Jun 7, 2011

ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher


ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher. இந்த மென்பொருள் மூலம் ஒரே கணிணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும்.

இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

தரவிறக்கச்சுட்டி: http://multi-skype-launcher.com/

3 comments:

  1. free யா பேச சொன்னா நான் நாள் புல்லா பேசிகிட்டே இருப்பேன் ...

    அருமையான மென்பொருள்

    நன்றி பொன்மலர்

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி ஆனந்த்

    ReplyDelete
  3. ஸ்கைப்- ல் free calling செய்வது எப்டி ......

    ReplyDelete