanks for sharing
ReplyDelete