Aug 27, 2011

Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற


music+lyricsகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

1. Lyrics for Firefox

யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பாக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பாக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/lyrics/
youtube+video+lyrics+firefoxபின்னர் யுடியூபில் வீடியோ பார்க்கும் போது அதன் அருகிலேயே சைட்பாரில் Lyrics என்ற இடத்தில் பாடல்வரிகளைக் காண்பிக்கும்.
மின்னலே வசிகரா பாடல்- http://www.youtube.com/watch?v=e_TZaqqnyJg

2.Chrome - Music video lyrics for Youtube

நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பாக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்க வில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும். Download Music video lyrics for youtube
youtube+video+with+lyricsபிறகு குரோம் உலவியில் யுடியூபில் எதேனும் வீடியோ பார்க்கும் போது அதற்குப் பொருத்தமான பாடல் வரிகள் இருந்தால் உலவியின் மேல்பகுதியில் அட்ரஸ்பாரில் இருக்கும் ஐகான் Lyrics என்று காட்டும். அதைக் கிளிக் செய்தால் பாடல் வரிகள் காட்டப்படும்.
youtube+video+lyrics+chromeநிறுவிய பின்னர் உதாரணத்திற்கு இந்த வீடியோவை மாதிரிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.youtube.com/watch?v=weRHyjj34ZE&feature=relmfu

8 comments:

  1. saravanan%252Bside%252Blook
  2. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    இசைப் பாடல்கள் கேட்க்கும் போது.. நான் கூடவே அதன் லிரிக்ஸ் முனுமுனுப்பதுண்டு... சில நேரம் லிரிக்ஸ் வரிகள் மறந்துவிடும் என்பதால் சும்மா கூடவே ஹம்மிங் மட்டும் முனுமுனுப்பதுண்டு.... இனி அந்த பிரச்சனை இல்லை... பாடல் வரிகளை பார்த்துக்கொண்டே இசையை ரசிக்கலாம்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. Earth+is+our+child

    இப்படியெல்லாம் கூட இருக்கிறதா .....

    ReplyDelete
  5. 268790_234058363290756_100000597826814_886739_1226303_n

    இப்படியெல்லாம் இருக்குதா ,ஆச்சர்யம் தான் .
    &&&&&&&&&&&&&&

    Navigation மெனு வை கலராக கொண்டு வருவது எப்படி ?

    thank you

    ReplyDelete
  6. alagu

    பகிர்வுக்கு மிக்க நன்றி பொன்மலர்.

    ReplyDelete
  7. alagu

    தொடர்ந்து பயனுள்ள சிறந்த பதிவுகளையே கொடுத்து வரும் உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..! தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  8. PDVD_004

    ungalthu sevai thodaratum mam. songs varikalai parpathu pola, video-il pesum english varthaikalaiyum vara vaikalama mam. because sila project samanthamana videoai parkum poluthu avarkal speed aha pesukindranar. kadaisi varai ondrum puriyamal irupathuthan micham.

    ReplyDelete