Jun 10, 2011

MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க


வாசகர் ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமா?நாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும். இது எப்படி?

பாடல்கள் நிறைந்த சீடி/டிவிடி ஒன்றை உருவாக்கும் போது இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம்.

1.முதலில் டேட்டா சிடி (Data CD) எனப்படும் வகையில் உருவாக்குவது. இதில் நமது பாடல்களை எல்லாம் சாதாரணமாக தகவல்களை எழுதும் முறையில் எதாவது ஒரு Burning Software மூலம் பதிவது. இந்த சிடியை கணிணியில் போட்டால் போல்டர்களைக் காட்டக்கூடியது. இதனை வழக்கம் போல கணிணியிலும் சிடி பிளேயர்களிலும் போட்டுப் பயன்படுத்த முடியும். இதில் பாடல்களின் பார்மேட் Mp3 என்று தானிருக்கும். இவைகளை ஒரு சிடியில் சுமாராக 130 பாடல்களை ஏற்ற முடியும்.

2. இரண்டாவதாக ஆடியோ சிடி (Audio CD) எனப்படும் முறையில் பாடல்களைப் பதிவு செய்வது. இது கணிணியில் ஆடியோ பிளேயர் மென்பொருள்களில் மட்டுமே பாடக்கூடியது. எடுத்துக்காட்டுக்கு Windows media player, Winamp

ஆனால் இந்த சிடிக்களின் கோப்பு விவரங்களைக் கணிணியில் பார்க்க வேண்டுமெனில் அது காட்டப்படாது. இவை சிடி பிளேயர்களில் பாட வேண்டும் எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை. இந்த வகையான சிடிக்களில் பதியப்படும் பாடல்களின் பார்மேட் CDA (Compact Disc Digital Audio) என்று அமைக்கப்படும். கவனிக்க CD-DA என்பதே CDA என்று மாறிவிட்டது. திரைப்படங்களின் ஒரிஜினல் ஆடியோ கேசட்கள் இவ்வடிவிலேயே இருக்கும்.
இந்த மாதிரி ஆடியோ சிடியில் 80 நிமிடங்கள் ஓடக்கூடியவாறு அதிகபட்சம் 20 பாடல்களே இருக்கும். ஏனெனில் இவை கம்ப்ரஸ் செய்யப்படாத Raw பார்மேட்டில் உருவாக்கப்படும். இவை நிச்சயிக்கப்பட்ட வினாடிக்கு 44000 சாம்பிள் ரேட் என்ற அளவில் மட்டுமே இருக்கும். Mp3 கோப்புகளோ கம்ப்ரஸ் செய்யப்பட்டு சுருக்கப்பட்ட வடிவில் அதிகளவில் பதிவேற்றவும் பகிரவும் உருவாக்கப்படுவதாகும்.

ஆடியோ சிடி உருவாக்குவது எப்படி?

இணையத்தில் சின்னச் சின்னதாக இலவச மென்பொருள்கள் இதற்கென கிடைத்தாலும் நம்பகமான சிடி/டிவிடி எழுதும் மென்பொருளான Ashampoo Burner இல் எளிதாக மேற்கொள்ளலாம். இந்த மென்பொருள் சிடி/டிவிடி எழுதுவதற்கு தரமான மென்பொருளாக இருக்கிறது. இதன் இடப்புற மெனுவில் Burn or Rip Music இல் சென்று Create Audio Cd என்பதைக் கொடுத்து உங்களுக்குத் தேவையான கோப்புகளைத் தேர்வு செய்யவும். பின்னர் சிடியைப் போட்டு Burn கொடுத்தால் நிமிடங்களில் ஆடியோ சிடி ரெடி. டிவிடியாகப் போட வேண்டுமெனில் கீழேயே Create an Mp3 Dvd என்ற மெனுவில் சென்று உருவாக்கலாம்.

ஆடியோ சிடியிலிருந்து Mp3 பாடல்களாகப் பிரித்தெடுப்பது எப்படி?

கடையில் வாங்கி வந்த திரைப்படத்தின் சிடியிலிருந்து நமக்கு வேண்டியவாறு Mp3 பாடல்களாக மாற்ற இந்த மென்பொருளில் Burn or Rip Music -> Rip an Audio CD என்பதைக் கொடுத்து உங்கள் சிடியைப் போட்டால் தனித்தனி பாடல்களாக விரைவில் பிரித்துக் கொடுத்துவிடும்.

அசாம்பூ பர்னர் மற்ற மென்பொருள்களை விட சிறப்பாக இயங்குகிறது. அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள்.
தரவிறக்கச்சுட்டி: https://www.ashampoo.com/en/usd/dld/0710/Ashampoo-Burning-Studio-6/

11 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு....நன்றி...

    ReplyDelete
  2. பலருக்கு பயன்படும் இத்தகவல் ........குட்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கீதா ஆச்சல்
    நன்றி கூடல் பாலா

    ReplyDelete
  4. உண்மையிலே நல்ல பதிவு..
    இது நிறைய பேருக்கு பயன்படும்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ஸ்ரீதர்June 10, 2011 at 2:54 PM

    மிகவும் நன்றி நண்பரே.
    சென்ற பதிவில் நான் கேட்ட சந்தேகத்திற்கு மிக எளிமையாகவும் புரியும் படியும் விளக்கம் அளித்துள்ளீர்கள்.வீடியோவையும் அது போல் செய்ய முடியுமா?நேரம் இருந்ததால் விளக்கவும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். என்றும்நேசமுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  6. நல்ல பதிவு.நன்றி.அதோடு mp3 ன் bitrate ஐ அதிகபடுத்தும் வழிமுறை அல்லது மென்பொருள் இருந்தால் கூறுங்களேன்.

    ReplyDelete
  7. நன்றி, இதே மாதிரி வீடியோவை பிரித்தெடுக்க மென்பொருள் இருந்தால் சொல்லுங்களேன்...

    ReplyDelete
  8. நன்றி குணா, எசாலத்தான், வேல்குமார், சௌந்தர், ஜெயக்குமார்

    ReplyDelete
  9. ஒரு பதிவரின் பெருமை என்பது அவர் தளத்தை ஒரு சந்தேகம் ஏற்பட்டு இவர் இது குறித்து எழுதியிருப்பார் என்று கூகுளில் தேடி வருவது. அந்த அளவுக்கு உங்க பதிவு அவ்வப்பொழுது எனக்கு பல வகைகளில் உதவுகின்றது. இப்போது கூட யூ டியூப் ல் உள்ள பாடல் தொகுப்பை அப்படியே எம்பி3 ஆக மாற்றி வாகனங்களில் செல்லும் போதுகேட்க எப்படி யூ டியூப் ல் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இங்கே வந்தேன். எழுதியிருக்கீங்களா? நன்றி.

    ReplyDelete