
1.Share on Google+
மேற்குறிப்பிட்ட Sharing வசதியைப் போல கூகிள் பிளஸ் தளத்தில் எளிதாகப் பகிர்வதற்காக கூகிள்+1 பட்டனிலும் புதியதாக Sharing வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வலைப்பக்கத்தில் இருக்கும் கூகிள்+1 பட்டனில் ஒட்டுப் போட்ட பின்னர் Share on Google+ என்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கிளிக் செய்தால் ஒரு சிறிய பெட்டி (Snippet Box) போன்று காட்சியளிக்கும்.

2.Inline Annotations.
ஏற்கனவே கூகிள்+1 பட்டன் அருகே மவுசைக் கொண்டு செல்லும் போது நம் நண்பர்கள் ஒட்டுப் போட்டிருப்பின் யார் யாரென அறிந்து கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதையே வலைப்பக்கத்தில் ஒரு பட்டையான விட்ஜெட் போல வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட பதிவிற்கு ஏற்கனவே ஒட்டுப்போட்ட நமது நண்பர்களின் பெயர், புகைப்படத்துடன் தோன்றும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறப்புக் கவனம் ஏற்படுத்தப் படுகிறது. (Special Attention). அதாவது உங்கள் நண்பர்கள் இத்தனை பேர் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என்கிற போது நீங்களும் ஓட்டுப் போடுவீர்கள். இந்த வசதி பேஸ்புக்கின் Recommendations வசதியைப் போன்றது.

இந்த Inline Annotations வசதியை வலைப்பூவில் சேர்க்க கீழே உள்ள சுட்டியைக் கிளிக் செய்து Annotation என்ற இடத்தில் Inline என்பதைத் தேர்வு செய்து கோடிங்கைப் பெற்று வலைப்பூவில் சேர்த்துக் கொள்ளலாம். http://www.google.com/webmasters/+1/button/
வழக்கமான பழைய பட்டனும் வைத்துக் கொள்ளலாம். இந்த இன்லைன் விட்ஜெட்டையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். கூகிள்+1 பட்டனைச் சேர்ப்பது பற்றிய பதிவைப் பாருங்கள்.
முக்கிய குறிப்பு : இந்த இரண்டு வசதிகளும் Googleplus-platform-preview என்ற கூகிள் குருப்பில் இணைந்திருப்பவர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்திப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் கூகிள் பிளஸ் குருப்பில் இணைந்து கூகிள்+1 பட்டனில் வரவிருக்கும் புதிய வசதிகளை உடனடியாக பயன்படுத்த இந்த பதிவைப் பார்க்கவும்.
எல்லோருக்குமான இந்த புதிய வசதிகள் இன்னும் சில நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப் பட்டு விடும்.
Tweet | |||
வணக்கம்,
ReplyDeleteநேற்றுதான் இந்த கூகிள் ப்ளஸ் புதிய வசதியைப்பற்றி நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தோம் இன்று நீங்கள் தெளிவாக விளக்கி பதிவிட்டுள்ளீர்கள் அருமை...
அப்டேட் ஆகும் தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்துகொள்வதில் உங்கள் தளம் ஒரு தனிச்சிறப்புதான்... உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கு நன்றிகள் பல...
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி, தொடர்ந்து கலக்குங்க....
நன்றி மாணவன். உங்களின் கருத்துகள் உற்சாகத்தோடு எழுதத் தூண்டும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு..!!
ReplyDeleteஅருமையான தகவல் .....
ReplyDeleteபேஸ் புக் ,ஆர்குட் ,ஹாட் மெயில் நண்பர்களை கூகுள் பிளசுக்கு அழையுங்கள்
பகிர்வுக்கு நன்றி சகோ !
ReplyDeleteமிகவும் பயன்னுள்ள தகவல்!.
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//சேலம் தேவா நன்றி
ReplyDelete//ஸ்டாலின் நன்றி
//நவ்சாத் நன்றி
//கண்ணண் நன்றி
//தமிழ்வாசி நன்றி
நன்றி
ReplyDelete+1 பட்டனைப்பற்றி பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteகூகிள் ப்ளஸ் வலைப்பதிவர் ஹிட்ஸை அதிகப்படுத்த நிறைய உதவுகிறது நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவுகள்.
ReplyDelete