Aug 5, 2011

ஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Convert Merge

audio+convert+mergeகணிணியில் பாடல்கள் கேட்பதற்கு ஆடியோ கோப்புகள் நிறைய வைத்திருப்போம். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களை இணைத்து தொடர்ச்சியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். எதேனும் பள்ளி/கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறிய சிறிய ஆடியோ பகுதிகளை ஒன்றாக இணைத்து தொடர்ச்சியாக வருவது மாதிரி செய்வார்கள். இதற்கு பயன்படும் ஒரு இலவச மென்பொருள் தான் Audio Convert Merge free.

இந்த மென்பொருளின் மூலம் Mp3, wma, wav,ogg போன்ற வகைகளில் உள்ள ஆடியோ கோப்புகளை ஒன்றாக இணைக்க முடியும். அதுவும் எந்த வித தரமும் குறையாமல் பாடல்களைச் சேர்க்க முடியும். பல சிறிய ஆடியோ கோப்புகளை ஒன்றிணைத்து பெரிய அளவிலான ஆடியோ சிடியும் உருவாக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளின் மூலம் ஏதெனும் ஒரு ஆடியோ கோப்பை Mp3, wma, wav,ogg போன்ற வேறு வகைகளுக்கு மாற்றவும் (Convert Audio formats) முடியும்.

audio+convert+merge+free
Output Files - புதியதாக உருவாக்கப்படும் ஆடியோ கோப்புகளின் அமைப்புகளான Stereo quality, Joint Stereo, High quality Mono, Dual channels, Bit rate போன்றவற்றை எளிதில் நிர்ணயிக்க முடியும். மேலும் கோப்புகளின் அளவு சிறியதாக வேண்டுமெனில் Low quality உம் High quality வேண்டுமெனில் பெரியதாகவும் அளவை சதவீதம் மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.

பாடல்களின் வரிசை அமைப்பை எளிதாக மேற்கொள்ளலாம். இதனால் எந்த பாட்டு எந்த இடத்தில் வர வேண்டும் எனச் செய்யலாம். (Songs Order)

இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும். எளிமையாகவும் வேகமாகவும் ஆடியோ கோப்புகளை ஒன்றிணைக்கவும் கன்வெர்ட் செய்யவும் பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி:
http://www.freemp3wmaconverter.com/audioconvertmergefree/index.html

7 comments:

  1. blogger_logo_round_35
  2. Education_cap

    SUPER....

    பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    பயனுள்ள பகிர்வு ! !

    ReplyDelete
  4. blogger_logo_round_35
  5. blogger_logo_round_35

    ஆனந்த விகடனில் உங்கள் தளம் பற்றி பார்த்தேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே.
    வேடந்தாங்கல் கருண், மாணவன், நவ்ஸாத், மாய உலகம், பலே பிரபு

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    ipad இல் போட்டோவை எப்படி கொண்டுவருவது? அதாவது கம்ப்யூட்டர்இல் இருந்து ipadஇக்கு?

    ReplyDelete