Jun 8, 2011

புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice


youtube+boxofficeகூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

மேலும் யூடியுப் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி புகழடைந்தது. இப்போது இத்தளத்தில் புதிய வசதியாக இந்தி மொழியில் சமீபத்திய வெற்றித் திரைப்படங்களை முழுவதும் பார்க்க வழி செய்திருக்கிறது. இனி மேல் புதிய இந்தித் திரைப்படங்களை High Definition உயர்தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.வீடியோவின் தரம் அருமையாக உள்ளது. தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இந்த சேவை Youtube BoxOffice என்று அழைக்கப் படுகிறது.

இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice

youtube+boxoffice
இப்போது ரன்வீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த ”Band Baajaa Baaraat” என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு மாதமும் புதிய வெற்றியடைந்த திரைப்படங்கள் பதிவேற்றப்படும். பழைய படங்கள் மற்றும் முன்னர் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எப்போதும் போல Bollywood பகுதியிலும் அல்லது இதன் கீழேயே More Videos என்பதைக் கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் படங்களுக்கும் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும்.

hindhi+movies+on+youtube
இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice

8 comments:

  1. 01
  2. alagu

    பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  3. Earth+is+our+child

    நீங்க சொன்னமாதிரியே தமிழ் படமும் வந்தால் நன்றாக இருக்கும் .Any way பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    நன்றி முத்துவேல்
    நன்றி கூடல்பாலா
    நன்றி தங்கம்பழனி

    ReplyDelete
  5. blank
    ஸ்ரீதர்June 8, 2011 at 9:04 PM

    அன்பு நண்பருக்கு வணக்கம்.தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.நண்பரே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம்.நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமா?நாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும்.இது எப்படி என்று கூற முடியுமா please
    என்றும் நேசமுடன் ஸ்ரீதர்

    ReplyDelete
  6. IMG_5463
  7. lak

    உங்களை வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கேன்
    நேரம் கிடைக்கும் போது
    பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_09.html

    ReplyDelete
  8. lenin_photo

    வணக்கம்,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    நன்றி !

    ReplyDelete