Aug 21, 2011

டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?


tweet+with+symbols+logoடுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.

பல இணையதளங்களில் கருத்தோ அல்லது செய்திகளைச் சேர்க்கும் போது Smileys அல்லது Symbols என்று சொல்லப்படும் குறியீடுகள் மேலும் அழகூட்டும். சில நேரத்தில் நமது உணர்ச்சிகளை பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் இருக்கும். உதாரணமாக கோபம், சிரிப்பு, அழுகை போன்ற செய்தியின் தன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தும் போது பொருத்தமாக இருக்கும். ஆனால் இவைகளைச் சேர்க்க டுவிட்டர் அனுமதிப்பதில்லை.

இதற்கு Twitter Symbols என்ற இணையதளம் உதவுகிறது. இதில் பல்வேறான தலைப்புகளில் பல குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் டுவிட்டரில் பிடித்த குறியீடுகளுடன் சேர்த்து செய்திகளைப் பகிர முடியும். இந்த இணையதளத்திற்கு சென்று Connect with Twitter என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் டுவிட்டர் பெயர், கடவுச்சொல் கொடுத்து இணைந்து கொள்ளவும்.
twitter+with+smileysஇப்போது செய்தியை அடித்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த குறியீடுகளைக் கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம். எத்தனை குறியீடுகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் Send பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள் டுவிட்டர் பக்கத்தில் செய்தியானது குறியீடுகளுடன் பகிரப்படும்.
twitter+with+symbolsஇணையதளம் : http://www.simbolostwitter.com/p/english.html

மற்றொரு முறை :
Twitterkeys என்கிற புக்மார்க் சேவையின் மூலமும் டுவிட்டரில் குறியீடுகளைச் சேர்க்கலாம். ஆனால் மேற்குறிப்பிட்ட சேவையை விட இதில் குறியீடுகள் குறைவு தான். சிலருக்கு இந்த முறை கூட எளிதாக இருக்கலாம். கீழே இருக்கும் சுட்டியைக் கிளிக் செய்து உங்கள் வலை உலவியின் புக்மார்க் பாரில் (Bookmark bar) சேர்த்துக் கொள்ளவும். இதனைக் கிளிக் செய்து அப்படியே மவுசால் இழுத்துக் கொண்டு போய் புக்மார்க் பாரில் கொண்டு போய் விட்டால் போதும் இணைந்து விடும். (Drag and drop method)
Twitterkeys
twitterkeysபின்னர் டுவிட்டரில் இருக்கும் போது இந்த புக்மார்க்கை கிளிக் செய்தால் ஒரு Popup Menu ஆகத் தோன்றும். அதில் தேவைப்பட்ட குறியீடை டபுள் கிளிக் செய்து காப்பி செய்து டுவிட்டர் செய்திப் பெட்டியில் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

8 comments:

  1. 1077
  2. DSC00126

    இனி ஸிம்பல்சோட கலக்குவோம்

    ReplyDelete
  3. 1395826_492260717554151_69718194_n

    நல்ல தகவல்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    ட்விட்டரைப் பற்றியான பயனுள்ள பகிர்வு நன்றியுடன் பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. .com/img/b/R29vZ2xl/AVvXsEjRAenVNjWYN7t1z3VKptGQrS1P1CcFBlSWf-QKr6OWz8-t2hCyLpQZSMk5Dv9PkWKgi66j6ac6VVA7jstDpbRpd-H5EOPx5Ld4nCPXAsEgKckYNC6YCHrX0-xM69Q1tsA/s45-c/
  6. Education_cap

    புதிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  7. logomass%252Bgoo

    தகவலுக்கு நன்றி பாவித்துப்பார்த்திடுறேன்

    ReplyDelete
  8. -H

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete