Aug 23, 2011

ஹைடெக் முதல்வர்


அரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க முடியும்.

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்ற உம்மன் சாண்டி ஜுலை மாதம் 1 ந்தேதி முதல் அவரின் அலுவலக நடவடிக்கைகள் அனைத்தையும் இணையத்தில் 24 மணி நேரமும் நேரடியாக காணும் வகையில் 'லைவ் வெப்காஸ்ட்' (Live webcast) வசதியைத் தொடக்கி வைத்தார். நாட்டிலேயே முதன் முறையாக 2004 ஆம் ஆண்டு இந்த வசதியைக் கொண்டு வந்த பெருமை அவருக்கே. பிறகு ஆட்சி மாற்றத்தின் காரணமாக செயல்படாமல் இருந்ததை மறுபடியும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த இணையதளம் மூலம் முதல்வருக்கு மக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வர் உம்மன் சாண்டியின் Facebook,Youtube வீடியோ பக்கங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளன. முதல்வரின் செய்தி அறிக்கைகளையும் ஊடகங்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். முதல்வர் தொடர்பான செய்திகளையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
(Cheif Minister Room Live )
இங்கே முதல்வரின் செய்தியாளர் கூட்டம், அமைச்சரவை நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவையும் நேரலையாக வெப்காஸ்ட் மூலம் பார்க்கலாம். எனினும், இந்தக் கூட்டங்களில் ஆடியோவை கேட்க முடியாது.
(Chief Minister's Office Live)
இதைப் பற்றி முதல்வர் "இந்த வெப்காஸ்ட், அரசின் கொள்கைகளில் ஒன்று. இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்' என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.

இணையதளம் : http://keralacm.gov.in/

13 comments:

  1. இணையம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத பல அரசியல்வாதிகளின் நடுவே....!!!!!!!!!

    ReplyDelete
  2. நம் முதல்வரும் இப்படி! மாறினால்..சூப்பரா இருகும்ல

    ReplyDelete
  3. Why not other CM's follow this??

    ReplyDelete
  4. Why other CM's not followin this stuff?

    ReplyDelete
  5. இதுபோன்று எல்லா முதல்வர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே.

    எளிமைக்கு இலக்கணம் உம்மன்சாண்டி.

    ReplyDelete
  6. நல்ல தகவல் மலர்..

    ReplyDelete
  7. இராஜஸ்தான் முதல்வர் தன் மாநில தலைமைச் செயலர் மற்றும் பிற ஆறு உதவி செயலர்களுக்கும் ஐ-பேட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கிய தகவல்களை ஐ-க்ளவுட் (இணைய சேமிப்பு சேவை)ல் ஏற்றி வைத்து கலக்குகிறார்களாம்.

    ReplyDelete
  8. Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing

    enakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks


    Sutha

    ReplyDelete