Aug 16, 2011

யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க


yahoo+movieplexஇரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யாகூவின் இந்த புதிய சேவை MoviePlex என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை உங்கள் கணிணியில் எப்போதும் எங்கேயும் பார்த்துக் கொள்ள முடியும். கூகிளின் BoxOffice இல் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் தரவேற்றப்பட்ட எல்லாப் படங்களையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது 8 திரைப்படங்களைத் தரவேற்றியிருக்கிறார்கள்.

yahoo+movieplex+main
மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணிணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை.

இணையதளம் : Yahoo MoviePlex (நாங்களும் இருக்கோம்ல்ல)

தொடர்புடைய பதிவு:
புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice

11 comments:

  1. 268790_234058363290756_100000597826814_886739_1226303_n
  2. IMG_5463

    ரொம்ப நன்றி பொன்மலர்...நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்...

    ReplyDelete
  3. -H

    நல்ல பயனுள்ள பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  4. IMG_0014

    மிகவும் பயனுள்ள பதிவு. இது போன்ற பதிவுகள்
    தொடர்ந்து கொடுக்க கோருகிறேன். நன்றி!

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    நல்ல பயனுள்ள பதிவு.தொடர்ந்து
    எழுதுங்கள் சகோதரி.

    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி ! !

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    Ponmalar Madam,
    Could u tell me any Online dtp jobs

    ReplyDelete
  8. Kamaraj.jpg

    நல்ல பயனுள்ள பதிவு.தொடர்ந்து
    எழுதுங்கள் சகோதரி.
    மிகவும் பயனுள்ள பதிவு. இது போன்ற பதிவுகள்
    தொடர்ந்து கொடுக்க கோருகிறேன். நன்றி!

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    சினிமா பிரியர்களுக்கு உபயோகமான பதிவு...பாராட்டுக்களுடன் நன்றி

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    பொழுதுபோக்கு நண்பர்களுக்கு நல்ல பதிவு! உங்கள் பதிவுகளையும் இன்றுதான் படித்தேன். அருமை!! தொடருங்கள் நன்றி

    ReplyDelete
  11. 20180331_214812

    மிகவும் நல்ல பதிவு!

    ReplyDelete