Aug 11, 2011

கூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக்க


google+plus+logoகூகிளின் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வெறும் பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே பார்க்காமல் நமது வலைப்பூவிற்கு எந்த வகையில் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். நமது வலைப்பூவில் எழுதப்படும் பதிவுகளை கண்டிப்பாக கூகிள் பிளஸில் அப்டேட் செய்தால் நம்மை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக அறியவும் படிக்கவும் உதவியாக இருக்கும். இதோடு மட்டுமின்றி உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை/தகவல்களை உங்கள் வலைப்பூவில் காண்பித்தால் உங்களைப் பற்றிய அப்டேட்களை வாசகர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்கு Widgetplus என்ற இணையதளம் உதவுகிறது.


1.முதலில் உங்கள் கூகிள் பிளஸ் புரோபைலுக்கான முகவரி எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டும். கூகிள் பிளஸில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இதைக் காண உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்த பின்னர் கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்யவும்
http://profiles.google.com/me

2.பின்னர் உங்கள் கூகிள் பிளஸ் புரோபைல் பக்கம் காட்டப்படும். வலை உலவியின் அட்ரஸ் பாரில் பார்த்தால் கீழ்க்கண்டவாறு தெரியும். அதில் உள்ள எண்ணே உங்கள் கூகிள் பிளஸ் புரோபைல் எண் ஆகும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
https://plus.google.com/107825122579806036867/posts

google+plus+widget+1

3.அடுத்து Widgetplus இணையதளத்திற்குச் சென்று Get Wiget என்பதைக் கிளிக் செய்யுங்கள். Settings பகுதியில் Google ID என்ற இடத்தில் உங்கள் கூகிள் பிளஸ் புரோபைல் எண்ணைக் கொடுக்கவும். உங்களின் கூகிள் பிளஸ் அப்டேட்கள் தெரிய வேண்டுமெனில் Include Update Feed என்பதில் டிக் செய்து கொள்ளுங்கள்.

google+plus+widget+2
4. அடுத்து தேவையான அகலம், உயரம் போன்றவற்றைத் தேர்வு செய்யுங்கள். மேலும் Background color, Border color, Title color, Button color, Button width, Name Color போன்ற அமைப்புகளை உங்களுக்குப் பிடித்தவாறு Settings பகுதியில் செய்து விட்டு இறுதியாக Get Code என்ற பட்டனைக் கிளிக் செய்தால் வலைப்பூவில் சேர்ப்பதற்கான நிரல் வரிகள் காண்பிக்கப்படும்.

5. நிரல்வரிகளைக் காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் Design->Page Elements இல் சென்று சைட்பாரில் வருகிற மாதிரி Add Widget->HTML/JavaScript இல் பேஸ்ட் செய்தால் உங்கள் கூகிள் பிளஸ் புரோபைல் மற்றும் அப்டேட்கள் வலைப்பூவிலேயே தெரியும்.



இணையதளம் : http://widgetsplus.com/

13 comments:

  1. DSC00126

    பயனுள்ள தகவல் நன்றி!

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    ஆஹா அருமையான தகவல்.. உடனே செயல்படுத்துக்கிறேன்...தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    நன்றி கோகுல்,மாய உலகம்

    ReplyDelete
  4. 1395826_492260717554151_69718194_n

    சூப்பர் தகவல்
    தேங்க்ஸ்

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    அவசியமான பதிவு நன்றிகள்...!

    ReplyDelete
  6. blank

    Good Information... Thanks for Sharing
    hppt://tamilpadaipugal.blogspot.com

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    நன்றி சகோதரி! நானும் இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  8. IMG_5463

    நன்றி..மிகவும் பயனுள்ள தகவல்...

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    நன்றி சகோதரி!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. DSC_5353

    Random ஆக உங்களின் பல பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசித்தேன்.

    எல்லாமே வாசிக்க இலகுவாகவும், தெளிவாகவும் இருக்கிறது.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    மிகவும் பயனுள்ள தகவல். எனக்கு கூகிள் ப்லஸ் அக்கௌண்ட் ஆரம்பிக்க முடியவில்லை. எத்தனையோ தடவை விருப்பம் தெரிவித்தேன். தயவு செய்து எனக்கு ஒரு அழைப்பு அனுப்ப முடியுமானால் நலம்,

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    கூகிள்+ அழைப்பிற்கு மிக்க நன்றி பொன்மலர்.

    ReplyDelete
  13. blogger_logo_round_35

    PLEASE CLEARLY TELL DESIGN TO PAGE ELEMENT AND JAVA/HTML .I SEARCH BUT NOT FOUNT FOR JAVA/HTML.PLEASE TELL.

    ReplyDelete